வியாழன், 28 அக்டோபர், 2021

பெல் நிறுவனத்தில் ஒப்பந்த தொழிலாளர்கள் பணி நிரந்தரம் செய்யப்பட நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மக்களவை உறுப்பினரிடம் மனு

 

August 10, 2021 • Viduthalai

திருப்பூர்ஆகஸ்ட் 10 - திருச்சி மாவட் டம்,திறுவெறும்பூர் அருகே இந்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும்  பெல் நிறுவனத்தில் கடந்த 40 ஆண்டுகளாக பணியாற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் 850 க்கும் மேற்பட் டோர் பணி நிரந்தரம் செய்யப்பட டவடிக்கை எடுக்க வலியுறுத்தி திருப் பூர் மக்களவை உறுப்பினரும்,இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு துணை செயலாளருமான கே.சுப்பரா யன் அவர்களிடம் திருச்சி,பெல் வளாக ஒப்பந்த தொழிலாளர் நலச்சங்கத்தினர் 8.8.2021 அன்று திருப்பூரில் மனு அளித்துள்ளனர்.

அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ள தாவது ; திருவெறும்பூர் அருகில் செயல் பட்டு வரும் பெல் நிறுவனத்தில் 1978 ஆம் ஆண்டு பெல் நிர்வாகத்தால் துவங் கப்பட்ட "பெல் லேபர் காண்ட்ராக்ட் சொசைட்டி"  மூலம் கடந்த 40 ஆண்டு களாக பெல் நிறுவனத்தில் நிரந்தர பணியாளர்களுக்கு இணையாக ஒப் பந்த தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.பெல் நிர்வாகம் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு எவ்வித சலுகை யும் வழங்கவில்லை,தொழிற்சங்கங்க ளின் தொடர் நடவடிக்கைகளால் ஒரு சி சலுகைகள்  தொழிலாளர்களுக்கு கிட்டியுள்ளதுபெல் நிர்வாகம் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்காமல் குறைந்த பட்ச ஊதியத் தையே தொடர்ந்து வழங்கி வருகிறது.இது குறித்து கடந்த 26.10.2020 அன்று பெல் நிர்வாகத்திற்கு கடிதம் கொடுத் தோம்.அது தொடர்பாக எந்த நட வடிக்கையும் மேற்கொள்ளப்பட வில்லை.இதைத் தொடர்ந்துஇந்திய தொழிலாளர் நல அமைச்சர் மற்றும் தொழிலாளர் நல ஆணையர் ஆகி யோருக்கு மனு கொடுத்தோம்.அந்த மனுக்கள் தொடர்பாக பெல் நிர்வா கத்திற்கு இந்திய தொழிலாளர் நல அமைச்சகம் வாயிலாக கடிதம் வரப் பெற்றுள்ளது.

ஒப்பந்த தொழிலாளர்களை நிரந் தர படுத்தாமலும்,ஊதிய உயர்வு வழங் காமலும் பெல் நிர்வாகம் வஞ்சித்து வருவதால் தற்போது 850 க்கும் மேற் பட்ட தொழிலாளர்கள் வாழ்வாதாரம் குன்றிய நிலையில் உள்ளனர்.ஒப்பந்த தொழிலாளர்களுக்கு கடந் 6 மாதத் திற்கு மேலாக .எஸ்.ய் மருத்து வமனை மூலம் மருத்துவம் பார்க்கும் வசதியும் மறுக்கப்பட்டுள்ளது.அதற்கு இந்திய அரசை பெல் நிர்வாகம் கார ணம் காட்டி வருகிறது.இந்திய அரசின் கட்டுப்பாட்டிலுள்ள பொதுத்துறை நிறுவனமான பெல் நிறுவனத்தில் தொடர்ந்து வரும் தொழிலாளர் விரோ ப்போக்கை முறியடித்து,ஒப்பந்த தொழிலாளர்கள் பணி நிரந்தரம் செய்யப்படவும்,அவர்களுக்கான சலுகைகள் தொடர்ந்து கிடைக்கவும் தாங்கள் தலையிட்டு ஆவன செய்யு மாறு கேட்டுக் கொள்கிறோம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

நிகழ்வில்திருச்சி பெல் வளாக ஒப்பந்த தொழிலாளர் நலச்சங்கத்தின் தலைவர் வி.சண்முகம்செயலாளர் முசேகர்துணை செயலாளர் .துரையப் பன்இணை செயலாளர் சு.நாதன்தாராபுரம் கழக மாவட்ட திராவிடர் கழக செயலாளர் .சண்முகம் மற்றும் சங்க உறுப்பினர்கள் ஆரோக்கிய சாமிஅந்தோணி தாஸ் கியோர் பங்கேற்று மனு அளித்தனர்.

மனுவை பெற்றுக்கொண்ட திருப் பூர் மக்களவை உறுப்பினர் தெரிவித் தாவது:

எந்த நிறுவனமாக இருந்தாலும் நீண்ட காலமாக பணியாற்றி வரும் தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்யாமலும்தொழிலாளர்களுக்குரிய லுகைகளை வழங்காமலும் இருப்பது ச்சநீதி மன்ற தீர்ப்புக்கு எதிரானதுஇந்த கோரிக்கை தொடர்பாக விரி வான அறிக்கை தயார் செய்து, இம்மாத இறுதியில் டெல்லி சென்று .அய்டி.யு.சி.இன் அகில இந்திய பொதுச் செயலாளரை கலந்து கொண்டு,துறை சார்ந்த மத்திய அமைச்சர்,பெல் நிறு வன சேர்மன் ஆகியோரை சந்தித்து வெகு விரைவில் அணுக்கமான தீர்வு காணப்படும் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக