ஞாயிறு, 12 ஜூலை, 2015

''கோத்ரேஜ் திராவிடர் தொழிலாளர் நலச் சங்கம்'' அறிவிப்பு பலகை திறப்பு!2.10.2014 முற்பகல் 10.00 மணி

கோத்ரேஜ் தொழிற்சாலை வாயில் அருகில்
''கோத்ரேஜ் திராவிடர் தொழிலாளர் நலச் சங்கம்''
அறிவிப்பு பலகை திறப்பு!
2.10.2014 முற்பகல் 10.00 மணி அளவில் மறைமலை நகர் தொழிற்பேட்டை, கோத்ரேஜ் தொழிற்சாலை வாயில் அருகில் ''கோத்ரேஜ் திராவிடர் தொழிலாளர் நலச் சங்கம்'' அறிவிப்பு பலகை திறப்பு மற்றும் தந்தை பெரியார் 136வது பிறந்த நாள் விழா நடைபெற்றது



கோத்ரேஜ் தொழிற்சாலை வாயில் அருகில் கோத்ரேஜ் திராவிடர் தொழிலாளர் நலச் சங்கம் அறிவிப்பு பலகை திறப்பு!
மறைமலைநகர், அக்.5_ 2.10.2014 முற்பகல் 10 மணிக்கு மறைமலை நகர் தொழிற்பேட்டை, கோத்ரேஜ் தொழிற்சாலை வாயில் அருகில் ''கோத்ரேஜ் திராவிடர் தொழிலாளர் நலச் சங்கம்'' அறிவிப்பு பலகை திறப்பு மற்றும் தந்தை பெரியார் 136ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா நடைபெற்றது.

நெய்வேலி வே.ஞான சேகரன்(திராவிடர் கழக வடக்கு மண்டல அமைப...
் புச் செயலாளர்) தலைமை யில், த.ரமேஷ் (சங்கத் தலைவர்), கூடுவாஞ் சேரி இராசு(மாநில பொரு ளாளர், திராவிடர் தொழி லாளர் கழகப் பேரவை), இரா.வில்வநாதன் (திரா விடர் கழக தென் சென்னை மாவட்டத் தலைவர்) மற்றும் துரை.முத்து (திரா விடர் கழக நகரத் தலைவர், மறைமலை நகர்) ஆகியோர் முன்னிலையில் அ.கோ. கோபால்சாமி (செங்கல் பட்டு மாவட்ட திராவிடர் கழகத் தலைவர்) கோத் ரேஜ் கன்சியூமர் புராடக்டு லிமிடெட் தொழிற்சாலை வாயில் அருகில் ''கோத்ரேஜ் திரா விடர் தொழிலாளர் நலச் சங்கம்'' அறிவிப்பு பலகையை திறந்து வைத் தார். செ.ர.பார்த்த சாரதி (சங்கப் பொதுச் செயலாளர் மற்றும் திராவிடர் கழக தென் சென்னை மாவட்டச் செயலாளர்) வரவேற்புரை யாற்றினார். கோ.வீ.ராகவன் (திரா விடர் கழக தென் சென்னை மாவட்டத் துணைச் செய லாளர்) கி.நீலகண்டன் (தலைவர்,பேரமனூர் திராவிடர் கழகம்), திருக் குறள் வெங்கடேசன் (திரா விடர் கழகம், மறைமலை நகர்), செங்கை சுந்தரம் (திராவிடர் கழக நகரத் தலைவர், செங்கல்பட்டு நகரம்), ம.கருணாநிதி(சங்கத் துணைச் செயலாளர் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட திராவிடர் கழக இளைஞரணித் தலைவர்) மற்றும் கோ.குமாரி (சங்க துணைத் தலைவர்) ஆகி யோர் உரையாற்றினர். செ.ர.பார்த்தசாரதி அவர்கள் கோத்ரேஜ் கன்சியூமர் புராடக்டு லிமிட்டு தொழிற் சாலையில் 30ஆண்டுகள் பணியாற்றியுள்ளதை பாராட்டி திராவிடர் கழகம் சார்பில் நெய்வேலி வே. ஞானசேகரன், அ.கோ. கோபால்சாமி ஆகியோரால்  பயனாடை அணிவிக் கப்பட்டது து.டில்லி (சங்கத் துணைச் செயலாளர்), வ.வசந்தி, எம்.கே.சூரியகலாவதி, கே.சிவ காமி(சங்க செயற்குழு உறுப்பினர்கள்), ப.முருகன் (செங்கல்பட்டு மாவட்ட திராவிடர் கழக துணைச் செயலாளர்), நா.நாகப்பன் (திராவிடர் கழக நகரச் செயலாளர், செங்கல்பட்டு நகரம்), க.தனசேகரன் (திரா விடர் கழகம்), களியப் பேட்டை தமிழ்மணி (திராவிடர் கழகம்), ர.தனம், க.மணிமொழி, ஆட்டோ ராஜா ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். சங்கம் சார்பில் அனை வருக்கும் பயனாடை அணி வித்தனர். அதேபோல் திராவிடர் கழகம் சார்பில் சங்க பொறுப்பாளர்களுக்கு பயனாடை அணிவிக்கப் பட்டது. சங்க பொருளாளர் கா.நாகராஜ் நன்றி கூற நிகழ்ச்சி முடிவுற்றது.

-விடுதலை நாளேடு,05.10.14


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக