வெள்ளி, 30 அக்டோபர், 2015
வியாழன், 1 அக்டோபர், 2015
பெல் வாயிற் கூட்டத்தில் செயலவைத் தலைவர் பேச்சு
ஒப்பந்த தொழிலாளர்களை பணிநிரந்தரம் செய்யவில்லையென்றால்
வலுவான ஒன்றிணைந்த போராட்டத்தினை திராவிடர் கழகம் நடத்தும்
பெல் வாயிற் கூட்டத்தில் செயலவைத் தலைவர் பேச்சு
வலுவான ஒன்றிணைந்த போராட்டத்தினை திராவிடர் கழகம் நடத்தும்
பெல் வாயிற் கூட்டத்தில் செயலவைத் தலைவர் பேச்சு
திருச்சி, அக்.1-_ பெல் ஒப்பந்த ஊழியர்களின் பணி நிரந்தரம் குறித்து திராவிடர் தொழிலாளர் கழகம் சார்பில் தொடுக்கப் பட்டுள்ள வழக்கு தொடர் பான வாயிற் கூட்டம் செப்.14ஆம் தேதி மாலை 4 மணியளவில் பெல் பயிற்சி பள்ளி அம்பேத்கர் சிலை அருகில் நடை பெற்றது.
இந்த வாயிற் கூட்டத் திற்கு பெல் வளாக ஒப்பந் தத் தொழிலாளர் நல செய லாளர் மு.சேகர் தலைமை தாங்கினார். மண்டல தலைவர் ஞா.ஆரோக்கிய ராஜ், மாவட்ட செயலாளர் ச.கணேசன், திருவெறும்பூர் ஒன்றிய தலைவர் மாரி யப்பன் செயலாளர் தமிழ்ச் சுடர், ஆண்டிராஜ், சுதர்சன், செல்வம், சிவகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பெல் வளாக ஒப்பந்தத் தொழிலாளர் நல சங்கத் தலைவர் வி.சண்முகம் வரவேற்புரையாற்றினார். பெல் தி.தொ.க தலைவர் ம.ஆறுமுகம் தொடக்கவுரை யாற்றினார். இவ்வாயிற் கூட்டத்தில் கலந்து கொண்டு செயலவை தலைவர் சு.அறிவுக்கரசு அவர்கள் பேசும்போது:_
பெல் நிறுவனத்தில் இரண்டு வகை பணியா ளர்கள் பணியாற்றி வருகின் றனர். ஒன்று நிரந்தர பணி யாளர்கள், மற்றொன்று ஒப்பந்த பணியாளர்கள். இதில் 1174 பேர் ஒப்பந்தத் தொழிலாளர்களாக பணி யாற்றி வருகின்றனர்.
இந்த ஒப்பந்தத் தொழிலா ளர்களை பணி நிரந்தரம் செய்வதற்கு பெல் நிரு வாகம் மறுத்து வருகிறது. 1978 முதல் ஒப்பந்தத் தொழிலாளர்கள் முறை இருந்து வருகிறது. ஒப் பந்தத் தொழிலாளர்களுக்கு அனைத்தும் பெல் நிரு வாகத்தின் தனிஅதிகாரி யாக இருப்பவர்தான் செய்து வருகிறார். ஆனால் தொழி லாளர்களை நிரந்தப்படுத் துவது தொடர்பான பேச்சு வார்த்தையில் வழக்கு என்று வரும் போது, இந்த ஒப்பந்த தொழிலாளர்களுக் கும், எங்களுக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது என நிருவாகம் கூறி வருகின்றது.
இது தொடர்பான முத்தரப்பு பேச்சு வார்த் தைக்கும், எந்தவித கோரிக் கைக்கும் காது கொடுத்து கேட்காத நிலையில் நிருவாகம் இருப்பதால்தான் திராவிடர் தொழிலா ளர்கள் கழகம் ஒரு வழக்கு போட்டுள்ளது. அதில் தீர்ப்பையும் பெற்றுள்ளது. அந்த தீர்ப்பில் 8 வார காலத்திற்குள் பெல் நிரு வாகம் நடைமுறைப்படுத்த வேண்டுமென கூறியுள்ளது. அதிலும் மெத்தனம் காட்டிக் கொண்டு இருப்பது தான் வேதனை அளிக்கிறது.
தொழிலாளர்களுக்கு நன்மை செய்யவிட்டாலும் தீமை செய்யாமல் இருந் தாலே போதும். இந்த 8 வார காலத்திற்காகாத்தான் நாங்கள் காத்துக் கொண்டி ருக்கிறோம். பெல் நிரு வாகம் எடுக்கும் முடிவை பொறுத்துதான் எங்களது அடுத்தக் கட்ட நட வடிக்கை இருக்கும். இல்லை யென்றால் வலுவான ஒன்றிணைந்த போராட் டத்தினை திராவிடர் கழகம் நடத்தும் என்று அவர் பேசினார்.
இந்த வாயிற் கூட்டத் திற்கு எல்.எல்.எப். இளந் தமிழன், சண்முகம், ராம தாஸ், சிங்கராசு, துரையப் பன், அசோகன், சங்கிலி, காமராஜ், ராமலிங்கம், பாஸ்கர், மணிமாறன், பெரியசாமி, கோவிந்தராஜ், நாதன், கருப்புசாமி உள் ளிட்ட ஏராளமான நிரந்தர ஊழியர்களும், ஒப்பந்த ஊழியர்களும், அலுவலர் களும், அதிகாரிகளும் கலந்து கொண்டனர். நிறை வாக கவிஞர் விடுதலை கிருட்டிணன் நன்றி கூறினார்.
-விடுதலை,1.10.15
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)