July 29, 2021 • Viduthalai
சென்னை, ஜூலை 29- தமிழர் தலைவர் அவர்களின் வழிகாட்டுதலின்படி 27.7.2021 அன்று திராவிடர் தொழிலாளர் கழகப் பேரவையின் பொறுப்பாளர்கள் பேரவைத் தலைவர் அ.மோகன், பொதுச்செயலாளர் மு.சேகர், பொருளாளர் மா.இராசு, மதுரை சிவகுருநாதன், இராமசாமி.முத்துக்கருப்பன், மகேஷ், விழுப்புரம் கோபன்னா, சக்ரவர்த்தி, மடத்துக்குளம் சிவக்குமார் ஆகியோர் தலைமைச் செயலகத்தில் போக்குவரத்துத்துறை அமைச் சர் இராஜகண்ணப்பன், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசன், நகர்ப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சர் கே.என்.நேரு ஆகிய அமைச் சர்களை சந்தித்து ஆசிரியர் எழுதிய ‘பெரியார் வெறும் சிலையல்ல' என்ற புத்தகங்கள் வழங்கப்பட்டு கோரிக்கை மனுக்களும் கொடுக்கப்பட்டன.
அனைத்து அமைச்சர் களும் ஆசிரியர் அவர்களது நலம் விசாரித்ததோடு உங்கள் கோரிக்கை அனைத்தும் நிறைவேற்றப்படும் என்ற வாக்குறுதியும் அளித்தார்கள். அதன்பின் கட்டுமான வாரியத் தலைவர் பொன்குமார் அவர்களையும் சந்தித்து கோரிக்கை விண்ணப்பம் வழங்கப் பட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக