ஞாயிறு, 31 அக்டோபர், 2021

கோவையில் திராவிடர் தொழிலாளரணி புதிய பொறுப்பாளர்களுக்கு பாராட்டு!

 

   August 10, 2021 • Viduthalai

கோவைஆக. 10 - கோவை தமிழ் நாடு பெரியார் கட்டுமான அமைப்பு சாரா தொழிலாளர்  சங்கத்தின் புதிய நிர்வாகிகள் கமிட்டிக் கூட்டம் கோவை சுந்தராபும் அருகில் காம ராஜர் நகர் கண்ணப்பன் அரங்கில் 8.8.2021 மாலை 4 மணி அளவில் மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் .சந்திரசேகர் அவர்கள் தலைமை யில் நடைபெற்றது.

மாவட்டச் செயலாளர் தி.செந்தில்நாதன்மாவட்ட அமைப் பாளர் மு.தமிழ்ச்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்து கழகப் பொறுப் பாளர்கள் அனைவரும் கருத்துரை வழங்கினர்.

தொடர்ந்து மாநகர தலைவர் புலியகுளம் .வீரமணிகுனியமுத் தூர் குதி கழகப் பொறுப்பாளர் வே.தமிழ்முரசு உள்ளிட்டோர் வாழ்த் துரையும் வழங்கி சிறப்பித்தனர்.

தொடர்ந்து புதிதாக தேர்வு செய் யப்பட்ட நலச்சங்க நிர்வாகிகள்செயற்குழு உறுப்பினர்கள் அனை வருக்கும் மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் பயனாடை அணிவித்து பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

நிகழ்வில் இளைஞரணி தோழர் தி..வெற்றிச்செல்வன்கணேசன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியை சிறப்பாக தொழி லாளரணி செயலாளர் ஆர்.வெங்க டாசலம் ஒருங்கிணைத்தது குறிப் பிடத்தக்கது.

நிறைவாக கே.முத்துமாலையப் பன்  நன்றியுரையாற்றினார்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்.

தீர்மானம்: 1

கோவை அமைப்பு சாரா தொழி லாளர்  சங்கத்திற்கு புதிய நிர்வா கிகளை பரிந்துரை செய்த மாவட்ட திராவிடர் கழக நிர்வாகத்திற்கும் மாநில பொறுப்பாளர்களுக்கும் நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற் றப்பட்டது.

தீர்மானம்: 2.

தமிழ்நாடு பெரியார் கட்டுமான அமைப்பு சாரா தொழிலாளர்கள் நலச்சங்கம் கோவை மாவட்ட தலை வர் எஸ்னந்தசாமி ,செயலாளர் ஆர்வெங்கடாச்சலம்பொருளாளர் கே.முத்துமாலையப்பன்துணைத் தலைவர் ஆனந்தராஜ் , துணை செயலாளர் எஸ்செல்வகுமார்மற்றும் செயற்குழு றுப்பினர்களாக கார்த்திக்இருதயராஜ்சம்பத்முருகானந்தம்ஜெயக்குமார்வெங் கடேஷ்குரு, பொன்ராஜ்ராஜேந் திரன்காமராஜ்ராமுஆகியோர் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தீர்மானம் 3

புதியதாக தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகள் அனைவரும் ஒன்றி ணைந்து மாவட்டத்தில் உள்ள அனைத்து குதிகளிலும் கட்டு மானம் அமைப்புசாரா தொழிலாளர் கள் அந்தந்த குதிகளில் உள்ள நிர்வாகிகள் சந்தித்து சங்கத்திற்கு உறுப்பினர்களாக சேர்த்து நலவாரி யத்தில் திவு செய்து நலவாரிய சலுகைகளை பெற்றுத் தர உறுதியாக செயல்படுவோம் என தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.

தீர்மானம் 4

கோவை மாவட்ட நிர்வாகிகள் எந்த ரு சூழ்நிலையிலும் மாநில தலைமையிடம் தெரிவிக்காமல் செயல்படக் கூடாது என தீர்மானம் நிறைவேற்றப் படுகிறது.

தீர்மானம் 5

கோவை மாவட்டத்தில் உள்ள கழக அனைத்து தோழர்களையும் தோழியர்களையும் நலவாரியத்தில் இணைத்து பயன்பெற இச்சங்கத்தின் சார்பாக தீர்மானம் நிறைவேற்றப் படுகிறது.

வியாழன், 28 அக்டோபர், 2021

தொழிலாளர் முன்னேற்ற சங்க பேரவைத் தலைவர் மு.சண்முகத்துடன் திராவிடர் தொழிலாளர் கழகப் பொறுப்பாளர்கள் சந்திப்பு


     August 22, 2021 • Viduthalai

சென்னைஆக. 22- திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் வழிகாட்டுதலின்படி 18.8.2021 அன்று காலை 11 மணிக்கு திமுக மாநிலங் களவை உறுப்பினரும்தொழிலாளர் முன்னேற்ற சங்க பேரவை தலைவரு மா மு.சண்முகம் அவர் களை திராவிடர் தொழி லாளர் கழகப் பேரவை தலைவர் .மோகன்பேரவை பொதுச் செய லாளர் மு.சேகர்பேரவை பொருளாளர் மா.இராசுதிருச்சி பெல் தொழிற்சங்க பொறுப்பாளர்கள் ஜி.கண்ணன்எஸ்.நாதன்ஜி.அந்தோணிசாமி ஆகியோர் சந்தித்து பெல் தொழிலாளர்கள் சம்பந்தமான கோரிக்கை மனு வழங்கப்பட்டதுமுசண்முகம் வர்களுக்கு பயனாடை அணிவிக்கப் ட்டு வாழ்வியல் சிந்தனை புத்தகம் வழங்கப்பட்டதுஎல்பிஎப் பேரவை தலை வர்பேரவை பொருளா ளர் ஆகியோர் உடன் இருந் தனர்.  அவர்களுக்கும் சிறப்பு செய்யப்பட்டது.

மு.சண்முகம் அவர் களின் ஆலோச னைப்படி ஒன்றிய தொழிலாளர் இணை ஆணையாளர் அவர்களை சந்தித்து மனு கொடுக்கப்பட்டது.

பெரியார் திடலில் திராவிடர்கழகத் துணைத்தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களை தொழிலாளர் அணியின் சார்பாக பிறந்த நாள் (15,8,2021) வாழ்த்து தெரிவித்து சிறப்பு செய்யப்பட்டது.

பெல் நிறுவனத்தில் ஒப்பந்த தொழிலாளர்கள் பணி நிரந்தரம் செய்யப்பட நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மக்களவை உறுப்பினரிடம் மனு

 

August 10, 2021 • Viduthalai

திருப்பூர்ஆகஸ்ட் 10 - திருச்சி மாவட் டம்,திறுவெறும்பூர் அருகே இந்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும்  பெல் நிறுவனத்தில் கடந்த 40 ஆண்டுகளாக பணியாற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் 850 க்கும் மேற்பட் டோர் பணி நிரந்தரம் செய்யப்பட டவடிக்கை எடுக்க வலியுறுத்தி திருப் பூர் மக்களவை உறுப்பினரும்,இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு துணை செயலாளருமான கே.சுப்பரா யன் அவர்களிடம் திருச்சி,பெல் வளாக ஒப்பந்த தொழிலாளர் நலச்சங்கத்தினர் 8.8.2021 அன்று திருப்பூரில் மனு அளித்துள்ளனர்.

அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ள தாவது ; திருவெறும்பூர் அருகில் செயல் பட்டு வரும் பெல் நிறுவனத்தில் 1978 ஆம் ஆண்டு பெல் நிர்வாகத்தால் துவங் கப்பட்ட "பெல் லேபர் காண்ட்ராக்ட் சொசைட்டி"  மூலம் கடந்த 40 ஆண்டு களாக பெல் நிறுவனத்தில் நிரந்தர பணியாளர்களுக்கு இணையாக ஒப் பந்த தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.பெல் நிர்வாகம் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு எவ்வித சலுகை யும் வழங்கவில்லை,தொழிற்சங்கங்க ளின் தொடர் நடவடிக்கைகளால் ஒரு சி சலுகைகள்  தொழிலாளர்களுக்கு கிட்டியுள்ளதுபெல் நிர்வாகம் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்காமல் குறைந்த பட்ச ஊதியத் தையே தொடர்ந்து வழங்கி வருகிறது.இது குறித்து கடந்த 26.10.2020 அன்று பெல் நிர்வாகத்திற்கு கடிதம் கொடுத் தோம்.அது தொடர்பாக எந்த நட வடிக்கையும் மேற்கொள்ளப்பட வில்லை.இதைத் தொடர்ந்துஇந்திய தொழிலாளர் நல அமைச்சர் மற்றும் தொழிலாளர் நல ஆணையர் ஆகி யோருக்கு மனு கொடுத்தோம்.அந்த மனுக்கள் தொடர்பாக பெல் நிர்வா கத்திற்கு இந்திய தொழிலாளர் நல அமைச்சகம் வாயிலாக கடிதம் வரப் பெற்றுள்ளது.

ஒப்பந்த தொழிலாளர்களை நிரந் தர படுத்தாமலும்,ஊதிய உயர்வு வழங் காமலும் பெல் நிர்வாகம் வஞ்சித்து வருவதால் தற்போது 850 க்கும் மேற் பட்ட தொழிலாளர்கள் வாழ்வாதாரம் குன்றிய நிலையில் உள்ளனர்.ஒப்பந்த தொழிலாளர்களுக்கு கடந் 6 மாதத் திற்கு மேலாக .எஸ்.ய் மருத்து வமனை மூலம் மருத்துவம் பார்க்கும் வசதியும் மறுக்கப்பட்டுள்ளது.அதற்கு இந்திய அரசை பெல் நிர்வாகம் கார ணம் காட்டி வருகிறது.இந்திய அரசின் கட்டுப்பாட்டிலுள்ள பொதுத்துறை நிறுவனமான பெல் நிறுவனத்தில் தொடர்ந்து வரும் தொழிலாளர் விரோ ப்போக்கை முறியடித்து,ஒப்பந்த தொழிலாளர்கள் பணி நிரந்தரம் செய்யப்படவும்,அவர்களுக்கான சலுகைகள் தொடர்ந்து கிடைக்கவும் தாங்கள் தலையிட்டு ஆவன செய்யு மாறு கேட்டுக் கொள்கிறோம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

நிகழ்வில்திருச்சி பெல் வளாக ஒப்பந்த தொழிலாளர் நலச்சங்கத்தின் தலைவர் வி.சண்முகம்செயலாளர் முசேகர்துணை செயலாளர் .துரையப் பன்இணை செயலாளர் சு.நாதன்தாராபுரம் கழக மாவட்ட திராவிடர் கழக செயலாளர் .சண்முகம் மற்றும் சங்க உறுப்பினர்கள் ஆரோக்கிய சாமிஅந்தோணி தாஸ் கியோர் பங்கேற்று மனு அளித்தனர்.

மனுவை பெற்றுக்கொண்ட திருப் பூர் மக்களவை உறுப்பினர் தெரிவித் தாவது:

எந்த நிறுவனமாக இருந்தாலும் நீண்ட காலமாக பணியாற்றி வரும் தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்யாமலும்தொழிலாளர்களுக்குரிய லுகைகளை வழங்காமலும் இருப்பது ச்சநீதி மன்ற தீர்ப்புக்கு எதிரானதுஇந்த கோரிக்கை தொடர்பாக விரி வான அறிக்கை தயார் செய்து, இம்மாத இறுதியில் டெல்லி சென்று .அய்டி.யு.சி.இன் அகில இந்திய பொதுச் செயலாளரை கலந்து கொண்டு,துறை சார்ந்த மத்திய அமைச்சர்,பெல் நிறு வன சேர்மன் ஆகியோரை சந்தித்து வெகு விரைவில் அணுக்கமான தீர்வு காணப்படும் என்றார்.

சனி, 7 ஆகஸ்ட், 2021

அமைச்சர்களுடன் திராவிடர் தொழிலாளர் கழகப் பொறுப்பாளர்கள் சந்திப்பு

 

            July 29, 2021 • Viduthalai

சென்னைஜூலை 29- தமிழர் தலைவர் அவர்களின் வழிகாட்டுதலின்படி 27.7.2021 அன்று திராவிடர் தொழிலாளர் கழகப் பேரவையின் பொறுப்பாளர்கள் பேரவைத் தலைவர் .மோகன், பொதுச்செயலாளர் மு.சேகர்பொருளாளர் மா.இராசுமதுரை சிவகுருநாதன்இராமசாமி.முத்துக்கருப்பன்மகேஷ்விழுப்புரம் கோபன்னாசக்ரவர்த்திமடத்துக்குளம் சிவக்குமார் ஆகியோர் தலைமைச் செயலகத்தில் போக்குவரத்துத்துறை மைச் சர் இராஜகண்ணப்பன்தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசன்நகர்ப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சர் கே.என்.நேரு ஆகிய அமைச் ர்களை சந்தித்து ஆசிரியர் எழுதி ‘பெரியார் வெறும் சிலையல்லன்ற புத்தகங்கள் வழங்கப்பட்டு கோரிக்கை மனுக்களும் கொடுக்கப்பட்டன.

அனைத்து அமைச்சர் களும் ஆசிரியர் அவர்களது நலம் விசாரித்ததோடு உங்கள் கோரிக்கை அனைத்தும் நிறைவேற்றப்படும் என்ற வாக்குறுதியும் அளித்தார்கள்அதன்பின் கட்டுமான வாரியத் தலைவர் பொன்குமார் அவர்களையும் சந்தித்து கோரிக்கை விண்ணப்பம் வழங்கப் பட்டது.