வெள்ளி, 11 ஜனவரி, 2019

மணிவிழா மற்றும் பணிநிறைவு பாராட்டு விழா


கம்மாபுரம் ஒன்றிய கழகத் தலைவர் நா.பாவேந்தர் விரும்பி அவர்களின் பணி நிறைவு பாராட்டு விழாவும், நா.பாவேந்தர் விரும்பி & விஜயலட்சுமி இணையரின் மணிவிழா நேற்று (10.1.2019) நடைபெற்றது. இவ்விழாவில் தமிழர் தலைவர் பங்கேற்று இணையருக்கு பயனாடை அணிவித்து வாழ்த்து கூறினார். உடன்: செயலவைத் தலைவர் சு. அறிவுக்கரசு, தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள்: சபா. இராசேந்திரன், சி.வெ. கணேசன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் குழந்தைவேலு, ம.தி.மு.க. மு. செந்திலதிபன், ம.தி.மு.க. அமைப்புச் செயலாளர் வந்தியத்தேவன், தொ.மு.ச. ச.சுகுமார், கழகப் பொதுச் செயலாளர்கள்: முனைவர் துரை. சந்திரசேகரன், இரா.ஜெயக்குமார், தஞ்சை மண்டல தலைவர் நெய்வேலி ஜெயராமன், கடலூர் மண்டல தலைவர் அரங்க. பன்னீர்செல்வம், நெய்வேலி ஞானசேகரன், பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்தில் தங்கப் பதக்கம் பெற்று, பெங்களூரில் பணியாற்றும் மாணவி தமிழ்பொன்னி மற்றும் முக்கியப் பிரமுகர்கள் உள்ளனர். (நெய்வேலி)
- விடுதலை நாளேடு, 11.1.19

பெல் திராவிடர் தொழிலாளர் கழகம் நடத்திய பெரியார் நினைவு நாள் கருத்தரங்கம், பொங்கல் விழா

திருச்சி, ஜன.11  பெல் திராவிடர் தொழிலாளர் கழகம் சார்பில் பெரியார் நினைவு நாள் கருத்தரங்கம், பொங்கல் விழா பெல் சமுதாயக் கூடத்தில் 6.1.2019 அன்று காலை 10 மணியளவில் நடை பெற்றது.
இவ்விழாவிற்கு தி.தொ.க. பொதுச் செயாளர் அசோக் குமார் வரவேற்புரை யாற்றினார். பெல் தி.தொ.க. தலைவர் செ.பா.செல்வம் தலைமை வகித்தார். மண்டல தலைவர் மு.நற்குணம், மாவட்ட தலைவர் ஞா.ஆரோக்கியராஜ், மாவட்ட செயலாளர் இரா.மோகன்தாஸ், ஒன்றிய தலைவர் வ.மாரியப்பன், ஒன்றிய செயலாளர் இரா.தமிழ்ச்சுடர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பெல்  தி.தொ.க. சிறப்புத் தலைவர் ம.ஆறுமுகம் தொடக்க உரையாற்றினார்.
தந்தை பெரியார் நினைவு நாளை முன்னிட்டு பெல் வளாகத்தில் பள்ளிக் குழந்தைகளுக்கு பேச்சு, கட்டுரை, கவிதைப் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் ஏராளமான குழந்தைகள் கலந்து கொண்டனர். குறிப்பாக பிஞ்சுகள் ம.யாழினி, இந்து நிஷா, இரா.யாழினி சிறப்பாக பேசினர்.
போட்டிகளில் வெற்றி பெற்ற அனைத்துக் குழந்தைகளுக்கும் தந்தை பெரியார் உருவம் பொறித்த நினைவுப் பரிசுகளும், புத்தகங்களும், சான்றிதழ்களும் வழங்கி   பாராட்டி திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் பேசும் போது, பேச்சுப் போட்டியில் வென்ற சில குழந்தைகள்  கைகளில்  கயிறு கட்டியிருந்தனர். அந்த கயிற்றில் அழுக்கு சேரும். அதில் உருவாகும் கிருமிகள் உடல் நலத்திற்கு தீங்கு தரும்.  எனவே இதுபோன்ற மூடத்தனமான காரியங்களை தவிர்க்க வேண்டுமென்று கூறினார்.
இக்கருத்தரங்கிற்கு பிள்ளைகளை அனுப்பி வைத்த பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கும் பரிசு வழங்கப்பட்டன. மேலும் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தனது சொந்த பணத்திலிருந்து ரூபாய் ஒன்றேகால் இலட்சம் வழங்கிய தி.தொ.க உறுப்பினர் சிவபெருமாளுக்கும், ஏராளமான பொருட்களை வசூலித்து நிதி உதவி அளித்த சிகரம் நண்பர்கள் குழுவினருக்கும் தொண்டறச் செம்மல் விருதும், நினைவுப் பரிசும் வழங்கப் பட்டன.
போட்டி நடத்துவதற்கு இடம் கொடுத்து உதவிய பெல். தொ.மு.ச. பொறுப்பாளர் சரவணனுக்கு சால்வை அணிவித்து சிறப்பிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் தாமஸ், சங்கிலிமுத்து, காட்டூர் சங்கிலிமுத்து, கனகராஜ், கல் பாக்கம் ராமச்சந்திரன், வி.சி.வில்வம், மணிவண்ணன், சுரேஷ் மற்றும் தி.தொ.க ஆண்டிராஜ், அசோக்ராஜ், சுப்ரமணியன், பஞ்சலிங்கம், பாரதி, திலீப், அருண்குமார், மகளிர் பாசறை அம்பிகா, திருமதி சுரேஷ், திருமதி அசோக்குமார் உள்பட ஏராளமா னோர் கலந்து கொண்டனர்.
- விடுதலை நாளேடு, 11.1.19

வியாழன், 10 ஜனவரி, 2019

திருவெறும்பூரில் திராவிடர் தொழிலாளர் கழக பேரவைக் கூட்டம்

திருச்சி, ஜன.9 மாநில திராவிடர் தொழிலாளர் அணி பேரவை கலந்துரை யாடல் கூட்டம் திருச்சி, திருவெறும் பூரிலுள்ள பெரியார் படிப்பகத்தில் நேற்று (ஜன.6) மதியம் 3 மணியளவில் நடை பெற்றது.
இக்கலந்துரையாடல் கூட்டத்திற்கு  எல்.சி.எஸ் தலைவர் சண்முகம்வரவேற் புரை யாற்றினார். திராவிடர் கழக பொதுச் செயலாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார், மண்டல தலைவர் மு.நற்குணம், மாவட்ட தலைவர் ஞா.ஆரோக்கியராஜ் , மாவட்ட செயலாளர் இரா.மோகன்தாஸ் ஒன்றிய தலைவர் வ.மாரியப்பன்,   நகர தலைவ சுரேஷ், நகர செயலாளர் இளங்கோவன், பெல் தி.தொ.க. தலைவர் செ.பா.செல்வம், தி.தொ.க. செயலாளர் ஆ.அசோக் குமார்  ஆகியோர் முன்னிலை வகித்து பேசினார்கள்.
இக்கலந்துரையாடல் கூட்டத்திற்கு தலைமை வகித்து திராவிடர் கழக துணைத் தலைவர் கவிஞர்.கலி.பூங்குன்றன் உரை யாற்றும் போது, நீண்ட நாட்களுக்குப்பிறகு இப்பேரவை இக்கூட்டம் மிகச் சிறப்பாக நடைபெறுவதால் மகிழ்ச்சி அளிப்பதாக குறிப்பிட்டார். தொடர்ந்து திராவிடர் கழக பொதுச் செயலாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார், மாநில தொழிலாளரணி செயலாளர் மு.சேகர், திராவிடர் தொழிலாளர் கழக பேரவை மாநில தலைவர் அ.மோகன், மாநில விவசாய அணி செயலாளர் ராயபுரம் கோபால்  உள்ளிட்ட நிர்வாகிகள் உரையாற்றினார்கள். மேலும் இக்கலந்துரையாடல் கூட் டத்தில், தந்தை பெரியாரின் தனிச் செயலாளராக இருந்து அரும்பணியாற்றிய பெரியார் பெருந்தொண்டர் திருச்சி தி.மகாலிங்கம் மறைவிற்கு இக்கலந் துரையாடல் கூட்டம் வீர வணக்கத்தையும், இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறது.
தமிழ்நாடு அரசு அனைத்து போக்கு வரத்து கழகங்களிலும் திருவள்ளுவர் படத்துடன் கூடிய திருக்குறள் எழுதப் பட்டுள்ள பலகையை மீண்டும் வைக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பேரவை புதிய பொறுப்பாளர்கள்
திண்டுக்கல் மண்டல போக்குவரத்து கழகம் தலைவர் ச.அங்கப்பன், துணைத் தலைவர் எஸ்.பங்கிராஜ், பொதுச் செயலாளர் மு.செல்வம், துணை பொதுச் செயலாளர் தங்கவேல், பொருளாளர் டி.ராஜேந்திரன், துணை செயலாளர்கள் எஸ்.ஜோசப் ஜேம்ஸ்ராஜ், பி.தங்கம்,
மதுரை மண்டலம்
தலைவர் சின்னதம்பி, துணைத் தலைவர் மு.சண்முகசுந்தரம், பொதுச் செயலாளர் ச.மகேஷ், துணைப் பொதுச் செயலாளர் பா.முத்துக்கருப்பன், பொருளாளர் கு.ராமசாமி.
குடந்தை மண்டலம்
தலைவர் கு.கவுதமன், துணைத் தலைவர் இரா.ரவிச்சந்தின், பொதுச் செயலாளர் க.குருசாமி, துணை பொதுச் செயலாளர் தன.சஞ்சீவி, பொருளாளர் மா.வீரமணி, துணை செயலாளர் சுப்ரமணியன்.
பேரவை செயலாளர்கள்
சிவா (எ) சிவகுருநாதன் (மதுரை), குருசாமி (கும்பகோணம்) ஆகியோர் பேரவை பொறுப்பாளர்களாக நியமிக்கப் பட்டனர்.
கலந்து கொண்டோர்
பெல்.ம.ஆறுமுகம், மாநகர தலைவர் மருதை, கல்பாக்கம் ராமச்சந்திரன், விடுதலை கிருஷ்ணன், காட்டூர் சங்கிலி முத்து,காமராஜ், ராஜேந்திரன், ஆண்டிராஜ், எல்.சி.எஸ், சிங்கராஜ், நாதன், பன்னீர் செல்வம், துரையப்பன், தாமஸ், திரு வரங்கம் நகர செயலாளர் முருகன், மாநகர அமைப்பாளர் கனகராஜ், தங்க வேல், ஆட்டோ செல்வம்,திருஞானம், சேவியர், ரங்கராஜ், சந்துரு, குடந்தை ராணி குருசாமி, அற்புதம், கவிதா, இளஞ்செழியன், ஆரோக்கியதாசு உள்ளிட்ட தொழிற்சங்க பொறுப்பாளர்களும், கழக தோழர்களும் திரளாக கலந்து கொண்டனர்.
தோழர்களுக்கு வேண்டுகோள்
இதற்கு முன்பு பல்வேறு மாவட்டங் களில் செயல்பட்ட தொழிற்சங்கங்களின் பொறுப்பாளர்களின் புதிய தொலைபேசி எண்களை எங்களுக்கு தெரிவிக்குமாறு மாவட்டக் கழக பொறுப்பாளர்களையும், தோழர்களையும் கேட்டுக் கொள்கிறோம். மீண்டும் அவற்றை செயல்பட வைக்கத் திட்டமிட்டுள்ளது.


திண்டுக்கல் மோகன் (பேரவைத் தலைவர்) - 9965092546, திருச்சி மு.சேகர் (தொழிற்சங்கப் பேரவை பொதுச் செயலாளர்) 9865618754, 9698179749
- விடுதலை நாளேடு, 9.1.19

சனி, 5 ஜனவரி, 2019

மாநில திராவிடர் தொழிலாளர் அணி பேரவை கலந்துரையாடல் கூட்டம்

6.1.2019 ஞாயிற்றுக்கிழமை

மாநில திராவிடர் தொழிலாளர் அணி பேரவை

கலந்துரையாடல் கூட்டம்

திருவெறும்பூர்: மதியம் 3.00 மணி * இடம்: பெரியார் படிப்பகம் திருவெறும்பூர் (சாந்தி தியேட்டர் அருகில்) * வரவேற்புரை: வி.சண்முகம் (தலைவர் எல்சிஎஸ். டிகே) * தலைமை: கவிஞர் கலி.பூங்குன்றன் (துணை தலைவர், திராவிடர் கழகம்) * முன்னிலை: இரா.ஜெயக்குமார் (பொதுச்செயலாளர், திராவிடர் கழகம்), மு.நற்குணம் (மண்டல தலைவர்), பா.ஆல்பர்ட் (மண்டல செயலாளர்), ஞா.ஆரோக்கியராஜ் (மாவட்ட தலைவர்), இரா.மோகன்தாஸ் (மாவட்ட செயலாளர்), வ.மாரியப்பன் (ஒன்றிய தலைவர்), தமிழ்சுடர் (ஒன்றிய செயலாளர்), பி.சுரேஷ் (நகர தலைவர்), ம.இளங்கோவன் (நகர செயலாளர்), செ.பா.செல்வம் (தலைவர் பெல் தி.தோ.க.), ஆ.அசோக்குமார் (செயலாளர் பெல் தி.தோ.க.) * நன்றியுரை: இரா.திராவிடன் கார்த்திக் (தலைவர் அமைப்பு சாரா தொழிலாளர் சங்கம்) * குறிப்பு: திராவிட தொழிலாளர் அணி, திராவிட தொழிலாளர் கழக பேரவை அணி, மண்டல மாவட்ட பொறுப்பாளர்கள், விவசாய அணி சங்க மாவட்ட மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் தவறாமல் கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறோம் * இவண்: மு.சேகர் (செயலாளர் மாநில தொழிலாளர் அணி), அ.மோகன் (மாநில தலைவர் திராவிடர் தொழிலாளர் கழகம் பேரவை), ராயபுரம் கோபால் (விவசாய அணி செயலாளர்)

மதுரை மண்டல திராவிடர் தொழிலாளர் சங்க கலந்துரையாடல்

மதுரை, ஜன.2 26.12.2018 அன்று மதுரை முருகானந்தம் பழக்கடையில் திராவிடர் தொழிலாளர் கழகப் பேரவையின் சார்பில் அரசு போக்குவரத்து கழகம் மதுரை மண்டல திராவிடர் தொழிலாளர் சங்க கலந்துரை யாடல் கூட்டம் மிகுந்த எழுச்சி யுடன் நடைபெற்றது.

தொழிலாளர் கழகபேரவை யின் துணைப் பொதுச் செயலாளர் மு.சண்முகசுந்தரம் தலைமை வகித்தார். அமைப்புச் செயலாளர் செல்வம், மதுரை மண்டல திராவிடர் கழகத் தலைவர் மா.பவுன்ராசா, மதுரை மாநகர் மாவட்டத் தலைவர் முனியசாமி, செயலாளர் அ. முருகானந்தம், மதுரை புறநகர் மாவட்ட செயலாளர் எரிமலை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிவகுருநாதன் அனைவ ரையும் வரவேற்றார். பேரவை மாநிலத் தலைவர் அ.மோகன் கூட்டத்தின் நோக்கங்களை விளக் கிப் பேசினார். பேரவை மாநில பொதுச் செயலாளர் மு.சேகர் நிறைவாக சிறப்புரையாற்றினார்

கூட்டத்தில் திராவிட தொழிலாளர் சங்க நிர்வாகிகள் கழகத் தோழர்கள் சிதம்பரம், இராமசாமி, முத்துக்கருப்பன், ஆட்டோ செல்வம், சவரிமுத்து, போட்டோ இராதா, ஒட்டுநர் முரளி மற்றும் தோழர்கள் பங்கேற்றார்கள்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்

தீர்மானம் 1: திராவிடர் தொழி லாளர் சங்க மதுரை மண்டல தோழர்கள் அனைவரும் விடு தலை சந்தா செலுத்தி விடுதலை நாளிதழ் வாங்கி படிப்பதென தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.

தீர்மானம் 2: தமிழர் தலை வரின் அறிவுறுத்தலின்படி தமிழ் நாடு அரசு பேருந்துகளின் உள் பகுதியில் திருவள்ளுவர் படத் துடன் கூடிய திருக்குறள் வைக்க வேண்டுமென போக்குவரத்து கழகத்தையும், தமிழக அரசையும் கேட்டுக்கொள்கிறது.

தீர்மானம் 3: போக்குவரத்து துறையில் பணி புரியும் தொழி லாளர்களுக்கு சேர வேண்டிய பஞ்சப்படி  நிலுவை தொகையை உடனே வழங்க வேண்டுமென இக்கூட்டம்கேட்டுக்கொள்கிறது.

தீர்மானம் 4: ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர் களுக்கு கொடுக்கவேண்டிய ஓய்வூதிய நிலுவைத் தொகையை உடனே வழங்கவேண்டுமென இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.

தீர்மானம் 5: 240 நாட்கள் பணி செய்த தற்காலிக தொழிலா ளர்களை உடனே பணி நிரந்தரம் செய்ய வேண்டுமென இக்கூட் டம் கேட்டுக்கொள்கிறது.

தீர்மானம் 6: மதுரை மாநகரில் புதிதாக தந்தை பெரியார் ஆட்டோ சங்கம் துவங்கப்பட்டு அதன் மாவட்ட அமைப்பாளராக ஆட்டோ செல்வம் அவர்களை இக்கூட்டம் முன்மொழிந்து ஏற்றுக்கொள்கிறது.

-  விடுதலை நாளேடு, 2.1.19