திருச்சி, ஜன.11 பெல் திராவிடர் தொழிலாளர் கழகம் சார்பில் பெரியார் நினைவு நாள் கருத்தரங்கம், பொங்கல் விழா பெல் சமுதாயக் கூடத்தில் 6.1.2019 அன்று காலை 10 மணியளவில் நடை பெற்றது.
இவ்விழாவிற்கு தி.தொ.க. பொதுச் செயாளர் அசோக் குமார் வரவேற்புரை யாற்றினார். பெல் தி.தொ.க. தலைவர் செ.பா.செல்வம் தலைமை வகித்தார். மண்டல தலைவர் மு.நற்குணம், மாவட்ட தலைவர் ஞா.ஆரோக்கியராஜ், மாவட்ட செயலாளர் இரா.மோகன்தாஸ், ஒன்றிய தலைவர் வ.மாரியப்பன், ஒன்றிய செயலாளர் இரா.தமிழ்ச்சுடர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பெல் தி.தொ.க. சிறப்புத் தலைவர் ம.ஆறுமுகம் தொடக்க உரையாற்றினார்.
தந்தை பெரியார் நினைவு நாளை முன்னிட்டு பெல் வளாகத்தில் பள்ளிக் குழந்தைகளுக்கு பேச்சு, கட்டுரை, கவிதைப் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் ஏராளமான குழந்தைகள் கலந்து கொண்டனர். குறிப்பாக பிஞ்சுகள் ம.யாழினி, இந்து நிஷா, இரா.யாழினி சிறப்பாக பேசினர்.
போட்டிகளில் வெற்றி பெற்ற அனைத்துக் குழந்தைகளுக்கும் தந்தை பெரியார் உருவம் பொறித்த நினைவுப் பரிசுகளும், புத்தகங்களும், சான்றிதழ்களும் வழங்கி பாராட்டி திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் பேசும் போது, பேச்சுப் போட்டியில் வென்ற சில குழந்தைகள் கைகளில் கயிறு கட்டியிருந்தனர். அந்த கயிற்றில் அழுக்கு சேரும். அதில் உருவாகும் கிருமிகள் உடல் நலத்திற்கு தீங்கு தரும். எனவே இதுபோன்ற மூடத்தனமான காரியங்களை தவிர்க்க வேண்டுமென்று கூறினார்.
இக்கருத்தரங்கிற்கு பிள்ளைகளை அனுப்பி வைத்த பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கும் பரிசு வழங்கப்பட்டன. மேலும் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தனது சொந்த பணத்திலிருந்து ரூபாய் ஒன்றேகால் இலட்சம் வழங்கிய தி.தொ.க உறுப்பினர் சிவபெருமாளுக்கும், ஏராளமான பொருட்களை வசூலித்து நிதி உதவி அளித்த சிகரம் நண்பர்கள் குழுவினருக்கும் தொண்டறச் செம்மல் விருதும், நினைவுப் பரிசும் வழங்கப் பட்டன.
போட்டி நடத்துவதற்கு இடம் கொடுத்து உதவிய பெல். தொ.மு.ச. பொறுப்பாளர் சரவணனுக்கு சால்வை அணிவித்து சிறப்பிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் தாமஸ், சங்கிலிமுத்து, காட்டூர் சங்கிலிமுத்து, கனகராஜ், கல் பாக்கம் ராமச்சந்திரன், வி.சி.வில்வம், மணிவண்ணன், சுரேஷ் மற்றும் தி.தொ.க ஆண்டிராஜ், அசோக்ராஜ், சுப்ரமணியன், பஞ்சலிங்கம், பாரதி, திலீப், அருண்குமார், மகளிர் பாசறை அம்பிகா, திருமதி சுரேஷ், திருமதி அசோக்குமார் உள்பட ஏராளமா னோர் கலந்து கொண்டனர்.
- விடுதலை நாளேடு, 11.1.19
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக