பெல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பெல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 28 அக்டோபர், 2021

பெல் நிறுவனத்தில் ஒப்பந்த தொழிலாளர்கள் பணி நிரந்தரம் செய்யப்பட நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மக்களவை உறுப்பினரிடம் மனு

 

August 10, 2021 • Viduthalai

திருப்பூர், ஆகஸ்ட் 10 - திருச்சி மாவட் டம்,திறுவெறும்பூர் அருகே இந்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும்  பெல் நிறுவனத்தில் கடந்த 40 ஆண்டுகளாக பணியாற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் 850 க்கும் மேற்பட் டோர் பணி நிரந்தரம் செய்யப்பட நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திருப் பூர் மக்களவை உறுப்பினரும்,இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு துணை செயலாளருமான கே.சுப்பரா யன் அவர்களிடம் திருச்சி,பெல் வளாக ஒப்பந்த தொழிலாளர் நலச்சங்கத்தினர் 8.8.2021 அன்று திருப்பூரில் மனு அளித்துள்ளனர்.

அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ள தாவது ; திருவெறும்பூர் அருகில் செயல் பட்டு வரும் பெல் நிறுவனத்தில் 1978 ஆம் ஆண்டு பெல் நிர்வாகத்தால் துவங் கப்பட்ட "பெல் லேபர் காண்ட்ராக்ட் சொசைட்டி"  மூலம் கடந்த 40 ஆண்டு களாக பெல் நிறுவனத்தில் நிரந்தர பணியாளர்களுக்கு இணையாக ஒப் பந்த தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.பெல் நிர்வாகம் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு எவ்வித சலுகை யும் வழங்கவில்லை,தொழிற்சங்கங்க ளின் தொடர் நடவடிக்கைகளால் ஒரு சில சலுகைகள்  தொழிலாளர்களுக்கு கிட்டியுள்ளது. பெல் நிர்வாகம் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்காமல் குறைந்த பட்ச ஊதியத் தையே தொடர்ந்து வழங்கி வருகிறது.இது குறித்து கடந்த 26.10.2020 அன்று பெல் நிர்வாகத்திற்கு கடிதம் கொடுத் தோம்.அது தொடர்பாக எந்த நட வடிக்கையும் மேற்கொள்ளப்பட வில்லை.இதைத் தொடர்ந்து, இந்திய தொழிலாளர் நல அமைச்சர் மற்றும் தொழிலாளர் நல ஆணையர் ஆகி யோருக்கு மனு கொடுத்தோம்.அந்த மனுக்கள் தொடர்பாக பெல் நிர்வா கத்திற்கு இந்திய தொழிலாளர் நல அமைச்சகம் வாயிலாக கடிதம் வரப் பெற்றுள்ளது.

ஒப்பந்த தொழிலாளர்களை நிரந் தர படுத்தாமலும்,ஊதிய உயர்வு வழங் காமலும் பெல் நிர்வாகம் வஞ்சித்து வருவதால் தற்போது 850 க்கும் மேற் பட்ட தொழிலாளர்கள் வாழ்வாதாரம் குன்றிய நிலையில் உள்ளனர்.ஒப்பந்த தொழிலாளர்களுக்கு கடந்த 6 மாதத் திற்கு மேலாக இ.எஸ்.அய் மருத்து வமனை மூலம் மருத்துவம் பார்க்கும் வசதியும் மறுக்கப்பட்டுள்ளது.அதற்கு இந்திய அரசை பெல் நிர்வாகம் கார ணம் காட்டி வருகிறது.இந்திய அரசின் கட்டுப்பாட்டிலுள்ள பொதுத்துறை நிறுவனமான பெல் நிறுவனத்தில் தொடர்ந்து வரும் தொழிலாளர் விரோ தப்போக்கை முறியடித்து,ஒப்பந்த தொழிலாளர்கள் பணி நிரந்தரம் செய்யப்படவும்,அவர்களுக்கான சலுகைகள் தொடர்ந்து கிடைக்கவும் தாங்கள் தலையிட்டு ஆவன செய்யு மாறு கேட்டுக் கொள்கிறோம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

நிகழ்வில், திருச்சி பெல் வளாக ஒப்பந்த தொழிலாளர் நலச்சங்கத்தின் தலைவர் வி.சண்முகம், செயலாளர் மு. சேகர், துணை செயலாளர் க.துரையப் பன், இணை செயலாளர் சு.நாதன், தாராபுரம் கழக மாவட்ட திராவிடர் கழக செயலாளர் க.சண்முகம் மற்றும் சங்க உறுப்பினர்கள் ஆரோக்கிய சாமி, அந்தோணி தாஸ் ஆகியோர் பங்கேற்று மனு அளித்தனர்.

மனுவை பெற்றுக்கொண்ட திருப் பூர் மக்களவை உறுப்பினர் தெரிவித்த தாவது:

எந்த நிறுவனமாக இருந்தாலும் நீண்ட காலமாக பணியாற்றி வரும் தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்யாமலும், தொழிலாளர்களுக்குரிய சலுகைகளை வழங்காமலும் இருப்பது உச்சநீதி மன்ற தீர்ப்புக்கு எதிரானது. இந்த கோரிக்கை தொடர்பாக விரி வான அறிக்கை தயார் செய்து, இம்மாத இறுதியில் டெல்லி சென்று ஏ.அய். டி.யு.சி.இன் அகில இந்திய பொதுச் செயலாளரை கலந்து கொண்டு,துறை சார்ந்த மத்திய அமைச்சர்,பெல் நிறு வன சேர்மன் ஆகியோரை சந்தித்து வெகு விரைவில் அணுக்கமான தீர்வு காணப்படும் என்றார்.

வெள்ளி, 11 ஜனவரி, 2019

பெல் திராவிடர் தொழிலாளர் கழகம் நடத்திய பெரியார் நினைவு நாள் கருத்தரங்கம், பொங்கல் விழா

திருச்சி, ஜன.11  பெல் திராவிடர் தொழிலாளர் கழகம் சார்பில் பெரியார் நினைவு நாள் கருத்தரங்கம், பொங்கல் விழா பெல் சமுதாயக் கூடத்தில் 6.1.2019 அன்று காலை 10 மணியளவில் நடை பெற்றது.
இவ்விழாவிற்கு தி.தொ.க. பொதுச் செயாளர் அசோக் குமார் வரவேற்புரை யாற்றினார். பெல் தி.தொ.க. தலைவர் செ.பா.செல்வம் தலைமை வகித்தார். மண்டல தலைவர் மு.நற்குணம், மாவட்ட தலைவர் ஞா.ஆரோக்கியராஜ், மாவட்ட செயலாளர் இரா.மோகன்தாஸ், ஒன்றிய தலைவர் வ.மாரியப்பன், ஒன்றிய செயலாளர் இரா.தமிழ்ச்சுடர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பெல்  தி.தொ.க. சிறப்புத் தலைவர் ம.ஆறுமுகம் தொடக்க உரையாற்றினார்.
தந்தை பெரியார் நினைவு நாளை முன்னிட்டு பெல் வளாகத்தில் பள்ளிக் குழந்தைகளுக்கு பேச்சு, கட்டுரை, கவிதைப் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் ஏராளமான குழந்தைகள் கலந்து கொண்டனர். குறிப்பாக பிஞ்சுகள் ம.யாழினி, இந்து நிஷா, இரா.யாழினி சிறப்பாக பேசினர்.
போட்டிகளில் வெற்றி பெற்ற அனைத்துக் குழந்தைகளுக்கும் தந்தை பெரியார் உருவம் பொறித்த நினைவுப் பரிசுகளும், புத்தகங்களும், சான்றிதழ்களும் வழங்கி   பாராட்டி திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் பேசும் போது, பேச்சுப் போட்டியில் வென்ற சில குழந்தைகள்  கைகளில்  கயிறு கட்டியிருந்தனர். அந்த கயிற்றில் அழுக்கு சேரும். அதில் உருவாகும் கிருமிகள் உடல் நலத்திற்கு தீங்கு தரும்.  எனவே இதுபோன்ற மூடத்தனமான காரியங்களை தவிர்க்க வேண்டுமென்று கூறினார்.
இக்கருத்தரங்கிற்கு பிள்ளைகளை அனுப்பி வைத்த பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கும் பரிசு வழங்கப்பட்டன. மேலும் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தனது சொந்த பணத்திலிருந்து ரூபாய் ஒன்றேகால் இலட்சம் வழங்கிய தி.தொ.க உறுப்பினர் சிவபெருமாளுக்கும், ஏராளமான பொருட்களை வசூலித்து நிதி உதவி அளித்த சிகரம் நண்பர்கள் குழுவினருக்கும் தொண்டறச் செம்மல் விருதும், நினைவுப் பரிசும் வழங்கப் பட்டன.
போட்டி நடத்துவதற்கு இடம் கொடுத்து உதவிய பெல். தொ.மு.ச. பொறுப்பாளர் சரவணனுக்கு சால்வை அணிவித்து சிறப்பிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் தாமஸ், சங்கிலிமுத்து, காட்டூர் சங்கிலிமுத்து, கனகராஜ், கல் பாக்கம் ராமச்சந்திரன், வி.சி.வில்வம், மணிவண்ணன், சுரேஷ் மற்றும் தி.தொ.க ஆண்டிராஜ், அசோக்ராஜ், சுப்ரமணியன், பஞ்சலிங்கம், பாரதி, திலீப், அருண்குமார், மகளிர் பாசறை அம்பிகா, திருமதி சுரேஷ், திருமதி அசோக்குமார் உள்பட ஏராளமா னோர் கலந்து கொண்டனர்.
- விடுதலை நாளேடு, 11.1.19