ஞாயிறு, 21 ஜூலை, 2019

ஜாதி, மதம் தொடர்பான வன்முறைகள் நாட்டின் வளர்ச்சியைக் கடுமையாகப் பாதிக்கும்!'

தொழிலதிபர் ஆதி கோத்ரெஜ்
சகிப்புத் தன்மை இல்லாமை மற்றும் ஜாதி, மதம் தொடர்பான வன்முறைகள், அதுதொடர்பான குற்றங்கள் அதிகரித்து வருவது நாட்டின் பொருளாதார வளர்ச் சியைக் கடுமையாகப் பாதிக்கும் என தொழி லதிபர் ஆதி கோத்ரெஜ் வருத்தம் தெரிவித்திருக்கிறார். நாட்டின் புகழ்பெற்ற கல்லூரிகளில் ஒன்றான மும்பை செயிண்ட் சேவியர்ஸ் கல்லூரி, 150ஆவது ஆண்டை நிறைவு செய்திருக்கிறது. இதையடுத்து கல்லூரி சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. இதுதொடர்பான நிகழ்ச்சி ஒன்றில் முன்னணி தொழிலதிபரும் அக்கல்லூரியின் முன் னாள் மாணவருமான ஆதி கோத்ரெஜ் கலந்து கொண்டார்.
அந்த நிகழ்ச்சியில் பேசிய ஆதி கோத்ரெஜ், ``நாட்டில் நிலவும் சூழல் நம்பிக்கையளிக்கக் கூடியதாக இல்லை. இதுபோன்ற சூழல் முன்னோக்கி செல்லும் நாட்டின் வளர்ச்சியைக் கடுமையாகப் பாதிக்கக்கூடியது.
மேலும், நமது உண்மையான திறன் என்னவென்பதை நம்மை உணர முடியாமலும் செய்துவிடும். அதிகரித்து வரும் சகிப்புத் தன்மை இன்மை, சமூகத்தில் நிலையற்ற தன்மை, வெறுப்பால் ஏற்படும் குற்ற சம்பவங்கள், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், ஜாதி மற்றும் மதத்தின் பெயரால் நிகழும் வன் முறைகள் போன்றவை பரவலாகக் காணப்படு கிறது. இவை சமூக நல்லிணக்கத்தைக் கெடுத்துவிடும்.'' என்றார்.
அதேபோல், கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலைவாய்ப்பின்மை 6.1 சதவிகிதமாக இருப்பதாகக் குறிப் பிட்ட அவர், இந்த பிரச்சினையை முடிந்த அளவுக்கு விரை வாகக் கையாள வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
மேலும், அதிகரித்து வரும் தண்ணீர் பஞ்சம், பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரித்தல் மற்றும் மருத்துவத் துறைக்கான சந்தை மதிப்பு அதிகரித்து வரும் நிலையில், அதற்காக செலவு செய்வது குறைந்து வருவதால், மருத்துவ வசதிகள் முடங்கும் நிலை உள்ளிட்ட பிரச்சினைகளை நாம் சரியான முறையில் எதிர்க்கொள்ள வேண்டும் என்றும் அவர் தனது பேச்சில் குறிப்பிட்டார்.
- விகடன் இணையம், 14.7.2019
- விடுதலை நாளேடு, 17.7.19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக