புதன், 13 பிப்ரவரி, 2019

பணி நிறைவு பாராட்டு

31.12.2018 அன்று நெய்வேலி முதலாம்  அனல் மின் நிலைய அலுவலகத்தில், 34 ஆண்டுகாலம் என்எல்சி இந்தியா நிறுவனத்தில் சிறப்பு முதுநிலை ஓட்டுநராக பணிபுரிந்த கம்மாபுரம் ஒன்றிய தலைவர் நா.பாவேந்தர் விரும்பி அவர்களுக்கு பணி நிறைவு பாராட்டு விழா நடைபெற்றது, முதன்மை பொது மேலாளர் சேரன் அவர்களும் பொது மேலாளர் சம்பத் அவர்களும், திராவிடர் கழக பொதுச்செயலாளர் துரை.சந்திரசேகரன் அவர்களும் பணி நிறைவு பாராட்டு விழாவில் கலந்து கொண்டு சிறந்த முறையில் பணி செய்து 34 ஆண்டுகாலம் தன் உழைப்பை என்எல்சி நிறுவனத்துக்கு வழங்கி சிறு விபத்து கூட இல்லாமல் ஓட்டுநராக தன் பணியை நிறைவு செய்ததை நினைவு கூர்ந்து வாழ்த்தினார்கள். உதவி மேலாளர் மனிதவளம் என்எல்சி இந்தியா விசயலட்சுமி பாவேந்தர், அவர்களின் மகள் வி.பா.தமிழ் பொன்னி அ.கனிமொழி ஆகியோர் உடனிருந்தனர். இதன் மகிழ்வாக விடுதலை வளர்ச்சி நிதியாக 500 ரூபாய் வழங்கினார்

- விடுதலை நாளேடு, 5.2.19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக