ஞாயிறு, 21 ஜூலை, 2019

ஜாதி, மதம் தொடர்பான வன்முறைகள் நாட்டின் வளர்ச்சியைக் கடுமையாகப் பாதிக்கும்!'

தொழிலதிபர் ஆதி கோத்ரெஜ்
சகிப்புத் தன்மை இல்லாமை மற்றும் ஜாதி, மதம் தொடர்பான வன்முறைகள், அதுதொடர்பான குற்றங்கள் அதிகரித்து வருவது நாட்டின் பொருளாதார வளர்ச் சியைக் கடுமையாகப் பாதிக்கும் என தொழி லதிபர் ஆதி கோத்ரெஜ் வருத்தம் தெரிவித்திருக்கிறார். நாட்டின் புகழ்பெற்ற கல்லூரிகளில் ஒன்றான மும்பை செயிண்ட் சேவியர்ஸ் கல்லூரி, 150ஆவது ஆண்டை நிறைவு செய்திருக்கிறது. இதையடுத்து கல்லூரி சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. இதுதொடர்பான நிகழ்ச்சி ஒன்றில் முன்னணி தொழிலதிபரும் அக்கல்லூரியின் முன் னாள் மாணவருமான ஆதி கோத்ரெஜ் கலந்து கொண்டார்.
அந்த நிகழ்ச்சியில் பேசிய ஆதி கோத்ரெஜ், ``நாட்டில் நிலவும் சூழல் நம்பிக்கையளிக்கக் கூடியதாக இல்லை. இதுபோன்ற சூழல் முன்னோக்கி செல்லும் நாட்டின் வளர்ச்சியைக் கடுமையாகப் பாதிக்கக்கூடியது.
மேலும், நமது உண்மையான திறன் என்னவென்பதை நம்மை உணர முடியாமலும் செய்துவிடும். அதிகரித்து வரும் சகிப்புத் தன்மை இன்மை, சமூகத்தில் நிலையற்ற தன்மை, வெறுப்பால் ஏற்படும் குற்ற சம்பவங்கள், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், ஜாதி மற்றும் மதத்தின் பெயரால் நிகழும் வன் முறைகள் போன்றவை பரவலாகக் காணப்படு கிறது. இவை சமூக நல்லிணக்கத்தைக் கெடுத்துவிடும்.'' என்றார்.
அதேபோல், கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலைவாய்ப்பின்மை 6.1 சதவிகிதமாக இருப்பதாகக் குறிப் பிட்ட அவர், இந்த பிரச்சினையை முடிந்த அளவுக்கு விரை வாகக் கையாள வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
மேலும், அதிகரித்து வரும் தண்ணீர் பஞ்சம், பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரித்தல் மற்றும் மருத்துவத் துறைக்கான சந்தை மதிப்பு அதிகரித்து வரும் நிலையில், அதற்காக செலவு செய்வது குறைந்து வருவதால், மருத்துவ வசதிகள் முடங்கும் நிலை உள்ளிட்ட பிரச்சினைகளை நாம் சரியான முறையில் எதிர்க்கொள்ள வேண்டும் என்றும் அவர் தனது பேச்சில் குறிப்பிட்டார்.
- விகடன் இணையம், 14.7.2019
- விடுதலை நாளேடு, 17.7.19

செவ்வாய், 2 ஜூலை, 2019

போக்குவரத்து கழகப் பொறுப்பாளர்கள்

திருச்சி புத்தூரில் 16.6.2019 ஆண்டு நடைபெற்ற மாநில தொழிலாளர் அணி பேரவை கலந்துரையாடல் கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியரால் அறிவிக்கப்பட்ட, அரசுப் போக்கு வரத்துக் கழக திண்டுக்கல் மண்டல புதிய பொறுப்பாளர்கள்

மண்டலத் தலைவர்: ச.அங்கப்பன். பொதுச் செயலாளர்: பி.இராசேந்திரன், பொருளாளர்: பெ.தங்கவேல், துணை பொதுச் செயலாளர்: ஜோசப் ஜேம்ஸ் ராஜ், துணைத் தலைவர்: ஏ.பங்கிராஜ் அந்தோணி.

- விடுதலை நாளேடு 22. 6 .19

மாநில திராவிடர் கழக தொழிலாளரணி பேரவை கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள்

போக்குவரத்துத் துறையில் பணி ஓய்வு பெற்றவர்களுக்கு உடனே பணி ஓய்வுக்கான பலன்களை அளித்திடுக

பேருந்துகளில் மீண்டும் திருவள்ளுவர் படம், திருக்குறளை இடம் பெறச் செய்க

பெல் ஒப்பந்தத் தொழிலாளர்களை உடனே நிரந்தரம் செய்க

திருச்சி, ஜூன் 17 ‘பெல்’ ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது உட்பட விவசாய தொழிலாளர்கள், போக்குவரத்து தொழிலாளர்கள் பிரச்சி னைகள் தொடர்பாக 14 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.

மாநில திராவிடர் தொழிலாளரணி பேரவை கலந்துரை யாடல் கூட்டம், திருச்சி புத்தூர், வெக்காளியம்மன் திருமண மண்டபத்தில் நேற்று (ஜூன்.16) மாலை 6 மணிக்கு நடை பெற்றது.

இக்கலந்துரையாடல் கூட்டத்தில் தி.தொ.க. பேரவை செயலாளர் குருசாமி வரவேற்புரையாற்றினார். தி.க.பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமார், மாநில வழக்குரைஞர் அணி தலைவர் வீரசேகரன், மாநில தொழிலாளரணி செயலாளர் மு.சேகர், தி.தொ.க பேரவை தலைவர் அ.மோகன், மாநில விவசாய அணி செயலாளர் இராயபுரம் கோபால்,  சென்னை தி.தொ.க. பேரவை பொருளாளர் ராசு, துணைத் தலைவர் மு.செல்வம், சிவகுருநாதன் பேரவை செயலாளர்,

மண்டல தலைவர் மு.நற்குணம், மண்டல செயலாளர் ப.ஆல்பர்ட், மாவட்ட தலைவர் ஞா.ஆரோக்கியராஜ், மாவட்ட செயலாளர் இரா.மோகன்தாஸ், மாநகர தலைவர் சி.மருதை, திருவாரூர் மாவட்ட தலைவர் மோகன்,  ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கலந்துரையாடல் கூட்டத்திற்கு தலைமை வகித்து திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி உரையாற்றினார்.

தீர்மானங்கள்

இக்கலந்துரையாடல் கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங் கள் நிறைவேற்றப்பட்டன.

1. திருவெறும்பூர் பெல் நிறுவன ஒப்பந்தத் தொழிலாளர்களை நிரந்தரப்படுத்துக.

35 ஆண்டு காலமாக திருவெறும்பூர் பெல் நிறுவனத்தி ஒப்பந்த தொழிலாளர்களாக பணியாற்றி வருபவர்களை நிரந்தரப்படுத்துமாறு இக்கூட்டம் பெல் நிறுவனத்தையும், மத்திய அரசையும் வலியுறத்துகிறது. ஒவ்வொரு ஆண்டும் தொழிலாளர்களின் கடும் உழைப்பால் லாபம் அடைந்து வரும் பெல் நிறுவனம். ஒப்பந்த தொழிலாளர்கள் விசயத்தில் அலட்சியம் காட்டி வருவது கண்டிக்கத்தக்கதாகும்.

நீதிமன்றம் உத்தரவிட்டும் கூட அதனை அலட்சியப்படுத்தி பெல் நிறுவனத்தின் சார்பில் அதற்கு மேலுள்ள நீதிமன்றங் களில் மேல் முறையீடு செய்து காலம் கடத்தி வருவது பெல் நிறுவனத்தின் தொழிலாளர் விரோத போக்கை வெளிப்படுத்து கிறது.

வேறு மாநிலங்களில் பெல் நிறுவனத்தில் பணியாற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் நிரந்தரப்படுத்தப்படுகிறார்கள். மத்திய அரசின் பல்வேறு பொதுத்துறை நிறுவனங்களிலும் ஒப்பந்த தொழிலாளர்கள் நிரந்தரப்படுத்தும் போது, திருவெறும் பூர் பெல் நிறுவனம் மட்டும் மாற்றந்தாய் மனப்பான்மையோடு செயல்படுவது ஆரோக்கியமானதும் அல்ல, விரும்பத்தக்கதும் அல்ல. இதற்கு மேலும் காலம் தாழ்த்தாமல் ஒப்பந்த தொழி லாளர்களை நிரந்தரப்படுத்துமாறு இக்கூட்டம் வலியுறுத்துகிறது.

2. விவசாயிகளுக்கு நிவாரணம் தேவை.

காவிரி நீர் பொய்த்து வருவதால், கடந்த பல வருடங்களாக விவசாய தொழிலாளர்கள் கடும் துயரத்திற்கு ஆளாகி வரும் நிலையில் விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் அளிக்க வேண்டுமென்றும், விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டுமென்றும் மத்திய மாநில அரசுகளை இக்கூட்டம் வலியுறுத்துகிறது.

3. அமைப்புச்சாரா தொழிலாளர் நலவாரிய தொழிலாளர்களின் நலன்.

தமிழ்நாடு அமைப்புச் சாரா தொழிலாளர் நல வாரியங்க ளையும், தொழிலாளர்களின் ஓய்வூதியம் மாதம் ஒன்றிற்கு ரூ.3000 வழங்க வேண்டுமென்று தமிழக அரசு ஆவன செய்யும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது. தமிழக அரசின் கீழ் செயல்பட்டு வரும் நலவாரியங்களின் தொழிலாளர்களுக்கு கிடைக்க வேண்டிய நலத்திட்ட உதவிகளை, சலுகைகளை காலம் கடத்தாமல், தொழிலாளர்களை சிரமப்படுத்தாமல் கிடைக்க ஆவன செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

4. 8 வழிச்சாலையை கைவிடுக!

நீண்ட காலமாக வாழ்ந்து வரும் ஏழை விவசாய தொழிலா ளர்களின் குடியிருப்புகளையும், உடைமைகளையும் இடித்து தள்ளும் 8 வழிச்சாலையை செயல்படுத்துவதை கைவிடு மாறு மத்திய, மாநில அரசுகளை இக்கூட்டம் வலியுறுத்துகிறது.

திருச்சி மாவட்ட அமைப்பு சாரா தொழிற் சங்க பொறுப் பாளர்கள் தலைவர் சேவியர், துணைத் தலைவர்கள் பிரான்சிஸ், ராஜப்பன், செயலாளர் பிரிட்டோ மேரி, துணை செயலாளர்கள் குணசேகரன், முருகேசன், ரங்கராஜ் மற்றும் சங்கீதா, சாந்தி, வசந்தி உள்ளிட்டோருக்கு தமிழர் தலைவர்  அடையாள அட்டை வழங்கினார். மேலும் 300 அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு அடையாள அட்டை வழங்கப் பட்டது.

5. பேருந்துகளில்

கடவுள் படங்களை நீக்குக!

அரசு போக்குவரத்து கழகங்களில் செயல்பட்டு வரும் புதிய, பழைய பேருந்துகளில் திருவள்ளுவர் படமும், திருக்குறளும் மீண்டும் இடம் பெற ஆவன செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. அரசுக்கு சொந்தமான பேருந்து களில் எவ்வித மதசம்பந்தமான கடவுள் படங்கள் இடம் பெற கூடாதென வற்புறுத்தப்படுகிறது.

6. ‘நீட்’அய் கைவிடுக!

தொழிலாளர் வீட்டு பிள்ளைகள் முதல் தலைமுறையாக படிக்க வந்துள்ள நிலையில் நீட் போன்ற நுழைவு தேர்வுகள் அவர்களின் கல்வி முன்னேற்றத்திற்கும், வளர்ச்சிக்கும் பெரும் தடையாக இருப்பதால், நீட் மற்றும் நுழைவுத் தேர்வுகளை கைவிட்டு 12 ஆம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வு செய்ய வேண்டுமென்று இக்கூட்டம் மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்துகிறது.

7. பழைய ஓய்வூதிய

திட்டத்தை கொண்டு வருக.

அரசு ஊழியர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வரும் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் கொண்டு வருமாறு தமிழக அரசை இக்கூட்டம் வலியுறுத்துகிறது.

8. மீத்தேன், ஹைட்ரோ கார்பன்

திட்டத்தை கைவிடுக

விவசாய நிலங்களை பாதிக்கும் வகையில் திணிக்கப்படும் மீத்தேன் திட்டம், ஹைட்ரோ கார்ப்பன் திட்டங்களை உடனடியாக திரும்பப் பெறுமாறு மத்திய அரசை இக்கூட்டம் வலியுறுத்துகிறது. சுற்றுச்சூழலை கடுமையாக பாதிக்கும் ஸ்டெர்லைட் ஆலையை எக்காரணத்தை முன்னிட்டும் மீண்டும் திறக்க அனுமதிக்க கூடாது என்று இக்கூட்டம் மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்துகிறது.

9. தமிழ்நாட்டவர்களுக்கு வேலை

வாய்ப்பில் முன்னுரிமை தேவை.

மத்திய அரசு அலுவலகங்கள், ரயில்வே, பெல் போன்ற நிறுவனங்களில் தமிழ்நாட்டில் படித்த பட்டதாரிகளுக்கு டிப்ளமோ இன்ஞினியரிங் படித்த இருபால் மாணவர்க ளுக்கு வேலை வழங்காமல்  வடநாட்டவர்களுக்கு வேலை வழங்கு வதை கண்டிப்பதோடு, தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு மத்திய மாநில அரசுகள் முன்னுரிமை அளித்து வேலை வழங்க வேண்டுமென இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.

10. தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் 240 வேலை முடித்த தினக்கூலி பணியாளர்களை உடனே நிரந்தரப் பணி நியமன ஆணை வழங்க வேண்டுமென இக்கூட்டம் தமிழக அரசையும், போக்குவரத்து கழகத்தையும் கேட்டுக் கொள்கிறது.

11. தமிழக அரசு போக்குவரத்து கழகத்தின் ஓய்வு பெறும் அன்றே அனைத்துப் பண பயன்களையும் வழங்க வேண்டும். மேலும் ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு கடந்த ஓராண்டிற்கு மேலாக பணி ஓய்வு பணப் பயன்கள் வழங்கப்படவில்லை. உடனே எந்தவித நிபந்தனையுமின்றி பணி ஓய்வு பலன்களை வழங்க வேண்டுமென இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.

12. தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு 42  மாதங்களாக பஞ்சப்படி உயர்வு வழங்காமல் தற்போது 155 சதவீத பயணப்படிக்கு பதிலாக தற்போது வரை 119 சதவீத பயணப்படி மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. எனவே உடனடியாக 155 சதவீத பயணப்படியை அதற்கான நிலுவை தொகை வழங்க வேண் டுமென தமிழக அரசையும், போக்குவரத்து கழகத்தையும் இக்கூட்டம் கேட்டுக் கொள்வதோடு மேலும் ஓய்வூதியம் வழங்குவதில் உள்ள குளறுபடிகளை சரி செய்து உடனடியாக ஓய்வூதியம் வழங்க வேண்டுமென இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.

13. அகில இந்தியாவில் நடத்தப்படும் ஆன்லைன் அய்.டி.அய்.அப்ரண்டிஸ் தேர்வில் வினாத்தாள் ஆங்கிலம், இந்தி மொழிகளில் மட்டுமே வழங்கப்படுகிறது. இந்த தேர்வு முறை என்பது இந்தி பேசாத மாணவர்களுக்கு மிகுந்த சிரமத்தையும் மன வேதனையையும் கொடுக்கிறது. எனவே தேர்வு வினாத்தாள் அந்தந்த மாநில மொழிகளில் வழங்கப்பட வேண்டும் என மத்திய, மாநில அரசுகளை கேட்டுக் கொள் கிறது.

14. ஆந்திராவை போல  தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகமும் அரசு துறையாக மாற்ற நடவடிக்கை     எடுக்க வேண்டுமென தமிழ்நாடு அரசை இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.

கலந்து கொண்டோர்

து.பொ.செ.தி.தொ.க. பேரவை சிவலிங்கம்,    பொ.செ.தி. தொ.க பேரவைமகேஸ், தொழிலாளரணி அணி மாவட்ட தலைவர் தருமபுரி சுபாலன்,  பெல் எல்.சி.எஸ் தலைவர் சண்முகம்,   அமைப்பு  செயலாளர் பெல் எல்.சி.எஸ் மாரியப் பன்,  பெல் தி.தொ.க. தலைவர் செ.பா.செல்வம் , பெல் தி.தொ.க. செயலாளர், அசோக்குமார்,  அமைப்பு சாரா தொழிலா ளரணி தலைவர்,   சேவியர், பெல் எல்.சி.எஸ் சாரா தொழி லாளரணி,  சிங்குராஜ், து.த.தி.தொ.க. குடந்தை மண்டலம்  வீரமணி,   பெரம்பலூர் அமைப்பாளர் பேரவைவிஜேயந்திரன்,   அமைப்பாளர் ஆட்டோ ஓட்டுநர் சங்கம், மதுரை செல்வம், பெல் எல்.சி.எஸ்,   காமராஜ், பெல் எல்.சி.எஸ்.   ராமலிங்கம்

மாநகர செயலாளர் சத்தியமூர்த்தி,  அரியலூர் மாவட்ட தொழிலாளரணி அமைப்பாளர்,சிவக்கொழுந்து  திண்டுக்கல், தலைவர் தி.தொ.க.  அங்கப்படர்  தலைவர் விவசாய அணி, பாலசுப்ரமணியன்,  தஞ்சை, , தலைவர் விவசாய அணி, திரு வாரூர், ரெத்தினசாமி தலைவர் விவசாய அணி நாகை, தங்கராசு,   அமைப்பு சாரா தொழிலாளர் அணி அமைப்பாளர் பிரிட்டோமேரி, உடுமலைதி.தொ.க. அமைப்பாளர் சிவக் குமார், விழுப்புரம் தி.தொ.க. அமைப்பாளர் கோபண்ணா,  தி.தொ.க மதுரை, ராமசாமி அமைப்பாளர் ஆட்டோ தொழிலா ளரணி, திண்டுக்கல், பெல் தி.தொ.க. தலைவர் பொன்ராஜ்  பொருளாளர் அமைப்பு சாரா தொழிலாளரணி, மு.ஆண்டி ராஜ்  ரெங்கராஜ்  பேரா.ப.சுப்ரமணி, பெல்.ம.ஆறுமுகம், மதிவாணன்,குத்புதீன், மலர்மன்னன், இளங்கோவன்,   மற்றும் போக்குவரத்து தொழிலாளர் சங்க பொறுப்பாளர்கள், அமைப்பு சாரா தொழிலாளர் சங்க பொறுப்பாளர்கள், ஆட்டோ ஓட்டுநர் சங்க பொறுப்பாளர்கள், கட்டட தொழிலா ளர் சங்க பொறுப்பாளர்கள், விவசாய தொழிலாளர் சங்க பொறுப்பாளர்கள், திருச்சி பெல் தி.தொ.க. சங்க பொறுப்பாளர்கள், ரயில்வே தொழிற்சங்க பொறுப்பாளர்கள் மற்றும் ஜெயில்பேட்டை பகுதியிலிருந்து அமைப்புச்சாரா   பெண் தொழிலாளர்கள் ஏராளமானோர்  கலந்து கொண்டனர்.

நிறைவாக அமைப்பு சாரா தொழிற்சங்கம் வசந்தி நன்றி கூறினார்.

திராவிட தொழிலாளரணிக்கு

புதிய பொறுப்பாளர்கள்

தமிழர் தலைவர் அறிவித்தார்

1. அரியலூர் மாவட்ட தொழிலாளரணி: தலைவர்  - சி. சிவக்கொழுந்து,செயலாளர் -வெ. இளவரசன்.

2. திருச்சி மாவட்ட தொழிலாளரணி: தலைவர் - தமிழ்மணி, செயலாளர் - நேதாஜி.

3. தர்மபுரி மாவட்ட தொழிலாளரணி: அமைப்பாளர் - சிசுபாலன்.

4. கிருட்டிணகிரி மாவட்ட தொழிலாளரணி: அமைப்பாளர் - தாராபுரம் சே.பா. மூர்த்தி.

5. கரூர் மாவட்ட தொழிலாளரணி: அமைப்பாளர் - ராஜாமணி.

6. தஞ்சாவூர் மாவட்ட தொழிலாளரணி: அமைப்பாளர் செ. ஏகாம்பரம்.

7. பட்டுக்கோட்டை மாவட்ட தொழிலாளரணி:  அமைப்பாளர் - மதுக்கூர் முத்து துரைராசு.

8. கும்பகோணம் மாவட்ட தொழிலாளரணி: அமைப்பாளர் - முத்துராசா கோவில் தேவராயன்பேட்டை.

9. கோவை மாவட்ட தொழிலாளரணி: அமைப்பாளர் - ஆட்டோ சக்தி.

10. நாகை மாவட்ட தொழிலாளரணி: அமைப்பாளர் - புத்தகரம் இராச. முருகையன்.

11. தென்னக இரயில்வே பொன்மலை: அமைப்பாளர் - கணேசமூர்த்தி.

12. திருவாரூர் மாவட்ட தொழிலாளரணி: அமைப்பாளர் - பி. பாலச்சந்திரன்.

13. மதுரை மாநகர் தொழிலாளரணி: தலைவர் - சி.செல்வம், செயலாளர் - தங்கராசு, மாவட்ட தொழிலாளரணி அமைப்பாளர் - மு. சண்முகசுந்தரம்.

- விடுதலை நாளேடு, 17.6.19

ஞாயிறு, 2 ஜூன், 2019

சிறீ குமார் அவர்கள் பாராட்டி வழியனுப்பப்பட்டார்!

 
        கோத்ரேஜ்  கன்சியூமர் புராடக்டு நிறுவன ( மறைமலை நகர் தொழிற்சாலை)த்தில் நிதித் துறையில் கணக்காளராக பணியாற்றிய சிறீ குமார் அவர்கள்   31.5.19ல் தானே முன்வந்து பணி ஓய்வு பெற்றார்.
       அவரை பாராட்டி வழியனுப்பும் நிகழ்ச்சி   பிற் பகல் 3.30 மணி அளவில் தொழிற்சாலை வளாகத்தில்  தொழிற் சாலை மேலாளர் பசுபதி அவர்கள் தலைமையில் பாராட்டு நிகழ்ச்சி நடைபெற் றது. .
    கோத் ரேஜ் திராவிடர் தொழிலாளர் நலச்சங்கம் சார்பில் சங்க தலைவர் த.ரமேஷ், செய லாளர் செ.ர.பார்த்தசாரதி ஆகியோரால் சால்வை அணிவிக்கப்பட்டது.
   இந்நிகழ்வில் தொழிற் சாலை, மனித வள அலுவலர் ஜோசப் மரியதாஸ் இராஜசேகர், மற்றும் தொழிலாளர்களும் அலுவலர்களும் பெருவாரியாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.



ஞாயிறு, 28 ஏப்ரல், 2019

கோத்ரேஜ் நிறுவன ஊழியர் வ.வசந்தி பணி நிறைவு பாராட்டு!

 

கோத்ரேஜ் நிறுவன ஊழியர் வ.வசந்தி பணி நிறைவு பாராட்டு!
சென்னை, ஏப்.29 கோத்ரேஜ் திராவிடர் தொழிலாளர் நலச் சங்க செயற்குழு உறுப்பினர் வ.வசந்தி அவர்கள் கோத்ரேஜ் கன்சியூமர் புராடக்டு தொழிற்சாலையில் 37 ஆண்டுகள் பணி யாற்றி 11.4.19ல் பணி ஓய்வு பெற்றார்..
அவரை பாராட்டி வழியனுப்பும் நிகழ்ச்சி  முன்கூட்டியே 10.4.19 பிற் பகல் 3.30 மணி அளவில் தொழிற்சாலை வளாகத்தில் தொழிலாளர்கள் சார்பிலும், அலுவலர்கள் சார்பிலும் தொழிற் சாலை மேலாளர் பசுபதி அவர்கள் தலைமையில் பாராட்டு நிகழ்ச்சி நடைபெற் றது. .
கோத் ரேஜ் திராவிடர் தொழிலாளர் நலச்சங்கம் சார்பில் சங்க தலைவர் த.ரமேஷ், செய லாளர் செ.ர.பார்த்தசாரதி பொருளாளர் க.நாகராஜ் மற்றும் துணைத் தலைவர் கோ.குமாரி  ஆகியோரால் சால்வை அணிவிக்கப்பட்டு, அன்பளிப்புடன் பாராட்டு கேடயமும் வழங்கப்பட்டது. சங்க துணைச் செயலாளர் ம.கருணாநிதி நூல்களை வழங்கினார்.
இந்நிகழ்வில் தொழிற் சாலை, மனித வள அலுவலர் ஜோசப் மரியதாஸ் இராஜசேகர், சங்க செயற்குழு  உறுப்பினர் பா.இயேசுராஜா மற்றும் தொழிலாளர்களும் அலுவலர்களும் பெருவாரியாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.


- விடுதலை நாளேடு, 29.4.19






திங்கள், 25 மார்ச், 2019

கோத்ரேஜ் திராவிடர் தொழிலாளர் நலச் சங்க கூட்டம்

மறைமலைநகர், மார்ச் 24  17.2. 2-019 ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 மணி அளவில் கோத்ரேஜ் திராவிடர் தொழிலாளர் நலச் சங்க துணைச் செயலாளர் கோ. கணேஷ் அவர்கள் 41 ஆண்டுகள் பணியாற்றி 23.2.2019இல் பணி ஓய்வு பெறுவதையொட்டி  கோத் ரேஜ் திராவிடர் தொழிலாளர் நலச் சங்கம் சார்பில் சங்கத் தலைவர் த.ரமேஷ் தலைமையிலும் செய லாளர் செ.ர. பார்த்தசாரதி முன் னிலையிலும் மறைமலை நகர் வள்ளுவர் மன்றத்தில் பாராட்டு நிகழ்ச்சி நடைபெற்றது.
காஞ்சிபுரம் மாவட்ட திரா விடர் கழக செயலாளர் பூ.சுந்தரம் அவர்கள் கோ.கணேஷ் அவர் களுக்கு சால்வை அணிவித்து பாராட்டினார். மறைமலைநகர் திராவிடர் கழக  நகர செயலாளர் துரை. முத்து அவர்களும் கலந்து கொண்டு பாராட்டு தெரிவித்தார். சங்க பொறுப்பாளர்களும் உறுப்பினர்களும் கலந்து கொண்டு பாராட்டு தெரிவித்தனர்.
உடன் கோத்ரேஜ் திராவிடர் தொழிலாளர் நல சங்கத்தின் 2019 ஆம் ஆண்டு புதிய பொறுப்பாளர் தேர்வும் நடைபெற்றது.
புதிய பொறுப்பாளர் பட்டியல்
தலைவர் - த.ரமேஷ். செய லாளர் - செ.ர.பார்த்தசாரதி, பொரு ளாளர் - கா.நாகராஜ், துணைத் தலைவர் - கோ.குமாரி
துணைச் செயலாளர்-  கோ.கணேஷ்,  ம.கருணாநிதி
செயற்குழு உறுப்பினர்கள் பா.இயேசுராஜா, வ.வசந்தி,  து.டில்லி
துணைத்தலைவர் கோ.குமாரி நன்றி கூறினார்.
மறைமலைநகர் நூலகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலைக்கு சங்கம் சார்பாக கோ.கணேஷ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.


- விடுதலை நாளேடு, 24.3.19

கோத்ரேஜ் திராவிடர் தொழிலாளர் நலச் சங்க கூட்டம்

மறைமலைநகர், மார்ச் 24  17.2. 2-019 ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 மணி அளவில் கோத்ரேஜ் திராவிடர் தொழிலாளர் நலச் சங்க துணைச் செயலாளர் கோ. கணேஷ் அவர்கள் 41 ஆண்டுகள் பணியாற்றி 23.2.2019இல் பணி ஓய்வு பெறுவதையொட்டி  கோத் ரேஜ் திராவிடர் தொழிலாளர் நலச் சங்கம் சார்பில் சங்கத் தலைவர் த.ரமேஷ் தலைமையிலும் செய லாளர் செ.ர. பார்த்தசாரதி முன் னிலையிலும் மறைமலை நகர் வள்ளுவர் மன்றத்தில் பாராட்டு நிகழ்ச்சி நடைபெற்றது.

காஞ்சிபுரம் மாவட்ட திரா விடர் கழக செயலாளர் பூ.சுந்தரம் அவர்கள் கோ.கணேஷ் அவர் களுக்கு சால்வை அணிவித்து பாராட்டினார். மறைமலைநகர் திராவிடர் கழக  நகர செயலாளர் துரை. முத்து அவர்களும் கலந்து கொண்டு பாராட்டு தெரிவித்தார். சங்க பொறுப்பாளர்களும் உறுப்பினர்களும் கலந்து கொண்டு பாராட்டு தெரிவித்தனர்.

உடன் கோத்ரேஜ் திராவிடர் தொழிலாளர் நல சங்கத்தின் 2019 ஆம் ஆண்டு புதிய பொறுப்பாளர் தேர்வும் நடைபெற்றது.

புதிய பொறுப்பாளர் பட்டியல்

தலைவர் - த.ரமேஷ். செய லாளர் - செ.ர.பார்த்தசாரதி, பொரு ளாளர் - கா.நாகராஜ், துணைத் தலைவர் - கோ.குமாரி

துணைச் செயலாளர்-  கோ.கணேஷ்,  ம.கருணாநிதி

செயற்குழு உறுப்பினர்கள் பா.இயேசுராஜா, வ.வசந்தி,  து.டில்லி

துணைத்தலைவர் கோ.குமாரி நன்றி கூறினார்.

மறைமலைநகர் நூலகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலைக்கு சங்கம் சார்பாக கோ.கணேஷ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

- விடுதலை நாளேடு, 24.3.19

செவ்வாய், 26 பிப்ரவரி, 2019

கோத்ரேஜ் நிறுவன(மறைமலை நகர்) ஊழியர் பணி நிறைவு பாராட்டும் புதிய பொறுப்பாளர் தேர்வும்

17.2.19 ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 மணி அளவில் கோத்ரேஜ் திராவிடர் 
தொழிலாளர் நலச் சங்க துணைச் செயலாளர் கோ.கணேஷ் அவர்கள் 41 
ஆண்டுகள் பணியாற்றி 23.2.19ல் பணிஓய்வு பெறுவதையொட்டி  கோத்ரேஜ் 
திராவிடர் தொழிலாளர் நலச் சங்கம் சார்பில் சங்கத் தலைவர் த.ரமேஷ் 
தலைமையிலும் செயலாளர் செ.ர. பார்த்தசாரதி முன்னிலையிலும் 
மறைமலை நகர் வள்ளுவர் மன்றத்தில் பாராட்டு நிகழ்ச்சி நடைபெற்றது.
காஞ்சிபுரம் மாவட்ட திராவிடர் கழக செயலாளர் பூ.சுந்தரம் அவர்கள் 
கோ.கணேஷ் அவர்களுக்கு சால்வை அணிவித்து பாராட்டினார். 
மறைமலைநகர் திராவிடர் கழக  நகர செயலாளர் துரை. முத்து அவர்களும் 
கலந்துகொண்டு பாராட்டு தெரிவித்தார். சங்க பொறுப்பாளர்களும் 
உறுப்பினர்களும் கலந்து கொண்டு பாராட்டு தெரிவித்தனர்.

உடன் 'கோத்ரேஜ் திராவிடர் தொழிலாளர் நல சங்கத்'தின் 2019 ஆம் ஆண்டு 
புதிய பொறுப்பாளர் தேர்வும் நடைபெற்றது.

புதிய பொறுப்பாளர் பட்டியல்

தலைவர் - த.ரமேஷ்
செயலாளர் - செ.ர.பார்த்தசாரதி
பொருளாளர் - கா.நாகராஜ்
துணைத் தலைவர் - கோ.குமாரி
துணைச் செயலாளர்- 1.கோ.கணேஷ், 2.ம.கருணாநிதி

செயற்குழு உறுப்பினர்கள்
1.பா.இயேசுராஜா
2.வ.வசந்தி
3.து.டில்லி
 துணைத்தலைவர் கோ.குமாரி நன்றி கூறினார்.

மறைமலைநகர் நூலகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் 
சிலைக்கு சங்கம் சார்பாக கோ.கணேஷ் அவர்கள் மாலை அணிவித்து 
மரியாதை செலுத்தினார்.







இணைப்புகளின் பகுதி

ஞாயிறு, 17 பிப்ரவரி, 2019

துணைச் செயலாளர் கோ.கணேஷ் பணிஓய்வு பாராட்டு நிகழ்ச்சி

        17.2.19 மாலை 4.30 மணி அளவில் கோத்ரேஜ் திராவிடர் தொழிலாளர் நலச் சங்க துணைச் செயலாளர் கோ.கணேஷ் அவர்கள் 41 ஆண்டுகள் பணியாற்றி 23.2.19ல் பணிஓய்வு பெறுவதையொட்டி கோத்ரேஜ் திராவிடர் தொழிலாளர் நலச் சங்கம் சார்பில் சங்கத் தலைவர் த.ரமேஷ் தலைமையிலும் செயலாளர் செ.ர. பார்த்தசாரதி முன்னிலையிலும் மறைமலை நகர் வள்ளுவர் மன்றத்தில் பாராட்டு நிகழ்ச்சி நடைபெற்றது.
        காஞ்சிபுரம் மாவட்ட திராவிடர் கழக செயலாளர் பூ.சுந்தரம் அவர்கள் கோ.கணேஷ் அவர்களுக்கு சால்வை அணிவித்து பாராட்டினார். மறைமலைநகர் திராவிடர் கழக நகர செயலாளர் துரை. முத்து அவர்களும் கலந்துகொண்டு பாராட்டு தெரிவித்தார். 
சங்க பொருளார் க.நாகராஜ், துணைச் செயலாளர்-2 ம.கருணாநிதி, து.டில்லி ஆகியோரும் மற்றும் சங்க  உறுப்பினர்களும் கலந்து கொண்டு பாராட்டு தெரிவித்தனர்.
துணைத் தலைவர் கோ.குமாரி  அவர்கள் அனைவருக்கும் நன்றி கூறினார்.




மறைமலைநகர் வள்ளுவர் மன்றத்தில் நடந்த பாராட்டு விழாவிற்கு(17.2.19 மாலை 4.30 மணி) பின் மறைமலை நகரில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு கோத்ரேஜ் திராவிடர் தொழிலாளர் நல சங்கத்தின் துணை செயலாளர் கோ.கணேஷ் அவர்கள் பணி ஓய்வு பெறுவதையொட்டி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 
அங்கு வந்த கோத்ரேஜ் தொழிற்சாலையின் மேனாள் மேலாளர் இளந்திரையன் அவர்கள் கோ.கணேஷ் அவர்களை பாராட்டினார்.