திங்கள், 19 ஜூன், 2023

திராவிட தொழிலாளர் அணி சார்பில் தாராபுரத்தில் நடைபெற்ற முப்பெரும் விழா மற்றும் வழக்காடு மன்றம்


 8

தாராபுரம், ஜூன்.5- ‘’அறிவுலக ஆசான்" தந்தை பெரியார் அவர்களின் 144ஆவது பிறந்த நாள், ‘’சட்ட மேதை’’ டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் அவர்களின்  132ஆவது பிறந்த நாள், ‘’முத்தமிழறிஞர்’’  டாக்டர் கலைஞர் அவர்களின் 100ஆவது ஆண்டு பிறந்த நாள் என முப்பெரும் விழாக்களை கொண்டாடும் வகை யில், திராவிட தொழிலாளர் அணியின் திருப்பூர் மாவட்ட பொருளாளரும், தாராபுரம் நகர திராவிடர் கழகத்தின் முன்னாள் செயலாளருமான ப.மணி இல்ல மண விழா மகிழ்வாக, கழக தொழிலாளர் அணி சார்பில், தாராபுரம் அண்ணா சிலை அருகில் கடந்த 28.5.2023 ஞாயிறு மாலை 7 மணியளவில் “பண்பாட்டு படை எடுப்பிற்கு பலியாகும் தமி ழன் குற்றவாளியே!" எனும் தலைப்பில் வழக்காடு மன்றம் நடைபெற்றது.

நிகழ்வில்,  திராவிடர் கழகத்தின் தாராபுரம் ஒன்றிய செயலாளர் நாத்திக சிதம்பரம் தலைமை தாங் கினார்.திராவிட தொழிலாளர் அணியின் திருப்பூர் மாவட்ட செயலாளர் மல்லிகா செல்வராஜ் அனைவரையும் வரவேற்றார்.

கழக சொற்பொழிவாளர் இரா.பெரியார் செல்வன் நடுவராக பங்கேற்று வழக்காடு மன்றத்தை துவக்கி வைத்தார்.

நிகழ்வில், “ பண்பாட்டு படை எடுப்பிற்கு பலியாகும் தமிழன் குற்றவாளியே ‘’ என்று வழக்கு தொடுத்த  கழக  சொற்பொழிவாளர் இராம. அன்பழகன் குறிப்பிட்ட தாவது :

தை முதல் நாள் தான் தமிழ புத்தாண்டு!  ஆனால் ஆரியர்களுக் கான சமஸ்கிருத ஆண்டை தமி ழன் கொண்டாடுகிறான். மதமற்ற  திராவிட இனத்தை சேர்ந்த தமி ழன், சித்திரை மாதம்  முதல் பங் குனி மாதம் வரை  மத பண்டிகை களுக்கு பொருட் செலவு செய்து முக்கியத்துவம் தருகிறான்.மணப் பெண்ணை இழிவுபடுத்தும் சமஸ் கிருத மந்திரத்தை  கூறும் பார்ப் பனர்களை அழைத்து தமிழன் திருமணம் புரிகிறான். தமிழில் பெயர் வைத்து மாபெரும் புரட் சியை உருவாக்கிய திராவிட இயக் கங்கள் உள்ள நாட்டில் இனத்தால் திராவிடனான தமிழன்  ஆரிய  மொழியான சமஸ்கிருதத்தில் பெயர்களை சூட்டுகிறான். ஆகவே  பண்பாட்டு படை  எடுப்பிற்கு பலியாகும் தமிழன் குற்றவாளியே! என்றார்.

பண்பாட்டு படை  எடுப்பிற்கு பலியாகும் தமிழன் குற்றவாளி அல்ல ! என்று வழக்கை மறுத்து, கழக சொற்பொழிவாளர்

வழக்குரைஞர் பா.மணியம்மை பேசியதாவது ; 

வேதம்,கடவுள்,மதம், ஜாதி உள்ளிட்ட மூடநம்பிக்கைகளை விதைத்த  பார்ப்பனர்களே குற்ற வாளி! பலியாகிய தமிழன் அப் பாவி! தமிழனை சிந்திக்க வைத் தால்  சரியான பாதையில்  செல் வான். பண்பாட்டு படையெடுப் புக்கு மூல காரணமான பார்ப்பன சனாதனத்தை பரப்பும் ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட சங் பரிவார் அமைப்புகளே குற்றவாளி! தமி ழன் குற்றவாளியல்ல! என்றார்.

நடுவர் உரை

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நடுவர் இரா.பெரியார் செல்வன் தீர்ப்பு அடங்கிய தமது உரையில் தெரிவித்ததாவது ;-

நாடாளுமன்றமா? நாடாளு மன்ற  மடமா ? என்று எண்ணுகின்ற அளவுக்கு மதச் சடங்குகளை முன்னிறுத்தி சனாதனவாதியான சவார்க்கர் பிறந்த நாளான 28.5.2023 அன்று நாடாளுமன்ற புதிய கட்டடம் திறக்கப்பட்டுள் ளது.

நாடாளுமன்றத்தை இந்துத்வா கோட்டையாக மாற்றவேண்டும் என்பதுதான் பிரதம அமைச்சரின் நோக்கமாக இருக்கிறது. ஜனநாயக ஆட்சியை அகற்றி மீண்டும் மன்ன ராட்சியை ஏற்படுத்த பல்வேறு வடிவங்களில் சங்பரிவார் அமைப் புகள் வன்முறை வெறியாட்டங் களை நடத்திக் கொண்டும், நாட்டை கூறுபோட திட்டம் வகுத்துக் கொண்டும் இருக்கின்ற சூழ்நிலையில் நாடு இருக்கிறது. இந்த நாடு காப்பாற்றப் பட வேண்டும்.

பண்பாட்டுப் படையெடுப்பு களான மதம்,ஜாதி உள்ளிட்ட மூடநம்பிக்கைகளால் ஏற்படும் வன்முறை வெறியாட்டங்களை தடுப்பதற்கு  தான் மக்கள் மன்றத் தில் திராவிடர் கழகம் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தி வருகிறது.

தந்தை பெரியார் அவர்கள் ஒரு கூட்டத்தில் பேசிக் கொண்டிருக் கிருந்த போது மலத்தை அள்ளி வீசினார்கள்!

தந்தை பெரியார் அவர்கள் மலத்தை அள்ளி வீசியவர்கள்மீது கோபப்படவில்லை!  மலம் என்று தெரிந்தும் என் தமிழன் அதில் கை வைக்கிறானே  என்று சொன்னார்.

தந்தை பெரியார் அவர்கள் எப்போதும் தமிழனை எதிரியாக பார்த்தது இல்லை! மதவெறிக்கு எதிராக அரசியலை கடந்து தந்தை பெரியாரை தலைவராக ஏற்றுக் கொண்டு, மக்கள் நேசிக்கும் மாநிலம் தமிழ்நாடு! மொழிப் போராட்டத்தில்  உயிரையே  கொடுத்தவன் தமிழன்! 

தமிழன்  மதம்,ஜாதி போன்ற பண்பாட்டு படையெடுப்புகளுக்கு பலியானாலும், இனம், மொழி, உரிமை என்று வரும்போது  ஒன்று படுகிறான். சுயமரியாதை, அமை திப் பூங்கா இவ்விரண்டும் தமிழ் நாட்டின் தனித்தன்மைகள்! 

சமஸ்கிருத பெயர்களை தமிழ்ப் பெயர்களாக மாற்றும்  திராவிட இயக்கத்தின் சிந்தனை பண்பாட்டு படையெடுப்பை முறியடித்தது. இந்திய அரசியலை தமிழ்நாடு தான் இயக்குகிறது. சர்வாதிகாரி ஹிட்வருக்கு  எப்படி  ரஷ்ய அதிபர் ஸ்டாலின் முடிவுரை எழுதி னாரோ, அதைப் போன்று வருகின்ற 2024 இல் மோடிக்கு, முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் முடிவுரை எழுதுவார்.தமிழர்களே ஒன்றுபடுக! 

தீர்ப்பு

பண்பாட்டு படையெடுப்பு களுக்கு பலியாகும் தமிழன் குற்ற வாளி அல்ல! தமிழன் சீர்திருத்தப் பட வேண்டியவன்! 

தமிழனின் பண்பாடுகளை சிதைக்கும்  வகையில் ஆரிய பண் பாட்டுப் படையெடுப்பை நிகழ்த் திய பார்ப்பனர்களே குற்றவாளி! மதவெறியாட்டங்களை நிகழ்த்தும் ஆர்.எஸ்.எஸ் உள் ளிட்ட சங்பரிவார் அமைப்பு கள் தடை செய்யப்பட வேண்டும் என்று தெரிவித்தார்.

இந்நிகழ்வில், தாராபுரம் கழக மாவட்ட தலைவர் கணியூர் க.கிருட்டிணன்,செயலாளர் “உடுமலை" வழக்குரைஞர்   ஜெ.தம்பி பிரபாகரன், திராவிட தொழிலாளர் அணியின் திருப்பூர் மாவட்ட தலைவர் அ .அழகப்பன், பொருளாளர் ப.மணி, தாராபுரம் கழக மாவட்ட மகளிர் பாசறை தலைவர் சி.ராதா பெரியார் நேசன், தாராபுரம் கழக மாவட்ட அமைப்பாளர் கே.என்.புள்ளி யான், தாராபுரம் நகர துணை செயலாளர் மு.சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

“பெரியார் பிஞ்சு “  சி.ரா.யாழ் மதிவதனி  துவக்க உரையாற்றினார். திராவிடர் கழக தோழர்கள் வழக்குரைஞர் முருகேசன், வழக் குரைஞர் தி.செல்வராஜ், உமா புள்ளியான், மா.பழனிச்சாமி, ராசு, சேகர், வே.மாரியப்பன், செ.முத்துக் கிருஷ்ணன்,ம.தங்கவேல்,ச.மணி கண்டன் மற்றும் பகுத்தறிவாளர் கழக தோழர்கள் மதி பெரியார் நேசன், மு.மாரிமுத்து, பு.முரு கேசன், சு.திராவிடன், கா.வெள்ளி, எம்.ஏ.ஜெய்லானி, தமிழ்நாடு அரசு ஆதிதிராவிடர் நலக்குழு உறுப்பினர் க.வி.சிவசங்கர் (திமுக) உள்ளிட்ட பெருவாரியான தோழர்கள் பங்கேற்றனர்.

இந்த வழக்காடு மன்றம் வெகு மக்களிடையே  பகுத்தறிவுச் சிந்த னையை தோற்றுவித்தது என்று சொன்னால் அது மிகையாகாது! நிகழ்வின் நிறைவாக கழக பொதுக் குழு உறுப்பினர் “தையற் கலைஞர்”  க.சண்முகம் நன்றி கூறினார்.

திங்கள், 12 ஜூன், 2023

வழி காட்டுகிறது அசோக் லைலான்ட் தொழிற்சங்கம்!


 8

ஒசூர், ஜூன் 10- ஒசூர் -பாகலூரில் இயங்கிவந்த ஏசியன்பேரிங் கம்பெனி கடந்த 17 ஆண்டுகளாக கதவடைப்பு செய்யபட்டு அங்கு பணிபுரிந்து வந்த தொழிலாளர்கள் பல்வேறு துன்பத்திற்கு ஆளாகி யுள்ளனர்.

அந்த தொழிலாளர்கள் அமைத் துள்ள ஏசியன் பேரிங் ஒர்க்கர்ஸ் யூணியன் பல்வேறு சட்ட போராட்டங்களை நடத்தி வந்த நிலையில் வெளிபோராட்டங்கள் நடத்திட வேண்டி உள்ளது.

ஒசூரில் இயங்க கூடிய பெரிய நிறுவனங்களில் அசோக்லை லேன்ட் தொழிற்சாலையும் ஒன்று! மேற்கண்ட ABL தொழிலாளர்கள் தங்களது போட்டத்திற்கான நிதி வேண்டி கடிதம் தந்தபோது அசோக்லைலேன்ட் எம்ளாயிஸ் யூணியன் அதை ஏற்று தொழிலா ளர் மத்தியில் அறிவிப்பு செய்தது டன் 7.6.2023 அன்று மாலை சங்க நிர்வாகிகள் முன்னிலையில் பாதிக் கப்பட்ட தொழிலாளர்கள் துண் டேந்தி நிற்க தொழிலாளர்கள் தங்களாலான நிதியை துண்டில் போட்டுச் சென்றனர்.

அரை மணி நேரத்தில் 57,554 ரூபாய் நிதி வசூலானது. இரு தொழிற்சங்க நிர்வாகிகளும் ஒரு வருக்கொருவர் நன்றி தெரிவித்து கொண்டனர்.தொழிலாளர்களுக் காக!

இந்நிகழ்ச்சியில், அசோக் லைலே லன்ட் தொழிற்சங்க பொதுசெயலா ளர் சத்திவேல், பொருளாலர் குமார் இணைச் செயலாளர்கள் ராஜாராம், ரவிகுமார் உபதலைவர் டென்னீஸ், செயற்குழு உறுப்பினர் கள். ஏசியன்பேரிங் ஒர்க்கர்ஸ் யூனியன் தலைவர், சொக்கநாதராஜ், பொதுசெயலாளர் கிறிஸ்துநேசன், பொருளாளர் தேவராஜ், செயற் குழு உறுப்பினர்கள் நாராயணன், லோகேஷ், மனோகரன், திராவிடர் கழக மாவட்ட தலைவர் சு.வன வேந்தன் கலந்து கொண்டனர்.

செவ்வாய், 23 மே, 2023

திராவிடர் தொழிலாளர் கழக மாநில மாநாடு பெரு வெற்றி!

  

தாம்பரத்தில் கடந்த 20.5.2023 அன்று  திராவிடர் தொழிலாளர் கழக நான்காவது மாநில மாநாடு மிகச்  சிறப்பாக நடைபெற்றது.  காலையில் நடைபெற்ற கருத்தரங்கமும் சரி, மாலையில் நடைபெற்ற திறந்தவெளி மாநாடும் சரி வெகு, எழுச்சியுடன் நடைபெற்றது. மாநிலம் எங்கிருந்தும் திராவிடர் கழகத் தொழிலாளர் அணியை சேர்ந்தவர்களும் கழகத் தோழர்களும் பெருமளவில் கூடியிருந்தனர். மாலை திறந்தவெளி மாநாட்டில் வெகு மக்கள் கூட்டம் அலைமோதியது. மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட அத்தனைத் தீர்மானங்களும் காலத்தின் தேவையை உணர்ந்து வடிக்கப்பட்டவை ஆகும். சிறப்பாகச் சொல்ல வேண்டுமென்றால் முதலாளி, தொழிலாளி என்ற பேதம் ஒழிக்கப்பட்டாக வேண்டும்; முதலாளி பண முதலீடு செய்கின்றான் - தொழிலாளி தன் உழைப்பைத் தருகின்றான். பேதம் எங்கிருந்து வந்தது? ஆகவே முதலாளி - தொழிலாளி என்ற பேதம் நீங்கி பங்காளி என்ற நிலை உருவாக வேண்டும் என்பதுதான் தந்தை பெரியாருடைய தனித்தன்மையான கருத்தாகும்

இந்திய இந்து சமூக அமைப்பில் பிறப்பின் அடிப்படையில் ஜாதி என்ற பெயரால் பேதம் நிலை நிறுத்தப்பட்டுள்ளது. பார்ப்பனர் அல்லாதார் சூத்திரர்கள் என்று அழைக்கப்படுகின்றனர். சூத்திரன் என்றால் தொழிலாளி என்று பொருள் என மனுதர்மம் கூறுகிறது. இதனை  திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்கள் ஆதாரத்துடன் விளக்கிக் கூறினார். திராவிடர் கழகம் என்றாலே தொழிலாளர் கழகம் தான் என்றார் தந்தை பெரியார். "சூத்திரனை கூலி கொடுத்தோ கொடுக்காமலோ பிராமணர்கள் வேலை வாங்கலாம். பிராமணனுக்குத் தொண்டு செய்யவே சூத்திரனை பிரம்மா படைத்திருக்கிறார். சூத்திரன் மற்ற மூன்று வர்ணத்திற்கும் பொறாமை இன்றி பணி செய்வதை முக்கியமான தர்மமாக ஏற்படுத்தினார்.  செல்வம் உள்ள சூத்திரன் வீட்டில் சிறிதும் தயங்காமலும் கேளாமலும் பலாத்காரத்தினால் கொள்ளையிடலாம்" என்று மனுதர்மம் கூறுகிறது; கழகத்தை பொறுத்தவரையில் இந்த மனுதர்ம பார்ப்பனிய மேலாதிக்க சிந்தனையையும் செயல்பாட்டை யும் குறித்து மக்கள் மத்தியில் தொடர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பிரச்சாரம் செய்து வந்திருக்கிறது - வருகிறது.

இன்னும் சொல்லப்போனால் பிறப்பில் பேதம் பேசும் இந்த மனுதர்மத்தை எரிக்கும் போராட்டத்தையும் பலமுறை நடத்தியிருக்கிறது. இந்த விடயத்தில் தந்தை பெரியார் கருத்தும் காரல் மார்க்ஸ் கருத்தும் ஒத்துப்போவதை கவனிக்க வேண்டும். இதோ மார்க்ஸ் கூறுகிறார் - மனுதர்மம் பத்தாவது அத்தியாயம் 62 ஆவது ஸ்லோகம் கூறுகிறது. "பார்ப்பான் - பசு இவைகளை   பாதுகாக்கும் பொருட்டு கூலி பெறாமலேயே உயிரைத் தியாகம்  செய்வதே சூத்திரர்கள் சொர்க்கத்திற்கு செல்லும் மார்க்கம் ஆகும்." (ஆதாரம்: காரல் மார்க்ஸ் கேப்பிட்டல் வால்யூம் 11 பக்கம் 241) அதனால்தான் கம்யூனிஸ்டுகளின் கடமை பற்றி மார்க்ஸ் இவ்வாறு கூறுகிறார். "கம்யூனிஸ்டாக இருப்பவன் மூடப் பழக்க வழக்கங்கள் மத நம்பிக்கையில் மூழ்கிக் கிடக்கும் வளர்ச்சி அடையாத மக்கள் மனதில் அறிவுப்பூர்வமான வாதத்தை மத விடயங்களில் தூண்டி விஞ்ஞானப் பூர்வமாக விமர்சனம் செய்து மதத்தின் பிடியில் இருந்து அவர்களை விடுவிக்க பாடுபட வேண்டும்" என்று குறிப்பிடுகின்றார் மார்க்ஸ்.

 அதைத்தான் திராவிடர் கழகம் தொடர்ந்து செய்து கொண்டே இருக்கிறது. திராவிடர் கழக மாநாடாக இருந்தாலும் சரி, திராவிடர் தொழிலாளர் கழக மாநாடாக இருந்தாலும் சரி அவற்றில் நிறை வேற்றப்பட்ட தீர்மானங்கள் மாநாடுகளில் பேசப்பட்ட கருத்துகள் தொழிலாளர் மத்தியிலே மூடநம்பிக்கைகளை ஒழித்து அறிவுப் பூர்வமாக வாழ்வை கட்டமைத்துக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறோம். அரும்பாடுபட்டு உழைத்துப் போராட்டங்கள் நடத்தி ஊதியத்தை பெற்றுக் கொண்ட தொழிலாளி அந்தப் பணத்தைக் கொண்டு தன் குடும்பத்தையும், பிள்ளைகளின் படிப்பு வளர்ச்சியையும் மேலே உயர்த்த பயன்படுத்தாமல் - மத நம்பிக்கையாலும் பக்தி உணர்ச்சியாலும் பணத்தைப் பாழ்படுத்தும்  நிலையை - கண் எதிரில் பார்த்துக் கொண்டு தானே இருக்கிறோம்;  ஜாதிப் பிளவு காரணமாக தொழிலாளர்களிடையே ஒற்றுமையை உருவாக்குவதிலும் பெரிய இடர்ப்பாடு இருக்கத்தானே செய்கிறது. அதனால்தான் திராவிடர் கழகம் ஜாதி ஒழிப்பை முன்னெடுத்துப் பாடுபட்டுக் கொண்டிருக்கிறது 

தாம்பரம் திராவிடர் தொழிலாளர் கழக மாநில மாநாட்டில் தொழிலாளர்களின் முன்னேற்றத்திற்கான முற்போக்குச் சிந் தனைக்கான அரிய பல தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டுள்ளன. மாநில ஒன்றிய அரசுகளுக்கும் அவசியமான வலியுறுத்தலான தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டுள்ளன. குறிப்பாக சமூகநீதிப் பிரச்சினையில் ஒன்றிய பிஜேபி அரசு மேற்கொண்டு வரும் நட வடிக்கைகளும், சட்டங்களும் தொழிலாளர்களையும் அவர்களின்  குடும்பத்தினரையும் பிள்ளைகளையும் எந்த அளவுக்கு பாதிப்புக்கு ஆளாக்குகின்றன என்பதும் தீர்மானத்தில் எடுத்துக்காட்டப் பட்டுள்ளன. 

இந்த மாநாட்டை திராவிடர் தொழிலாளர் கழக பொறுப் பாளர்களும் தாம்பரம் மாவட்ட திராவிடர் கழக தோழர்களும் வெகு சிறப்பான வகையில் எல்லா வகையிலும் திட்டமிட்ட வகையில் நேர்த்தியாக நடத்தி முடித்திருக்கின்றனர். மக்களிடத்திலே நிதி வசூல் செய்து ஒன்றரை லட்சம் ரூபாயை மீதம் செய்து தலைமைக் கழகத்திடம் அதன் தலைவரிடம் ஒப்படைத்து இருக்கின்றனர் என்றால் தோழர்களின் அந்தப் பொறுப்புணவையும் செயல் பாட்டையும் எந்த அளவுக்கு பாராட்டினாலும் தகும். அரும்பாடு பட்டு ஆக்க ரீதியாக மாநாட்டை நடத்தி முடித்த தோழர்களை மாநாட்டு மேடை யிலேயே பயனாடை போர்த்தி பாராட்டி வாழ்த்தி மாநாட்டிற்கு தலைமை வகித்த திராவிடர் கழக தலைவர் ஆசிரியர் அவர்கள் மகிழ்ச்சி அடைந்ததையும் இந்த நேரத்திலே சுட்டிக்காட்ட வேண் டும். மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பற்றி அடுத்து பார்ப்போம்.

தொழிலாளர்கள்பற்றி தந்தை பெரியார் வடிக்கும் கண்ணீர்

 

 பொதுவாக தொழிலாளர்கள் பற்றி மற்றவர்கள் பார்க்கும் பார்வைக்கும் தந்தை பெரியார் பார்க்கும் பார்வைக்கும் அடிப்படை யிலேயே வேறுபாடு உண்டு. தந்தை பெரியார் இதோ கூறுகிறார்.

"தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்கள் மற்றும் மிருகங்கள் போல் நடத்தப்படுகிற பாட்டாளி கூலி ஏழை மக்கள் தான் எனக்கு கண் வலியாய் இருப்பவர்கள். அவர்களை சம மனிதர்களாக ஆக்குவது தான் எனது கண் நோய்க்கு பரிகாரம்". ('விடுதலை' - 15.10.1967) என்று இன்றைக்கு 56 ஆண்டுகளுக்கு முன்னாலே தந்தை பெரியார் கண்ணீர் வடிக்கிறார். 

1952இல் எஸ்.ஆர்.எம்.யூ. துவக்க விழா பொன்மலையில் நடைபெற்ற பொழுது அவர் ஆற்றிய உரையும் கவனிக்கத்தக்கது. "இவ்வளவு பாடுபட்டும் இன்னும் இந்தக் காலத்திலும் பார்ப்பான் இருக்கின்றான். பறையன் இருக்கிறானே. உலகிலெல்லாம் மார்க்சியம் பரவின இந்தக் காலத்திலும் இத்தகைய பேதங்கள் இருக்கிறதே. அந்த ஜாதிகளில் ஒன்று தானே தொழிலாளி ஜாதி. 

பார்ப்பான் ஆதிக்கம் குறையவில்லையே - குறையவில்லை என்பதோடு மட்டுமல்ல; இந்த பேதங்கள் இந்த சுயராஜ்ய குடியரசிலே இன்றும் அனேகமாகப் பலப்படுத்தப்படுகின்றனவே!

தொழிலாளிக்கு அடி உதை  - அதோடு மட்டுமா தொழிலாளர் குடும்ப பெண்கள் எத்தனை பேர் கற்பழிக்கப்பட்டார்கள். எத்தனைப் பெண்டுகளை மயிரை பிடித்து இழுத்து தெருவில் கொண்டு வந்து போட்டு அடித்தார்கள். இவ்வளவு பாடுகள் படச் செய்தும் அவர்களது கஷ்டம் நீங்கவில்லையே! 

குறைந்த கஷ்ட நஷ்டத்தில் அதிகப்படியான லாபத்தை அல்லவா பெற வேண்டும் - இதை நினைத்தால் எனக்கு மனம் பதறுகிறது. நம் மக்கள் இப்படி ஏமாற்றப்படுகிறார்கள் என்கின்ற ஆத்திரத்தால் சில சமயங்களில் ரத்தக் கொதிப்பு ஏற்படுகிறது. எத்தனை நாளைக்கு இப்படி நடந்தாலும் சூத்திரனும், அதாவது தொழிலாளர்களாக சூத்திரனும் பார்ப்பான்   முதலாளி ஆகவும் தானே இருப்பான்" என்று தந்தை பெரியார் ரத்தக்கண்ணீர் வடிக்கிறாரே! 

இந்த நிலைமை மாற வேண்டாமா? தொழிலாளி வீட்டு பிள்ளை தொழிலாளியாகத் தான் இருக்க வேண்டுமா? அவனுக்குக் கல்வி வேண்டாமா? உத்தியோகம் வேண்டாமா? பொருளாதாரத்தில் நிமிர்ந்து நிற்க வேண்டாமா? தன்னெழுச்சி பெற வேண்டாமா? என்பதுதான் நாம் நடத்துகின்ற மாநாட்டினுடைய அடி நாதம் ஆகும். 

தாம்பரத்தில் நடைபெற்ற திராவிடர் தொழிலாளர் கழக மாநில மாநாட்டில் ஒரு முக்கியமான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது "அடிப்படையில் ஒதுக்கப்பட்டு காலம் காலமாக உரிமையற்றவர்களாக வாழ்ந்து வரும் அடிமட்டத் தொழிலாளர் வீட்டுப் பிள்ளைகள் படித்து முதல் தலைமுறையாக கல்வி உரிமை பெற்று, மருத்துவம் போன்ற படிப்புக்குள் செல்ல  ஆர்வம் காட்டும் இந்தக் காலகட்டத்தில் அந்த முயற்சியின் குதிகால் எலும்பை முறிக்கும் வகையில் நீட் தேர்வைத் திணித்திருப்பது.  ஏற்கெனவே ஆதிக்கம் பெற்ற உயர் ஜாதி அரசியலின்  திட்டமிட்ட சூழ்ச்சி - என்பதை மாநாடு திட்டவட்டமாக தெரிவிக்கிறது. ஒன்றிய அரசு உடனடியாக நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று மாநாடு ஒன்றிய அரசை வலியுறுத்துகிறது." 

தொழிலாளர் மாநாட்டில் இதுபோன்ற தீர்மானங்கள் என்பது திராவிடர் கழகத்திற்கே உரித்தான தனித்தன்மையாகும். இன்னொரு முக்கிய தீர்மானம் கவனிக்கத்தக்கது. "விவசாயிகளின் நலனை பாதிக்கக்கூடிய ஒன்றிய அரசின் வேளாண் சட்டங்களை தமிழ்நாட்டில் செயல்படுத்த மாட்டோம் என்று தமிழ்நாடு அரசு தீர்மானத்தை நிறைவேற்றியது போன்று தொழிலாளர்களின் நலனை பாதிக்கக்கூடிய ஒன்றிய அரசின் புதிய தொழிலாளர் சட்டங்களை தமிழ்நாட்டில் செயல்படுத்துவதில் இருந்து விலக்கு அளிக்குமாறு சட்டமன்றத்தில் நிறைவேற்ற தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று மாநாடு கேட்டுக் கொள்கிறது." 

இந்தத் தீர்மானத்தின் நோக்கம் என்ன - ரூபாய் மதிப்பு இழப்புக்கு பின்னால் சிறு - குறு தொழிற்சாலைகள் முடக்கப்பட்டன. பல்லாயிரக்கணக்கான தொழிலாளர் தோழர்கள் வீதிக்கு வந்தனர். அவர்களுடைய வாழ்வே கேள்விக்குறியாகிவிட்டது. இந்த நிலைமையில், மேலும் ஒரு புதிய அபாயகரமான சட்டத்தை ஒன்றிய பி.ஜே.பி. அரசு நிறைவேற்றி உள்ளது. இதற்கு முன் வரை 100 தொழிலாளர்கள் வரை பணியாற்றும் தொழிற்சாலைகளை மூடுவதற்கு அரசின் அனுமதி தேவையில்லை. ஆனால் இப்பொழுது ஒன்றிய பி.ஜே.பி. அரசு கொண்டுவந்துள்ள சட்டம் என்ன தெரியுமா? அதை 300ஆக உயர்த்தியுள்ளது இதன் பொருள் என்னவென்றால் 300 பேர் வரை பணியாற்றும் தொழிற்சாலைகளை மூடி ஏன்? எதற்கு? என்று கேள்வி இல்லாமல் - காரணம் சொல்லாமல் தொழிலாளர்களை வீட்டுக்கு அனுப்பி விடலாம். நடு ரோட்டில் நிற்க வைக்கலாம். என்பது எவ்வளவு பெரிய கொடுமை. இதனைத் தான் தாம்பரம் திராவிடர் தொழிலாளர் கழக மாநில மாநாடு ஒரு தீர்மானமாக வலியுறுத்தி உள்ளது 

இப்படி ஒவ்வொரு தீர்மானமும் இந்தக் காலகட்டத்திற்கு மிகுந்த அவசியமான தீர்மானங்களாகும். கிராமங்களில் விவசாயம் என்பது கிட்டத்தட்ட வீழ்ச்சி அடைந்து விட்டது. ஆண்டு முழுவதும் வேலை வாய்ப்பு கிடையாது. இந்த நிலையில் ஒன்றிய ஆட்சியில் இருந்த அய்க்கிய முற்போக்கு அரசு ஓர் அருமையான திட்டத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வந்தது. அதுதான் "மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டம்". நூறு நாட்களுக்கு வேலை கொடுக்கும் திட்டமாகும். இதனால் ஓரளவு கிராம மக்கள் வாழ்விலே நிம்மதிப் பெருமூச்சு ஏற்பட்டது. அந்தத் திட்டத்தை மேலும் வளர்க்க வேண்டிய ஒன்றிய அரசு அதனை குலைக்கும் வகையில் செயல்பட முற்பட்டு இருப்பது மனிதாபிமானமற்ற செயல் அல்லவா? இதையும் தாம்பரம் திராவிடர் தொழிலாளர் கழக மாநாடு சுட்டிக்காட்டி இருக்கிறது. 

இப்படி எல்லா வகையிலும் தாம்பரம் திராவிடர் தொழிலாளர் கழக நான்காவது  மாநில மாநாடு சிறப்பான வெற்றியை பெற்றிருக்கிறது. இந்த வெற்றிக்கு காரணமான இயக்கத் தோழர்களையும் கடும் உழைப்பையும், ஆதரவளித்த பொது மக்களையும் திராவிடர் கழகம்  சார்பில் பாராட்டுகின்றோம். நன்றி செலுத்துகின்றோம். 

ஞாயிறு, 23 ஏப்ரல், 2023

இலா பட் - பெண்களுக்கான தொழிற்சங்கத் தலைவர்!

 

13

’சேவா’, (Self Employed Women’s Association)  என்னும் நிறுவனம், உலகின் முறை சாராப் பெண் பணியாளர்களுக்கான (employees of informal sector)  மிகப் பெரும் தொழிற்சங்கம். இந்தியாவின் தொழிலாளர்களில் 92% பேர், முறை சாராத்தொழில்களில் பணிபுரிபவர்கள். இவர்கள் உரிமைகளுக்கான குரல், நிறுவனங்களில் பணிபுரி யும் தொழிலாளர்களுக்கான தொழிற்சங்கங்கள் போலப் பெரிதாக எழுவதில்லை. 15 லட்சத்துக்கும் அதிகமான பெண் உறுப்பினர்களைக் கொண்டு, பெண்களால் நிர்வகிக்கப்படும் நிறுவனம். இதன் தலைமையகம் அகமதாபாத்தில் உள்ளது.

இந்த சங்கமானது சங்கத்தின் பெண் உறுப்பினர்க ளுக்கு நிலையான வருமானம், அவர்கள் அடிப்ப டைத் தேவைகளான இருப்பிடம்,  மருத்துவ வசதி, குழந்தைகள் நலம் போன்றவற்றுக்காக உழைக்கிறது. தொழிலாளர்கள் ஒரு நிறுவனத்தின் ஊழியர்களாக இருந்தால், அந்த நிறுவனத்துடன் போராடி, பேரம் பேசி, தொழிலாளர்களுக்குச் சேர வேண்டிய அடிப் படை உரிமைகளைப் பெற்றுத் தரலாம். ஆனால், நிறுவனம் என ஒன்று இல்லாமல், முறைசாராப் பணிகளில், சீரான வருமானம் இல்லாத பெண்களுக் கான உரிமைகளை யாரிடம் இருந்து பெற்றுத் தரு வது? அவர்களுக்கான அடிப்படைத் தேவைகளை எவ்வாறு நிறைவேற்றுவது?

இலா பட், 1933 ஆம் ஆண்டு அகமதாபத்தில் பிறந்தார். தந்தை சுமந்த்ராய் பட் ஒரு வெற்றிகரமான வழக்கறிஞர். தாயார் வானலீலா வ்யாஸ் புகழ்பெற்ற பெண்ணியவாதி. கமலாதேவி சட்டோபாத்யாயா துவங்கிய, அகில இந்தியப் பெண்கள் மாநாட்டின் செயலர் (All India Women’s Conference).  சூரத் நகரில் பள்ளிக் கல்வி பயின்ற அவர், தனது சட்டப் படிப்பை அகமதாபாத்தில் முடித்தார். சிலகாலம், மும்பையின் எஸ்.என்.டி.டி என்னும் புகழ்பெற்ற கல்லூரியில் சிலகாலம் ஆசிரியராகப் பணியாற்றி னார். பின்னர் அகமபாத்தில் உள்ள ஜவுளித் தொழி லாளர் கூட்டமைப்பின் (Textile Labour Association - TLA)  சட்டப்பிரிவில் பணிக்குச் சேர்ந்தார்.

மோட்டா பென் (பெரிய அக்கா) என்றழைக்கப் பட்ட அனுசூயா சாராபாய், புகழ்பெற்ற குஜராத்தித் தொழிலதிபர் அம்பாலால் சாராபாயின் சகோதரி. குழந்தைத் திருமணம் செய்யப்பட்டு விதவையான அவர், பின் தன் சகோதரர் அம்பாலால் சாராபாயின் உதவியோடு, லண்டனில் மருத்துவம் பயிலச் சென்றார். படிப்புக்காக விலங்குகளை அறுப்பது, அவரது சமண மத வழிகளுக்கு முரணாக இருந்த தால், அதை விடுத்து, லண்டன் பொருளாதாரப் பள்ளியில் (London School of Economics)  பொருளாதாரம் பயின்றார். ஜனநாயக சோஷலி ஸத்தை முன்னெடுத்த ஃபேபியன் குழுவின் அனுதாபி. பெண் வாக்குரிமைக்காகக் குரல் கொடுத்த சஃப்ரகெட் இயக்கத்தில் (Suffragette Movement) பங்கெடுத்தவர். 1913 ஆம் ஆண்டு இந்தியா திரும்பி, பெண்களுக்காகவும், ஏழைகளுக் காகவும் உழைக்கத் துவங்கினார்.  36 மணி நேர ஷிஃப்டுகளில் பெண்கள் உழைக்க நேர்ந்த அவலத்தை எதிர்த்துக் குரல் கொடுத்தார். ஜவுளித் தொழிலாளர்களின் நலன்களுக்காக உழைத்தார்.

குறுந்தொழில், அல்லது முறைசாராத் துறைகளில் பணிபுரிபவர்கள், இந்தியாவின் மொத்தத் தொழிலா ளர்களில் 92% ஆகும். இவர்கள் ஊரக சமுகத்தின் விளிம்புகளிலும், நகர்ப்புரங்களின் சேரிகளிலும் பெரும்பாலும் வசிக்கிறார்கள். பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினத்தவர்கள் என அனைத்து ஜாதி வேற்றுமைகளையும் கடந்து, இவர்களுக்கிருக்கும் ஒரே ஒற்றுமை ஏழ்மை. ‘சேவா’, ஒரு சராசரி தொழிற்சங்கம் என்பதைத் தாண்டி, இவர்களை ஒரே சமூகமாக ஒருங்கி ணைக்கும் நிறுவனமாகவும் திகழ்கிறது.

’சேவா’ வின் முக்கியக் குறிக்கோள், மகளிருக்கு, வேலை, வருமானம், உணவு, சமூகம் என நான்கு தளங்களில் பாதுகாப்பை உறுதி செய்வதாகும். சமூக நலத்தில், வீடு, உடல் நலம், குழந்தைகள் நலம் ஆகியவையும் அடங்கும். இந்தத் தளங்களில், மகளிர் தனியாகவோ, குழுவாகவோ, தற்சார்பை எய்தி, தங்கள் வருங்காலத்தைத் தாங்களே முடிவு செய்யும் சுதந்திரத்தையே ‘சேவா’, பாதுகாப்பு என வரையறுக்கிறது. காந்திய வழிகளான, வாய்மை, அகிம்சை, சர்வதர்ம சமத்துவம் மற்றும் சிறு தொழில் கள் மூலம் சமூக மாற்றத்தை அடைவதே, ‘சேவா’ வின் வழி.

இந்த உறுப்பினர்களை, பொதுவாக நான்கு வகையாகப் பிரிக்கிறார்கள்:

தெருமுனை / குறு வணிகர்கள்: காய்கறி, முட்டை, மீன், இறைச்சி, வீட்டுப் பொருட்கள், துணிகள் போன்ற பொருட்களை விற்பவர்கள்.

வீட்டில் இருந்து உழைப்பவர்கள்: நெசவாளிகள், குயவர்கள், பீடி / அகர்பத்தி சுற்றுபவர்கள், அப்பளம் செய்பவர்கள், ஆயத்த ஆடை தைப்பவர்கள், கைவினைப் பொருட்கள் செய்பவர்கள் போன்றவர் கள். 

உடல் உழைப்பாளிகள்: வேளாண் தொழிலா ளர்கள், கட்டுமானத் தொழிலாளர்கள், ஒப்பந்தத் தொழிலாளர்கள், கைவண்டி இழுப்பவர்கள், தலைச் சுமை சுமப்பவர்கள், வீட்டு வேலை செய்பவர்கள் போன்றவர்கள்

சேவை மற்றும் உற்பத்தியில் ஈடுபடுபவர்கள்: உழவர்கள், மாடு மேய்ப்பவர்கள், உப்பு உற்பத்தி யாளர்கள், சிறு அளவில் உணவு தயாரித்து விற்ப வர்கள் போன்றவர்கள்.

சேவா வங்கி, ஏழைகளுக்கான தேசிய ஓய்வுத் திட்டத்தையும் நடத்தி வருகிறது. இதில் 40,000 உறுப்பினர்கள் சேர்ந்துள்ளனர். இதன் மூலம், மிக எளிதாக சேமிக்கவும், அரசு மானியத்தைப் பெறவும் முடிகிறது. இது ஏழைகளின் முதிய வயதில், ஒரு குறைந்தபட்ச பொருளாதாரப் பாதுகாப்புக்கு உதவுகிறது.

வெள்ளி, 14 ஏப்ரல், 2023

திராவிடர் தொழிலாளர் கழகப் பேரவையின் மூன்றாவது மாநில மாநாடு

 

அய்யாவின் அடிச்சுவட்டில்… இயக்க வரலாறான தன் வரலாறு (290)

ஏப்ரல் 1-15,2022

நாகையில் பெரியார் சிலைத் திறப்பு

கி.வீரமணி

 

கட்டுரையின் ஒரு பகுதி.....

திராவிடர் தொழிலாளர் கழகப் பேரவையின் மூன்றாவது மாநில மாநாடு திருவெறும்பூரில் 29.8.1998 அன்று எழுச்சியுடன் நடைபெற்றது. பேரணியும் நடந்தது. தொழிலாளர் கழகப் பேரவைப் பொதுச் செயலாளர் சோ.தங்கராசு தலைமை வகித்தார். மாநாட்டு மேடைக்கு பகுத்தறிவாளர் சி.வீராசாமி பெயர் சூட்டப்பட்டது.

திராவிடர் தொழிலாளர் கழகப் பேரவையின் சார்பில் எடைக்கு எடை ரூபாய் நாணயங்கள் வழங்கும் விழா மாநாட்டு மேடையில் சிறப்பாக நடைபெற்றது. மாநாடு சிறக்க ஒத்துழைத்த தோழர்களுக்கு ஆடை போர்த்தி, கழகத்தின் சார்பில் சிறப்புச் செய்தேன். தொழிலாளர்கள் நிறைந்த பகுதியான திருவெறும்பூர் மாநாட்டுக்கு பல்வேறு பகுதியிலிருந்து தொழிலாளர்கள் அணிவகுப்பாக வந்து கலந்துகொண்டனர்.

மாநாட்டில் சிறப்புரையாற்றிய பின், மறைந்த மாவட்ட பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் சி.வீராசாமி அவர்களின் நினைவுக் கல்வெட்டினை எழில் நகர் பகுதியில் திறந்து வைத்து, உரையாற்றினேன்.

வியாழன், 13 ஏப்ரல், 2023

மே 7: தாம்பரத்தில் திராவிடர் தொழிலாளரணி மாநாடு - தொழிலாளரணி கலந்துரையாடலில் முடிவு


தொழிலாளரணி கலந்துரையாடலில் முடிவு

    10

தாம்பரம், ஏப். 12- மேற்கு தாம்பரம் அறிஞர் அண்ணா பேருந்து
நிலையம் அண்ணல் அம் பேத்கர் சிலை அருகில் அமையப்
பெற்ற பெரியார் பகுத்தறிவு புத்தகக் கண்காட்சி மற்றும்
புத்தக நிலையத்தில் 9.4.2023 அன்று மாலை 6.30 மணியளவில்
திராவிடர் தொழிலாளர் அணியின் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.

வரும் 7.5.2023 - ஞாயிற்றுக்கிழமை அன்று
தாம்பரம் பெருநகரத்தில் நடைபெறும் திராவிடர்
தொழி லாளரணி மாநாடு குறித்து தொழிலாளரணி மாநில
தலைவர் திருச்சி மு.சேகர் மாநாடு நோக்க உரை நிகழ்த்தி
நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

திராவிடர் கழக அமைப்புச் செயலாளர் வி.பன்னீர்செல்வம், மாநில பகுத்தறிவாளர் 

கழகப் பொதுச்செயலாளர் ஆ.வெங்கடேசன்,சென்னை மண்டல கழகத் தலைவர் 

தி.இரா.இரத்தினசாமி, சென்னை மண்டல கழக செயலாளர் 

தே.செ.கோபால், மாநில பகுத்தறிவாளர் கழக துணைத் தலைவர் பொறியாளர் 

ந.கரிகாலன், தாம்பரம் மாவட்டத் தலைவர் ப.முத்தையன், தாம்பரம் மாவட்டச்

செயலாளர் கோ.நாத்திகன், தாம்பரம் மாவட்ட பொருளாளர் கூடுவாஞ்சேரி 

மா.இராசு,சோமங்கலம் இனமாறன் (எ)பாலமுரளி, தாம்பரம் மாவட்ட 

பகுத்தறிவாளர் கழகத் தலைவர் எஸ். ஆர்.வெங்கடேஷ், தாம்பரம் மாவட்ட 

பகுத்தறிவாளர் கழகத் துணைத் தலைவர் இரா.சு.உத்ரா, தாம்பரம் மாவட்ட 

தொழிலாளரணி தலைவர் மா.குணசேகரன், வட சென்னை மாவட்ட செயலாளர் 

திருவொற்றியூர் தி.செ.கணேசன்,வட சென்னை மாவட்ட மகளிரணி தலைவர் 

க.சுமதி, தென் சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வ நாதன், தென்சென்னை 

மாவட்டச் செயலாளர் செ.ர.பார்த்தசாரதி, தென் சென்னை மாவட்டத் துணைச் 

செயலாளர் சா.தாமோதரன், ஆவடி மாவட்ட அமைப்பாளர் உடுமலை வடிவேல், 

செம்பாக்கம் கு.வைத்தியலிங்கம் மற்றும் ஆவடி மாவட்டத் துணைச் செயலாளர் 

பூவை க.தமிழ்ச்செல்வன் ஆகியோர் மாநாடு சிறக்க தங்கள் கருத்துகளை 

பகிர்ந்து கொண்டனர்.

கீழ்க்கண்ட தீர்மானங்கள் தாம்பரம் தொழி லாளரணி கலந்துரையாடல் 

கூட்டத்தில் கலந்து கொண்ட பொறுப்பாளர்களின் கை தட்டலுடன் 

நிறைவேற்றப்பட்டது.

11

தீர்மானம் 1:

திராவிடர் தொழிலாளர் கழக மாநில மாநாட்டை தாம்பரம் மாநகரில் நடத்திட 

ஒப்புதல் தந்த தமிழர் ஆசிரியர் அவர்களுக்கு பாராட்டை யும், நன்றியையும் 

தெரிவித்துக் கொள்கிறோம்.

தீர்மானம் 2:

தமிழர் தலைவர் அவர்களால் அறிவிக்கப்பட்ட தொழிலாளரணிமாநில 

மாநாட்டை சிறப்புற நடத்திட சென்னை மண்டல,மாவட்ட பொறுப் பாளர்கள் 

ஒருங்கிணைத்து செயல்பட்டு நடத்திக் காட்டிடுவோம் என்று தீர்மானிக்கப்படுகிறது.

தீர்மானம் 3:

தாம்பரத்தில் நடக்க இருக்கும் மாநாட்டிற்கு தமிழ்நாடு முழுவதிலுமிருந்து திரளாக 

தோழர் களை திரட்டி மாநாட்டை வெற்றி பெறச் செய்வோம் என 

தீர்மானிக்கப்படுகிறது.

தீர்மானம் 4:

மாநாட்டின் போது தமிழர் தலைவர் அவர் களால் அறிவிக்கப்பட்ட உண்மை 

சந்தாக்களையும் வழங்கி தமிழர் தலைவர் அவர்களை மகிழ் விப்போம் என 

தீர்மானிக்கப்படுகிறது.

தீர்மானம் 5:

ஒன்றிய அரசால் அறிவிக்கப்பட்ட நாசகார திட்டம்"நிலக்கரி"சுரங்கம் 

அமைப்பதை தடுத்திட்ட தமிழர் தலைவர் அவர்களையும், தமிழ்நாடு 

முதலமைச்சரையும் இக்கூட்டம் பாராட்டுகிறது.

மாநாட்டு நன்கொடை அறிவித்த தோழர்கள்

தென் சென்னை மாவட்டம்  50 ஆயிரம்,

ஆவடி ஏழுமலை ரூ.50 ஆயிரம்,

ப.முத்தையன்  ரூ.25 ஆயிரம்,

மா.இராசு  ரூ.25 ஆயிரம்

பொறியாளர் ந.கரிகாலன் ரூ.10 ஆயிரம்

தே.செ.கோபால் ரூ.10 ஆயிரம் 

ஆ.வெங்கடேசன்  ரூ.5 ஆயிரம் 

கோ.நாத்திகன் ரூ.5 ஆயிரம்

கு.வைத்தியலிங்கம் ரூ.5 ஆயிரம்

பாலமுரளி  ரூ.3 ஆயிரம் 

தாம்பரம் சு.மோகன்ராஜ் ரூ.3 ஆயிரம்

பி.சி.ஜெயராமன் ரூ.2 ஆயிரம்

வட சென்னை சுமதி ரூ.2 ஆயிரம்

நன்கொடை வழங்கிய 

தோழர்கள்

ஆ.வெங்கடேசன் ரூ.5 ஆயிரம்

பி.சி.ஜெயராமன் ரூ.2 ஆயிரம்.

தாம்பரம் சு.மோகன்ராஜ் ரூ.3 ஆயிரம்

மாநாடு எப்படி நடத்த வேண்டும்; மற்றும் தற்போதைய நிலை குறித்து கழகத் 
தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் 10.4.2023 அன்று மாநில 
தொழிலாளரணி தலைவர் மு.சேகர், சிவகுருநாதன், ப.முத்தையன், மா.இராசு 
ஆகி யோர் கலந்தாலோசித்து முடிவில் 10 உண்மை சந்தாக்களை வழங்கினர்.

புதன், 22 மார்ச், 2023

திராவிட தொழிலாளர் கழக ஆலோசனைக் கூட்டம் -சென்னை

 

தமிழர் தலைவர் தலைமையில் திராவிட தொழிலாளர் கழக மாநில கலந்துரையாடல் கூட்டம் 30.1.2023 அன்று சென்னை பெரியார் திடலில் சிறப்பாக நடத்துவது பற்றிய ஆலோசனைக் கூட்டம் மாநில செயலாளர் மு.சேகர் தலைமையில், அமைப்புச் செயலாளர் வி.பன்னீர்செல்வம் முன்னிலையில் நடைபெற்றது. கூட்டத்தில் சென்னை மண்டல செயலாளர் தே.செ.கோபால், திராவிட தொழிலாளர் கழகம் மற்றும் பெரியார் கட்டுமான அமைப்பு சாரா தொழிலாளர் சங்க பொறுப்பாளர்களான தாம்பரம் ப.முத்தையன், குணசேகரன், மதுரை சிவகுருநாதன், வெ.மு.மோகன், தி.செ.கணேசன், செ.ர.பார்த்தசாரதி, அம்பத்தூர் இராமலிங்கம், க.சுமதி, மா.இராசு மற்றும் தோழர்கள் கலந்து கொண்டனர். அனைவரும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை சந்தித்தனர் (சென்னை பெரியார் திடல், 23.1.2023).


மருந்துகள் வியாபாரிகள் சங்க தலைவருக்கு பாராட்டு

 

சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்ட மருந்துகள் வியாபாரிகள் சங்க தலைவராக பொறுப்பேற்று வட்டார மருந்துகள்  சங்க கட்டடம் ரூ.80 லட்சம் செலவில்  கட்டி திறந்து வைத்த ஆத்தூர் கழக துணை தலைவர்  மு.மனோகரனுக்கு சால்வை அணிவித்து சிறப்பு  செய்தார் மாவட்ட தலைவர் த.வானவில். உடன் மாவட்ட செயலாளர்  நீ.சேகர்.

செவ்வாய், 21 மார்ச், 2023

தமிழ்நாடு சுமை தூக்குவோர் மாநில பாதுகாப்புச் சங்கத்தினர் கோரிக்கை மனு அளித்தனர்

 தமிழ்நாடு சுமை தூக்குவோர் மாநில பாதுகாப்புச் சங்கத்தின் மாநில தலைவர் மு.வீரராகவன், மாநில பொதுச் செயலாளர் சொ.சரவணன், மாநில பொருளாளர் க.பாஸ்கரன், மாநில அமைப்புச் செயலாளர் ஆ.முனுசாமி ஆகியோர் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களைச் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்

தமிழ்நாடு சுமை தூக்குவோர் மாநில பாதுகாப்புச் சங்கத்தின் மாநில தலைவர் மு.வீரராகவன், மாநில பொதுச் செயலாளர் சொ.சரவணன், மாநில பொருளாளர் க.பாஸ்கரன், மாநில அமைப்புச் செயலாளர் ஆ.முனுசாமி ஆகியோர் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களைச் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். உடன் திருவள்ளூர் திராவிடர் கழக மாவட்டத் தலைவர் கோ.கிருட்டினமூர்த்தி, மாவட்ட செயலாளர் ந.இரமேஷ் உள்ளனர் (சென்னை, 8.9.2022)

திங்கள், 6 பிப்ரவரி, 2023

திராவிடர் தொழிலாளர் அணி கலந்துரையாடல் கூட்டத்தில் புதிதாக நியமிக்கப்பட்ட நிர்வாகிகள் பட்டியல் (30.01.2023)

 

தருமபுரி மாவட்டம்

பெ.கோவிந்தராஜ் - மாவட்டத்தலைவர்

இரா.சேட்டு - மாவட்ட செயலாளர்

மு.சிசுபாலன் - மாவட்ட துணைத் தலைவர் 

அரங்க - கோவிந்தராஜ் - மாவட்ட துணை செயலாளர்

தே.சத்தியராஜ் - மாவட்ட அமைப்பாளர்

ஓசூர் மாவட்டம்

பாலகிருஷ்ணன் - மாவட்ட தலைவர்

பா.வெற்றிச்செல்வன் - மாவட்ட செயலாளர் 

மு.கோவிந்தன் -  மாவட்ட அமைப்பாளர்

கிருஷ்ணகிரி மாவட்டம்

சிவ.மனோகர் - மாவட்ட தலைவர்

சின்ராசு - மாவட்ட செயலாளர்

செ.ப.மூர்த்தி - மாவட்ட அமைப்பாளர்

சிவகங்கை மாவட்டம்

கே.வி.ஜெயராமன் - மாவட்ட தலைவர் 

தமிழ்வாணன் - மாவட்ட செயலாளர்

சேலம் மாவட்டம்

கே.எம்..கணேசன் - மாவட்ட தலைவர் 

ஜெ.கருணாகரன் - மாவட்ட செயலாளர்

பி.கதிர்வேல் - மாவட்ட அமைப்பாளர்

ஆத்தூர் மாவட்டம்

மு.மோகன்ராசு - மாவட்ட தலைவர்

மு.சங்கர் - மாவட்ட பொருளாளர்

பெ.ராசா - மாவட்ட அமைப்பாளர்

பெ.கூத்தம் - மாவட்ட செயலாளர்

தஞ்சாவூர் மாவட்டம்

செ.ஏகாம்பரம் - மாவட்டதலைவர்

த.சந்துரு - மாவட்ட செயலாளர்

எம்.முருகேசன் - மாவட்ட துணைத்தலைவர்

ஆர்.ராதாகிருஷ்ணன் - மாவட்ட துணைச்செயலாளர்

மு.சுரேசு - மாவட்ட அமைப்பாளர்

போட்டோ மூர்த்தி - மாவட்ட பொருளாளர்

திண்டுக்கல் மாவட்டம்

பெ.மகேந்திரன் - மாவட்ட தலைவர்

ஆனந்தமுனிராசன் - மாவட்ட செயலாளர்

சி.ராதாகிருஷ்ணன் - மாவட்ட துணைத்தலைவர்

கருப்பசாமி - மாவட்ட துணைச்செயலாளர்

தாராபுரம் மாவட்டம்

அ.அழகப்பன் - மாவட்ட தலைவர்

மல்லிகா செல்வரசு - மாவட்ட செயலாளர் 

திருப்பத்தூர் மாவட்டம்

எம்.ஆனந்தன் - மாவட்ட தலைவர்

ஆர்.பன்னீர்செல்வம் - மாவட்ட செயலாளர் 

கே.மோகன் - மாவட்ட அமைப்பாளர்

காஞ்சிபுரம் மாவட்டம்

ஆ.வெ. முரளி - மாவட்ட தலைவர் 

ச.வேலாயுதம் - மாவட்ட செயலாளர் 

கி.இளையவேள் - மாவட்ட பொருளாளர்

ராணிப்பேட்டை மாவட்டம்

எ.ஞானப்பிரகாசனம் - மாவட்ட தலைளர் 

ந.ரமேஷ் - மாவட்ட செயலாளர் 

இ.ஆறுமுகம் - மாவட்ட பொருளாளர்

ஈரோடு மாவட்டம்

பி.பி, கணேசன் - மாவட்ட தலைவர் 

செ.காமராசு - மாவட்ட செயலாளர் 

க.மணிகண்டன் - மாவட்ட பொருளாளர் 

இரா.பார்த்திபன் - மாவட்ட துணைத்தலைவர் 

வீ.தேவராஜ் - மாவட்ட துணைத்தலைவர் 

இரா.பாஸ்கர் - மாவட்ட துணைச்செயலாளர்

கோபிசெட்டிபாளைம் மாவட்டம்

பி.காசிவிஸ்வநாதன் - மாவட்ட தலைவர் 

எம். நந்தகுமார் - மாவட்ட செயலாளர்

புதுக்கோட்டை மாவட்டம்

சாமி.இளங்கோவன் - மாவட்ட தலைவர் 

அ.பத்மாநாபன் - மாவட்ட செயலாளர்

வேலூர் மாவட்டம்

பெ.தயாளன் - மாவட்ட தலைவர்

அறந்தாங்கி மாவட்டம்

சித்ரவேல் - மாவட்ட தலைவர்

கோவை மாவட்டம்

எஸ்.ஆனந்தசாமி - மாவட்ட தலைவர்

ஆர். வெங்கடாசலம் - மாவட்ட செயலாளர் 

முத்துமாலையப்பன் - மாவட்ட பொருளாளர்

திருச்சி மாவட்டம்

எம்.தமிழ்மணி - மாவட்ட தலைவர் 

பிரிட்டோமேரி - மாவட்ட செயலாளர் 

நேதாஜி - மாவட்ட துணைத்தலைவர் 

மணிவேல் - மாவட்ட துணைச்செயலாளர்

தேனி மாவட்டம்

சுருளி  - மாவட்ட தலைவர் 

செந்தில் - மாவட்ட செயலாளர்

மணப்பாறை மாவட்டம்

சி.எம்.எஸ்.ரமேஷ் - மாவட்ட தலைவர்

பாலமுருகன் - மாவட்ட செயலாளர் பொய்கைப்பட்டி

வடசென்னை மாவட்டம்

துரை.ராவணன் - மாவட்ட தலைவர்

மு.முருகன் - மாவட்ட செயலாளர்

சுமதிகணேசன் - மாவட்ட பொருளாளர் 

தென்சென்னை மாவட்டம்

ச.மாரியப்பன் - மாவட்ட தலைவர் 

ந.ராமச்சந்திரன் - மாவட்ட செயலாளர்

ர. அன்சர் - மாவட்ட அமைப்பாளர்

கி.சரவணன் - மாவட்ட துணைச்செயலாளர்

அ.திருமலை - மாவட்ட துணைத்தலைவர்

தாம்பரம் மாவட்டம்

ம.குணசேகரன் - மாவட்ட தலைவர் 

சண்.சரவணன் - மாவட்ட செயலாளர்

மணிகண்டன் - மாவட்ட அமைப்பாளர்

திருவள்ளூர் மாவட்டம்

கி.ஏழுமலை - மாவட்ட தலைவர்

இரா.அசோக்குமார் - மாவட்ட செயலாளர் 

ஜெகத். விஜயகுமார் - மாவட்ட பொருளாளர்

த.ஸ்டீபன் மாவட்ட அமைப்பாளர்

திருச்சி மண்டலம்

முபரக்அலி - மண்டல தலைவர் 

பாச்சூர் அசோகன்- மண்டல செயலாளர்

கரூர் மாவட்டம்

ராஜாமணி - மாவட்ட அமைப்பாளர் 

அரியலூர் மாவட்டம்

மதியழகன் - மாவட்ட தலைவர்

இளவரசன் - மாவட்ட செயலாளர்

டி.கருப்புசாமி - மாவட்ட அமைப்பாளர்

கன்னியாகுமரி மாவட்டம்

ச.கருணாநிதி - மாவட்ட அமைப்பாளர்

யுவானீஸ்-செயலாளர், அமைப்பு சாரா தொழிலாளரணி

மதுரை மாவட்டம்

செல்வம் - மாவட்ட அமைப்பாளர் 

போக்குவரத்துக்கழகம் - தலைவர் - மகேஷ்

பொதுச் செயலாளர் - ரகுராமன்

பொருளாளர் - முத்துக்கருப்பன்

காரைக்குடி மாவட்டம்:

சேகர் - எஸ்இடிசி செயலாளர்

தலைவர் - சூரியமூர்த்தி

இராமநாதபுரம் மாவட்டம்

க.விஜயகுமார் - மாவட்ட அமைப்பாளர்

புதுச்சேரி மாவட்டம்

வீர.இளங்கோவன் - மாநில தலைவர் 

கே. குமார் - மாநில செயலாளர்

கடலூர் மாவட்டம்

க.சேகர் - மாவட்ட தலைவர்

தமிழரசன் - மாவட்ட அமைப்பாளர்

த.மோகன் - மாவட்ட செயலாளர்

சிதம்பரம் மாவட்டம்

பி.ஆறுமுகம் - மாவட்ட அமைப்பாளர்

விருத்தாச்சலம் மாவட்டம்

பழனிச்சாமி (வேப்பூர்) - மாவட்ட அமைப்பாளர்

கும்பகோணம் மாவட்டம்

சோழபுரம் த.ஜில்ராஜ் - மாவட்ட தலைவர்

வலங்கைமான் தி.க.தினேஷ்குமார் ச.தலைவர்

உமையாள்புரம் கண்ணன் - செயலாளர் 

குமாரமங்கலம் த.சங்கர் - துணை செயலாளர்

திருநாகேஸ்வரம் சிவகுமார்- அமைப்பாளர்