வெள்ளி, 9 ஆகஸ்ட், 2024

போக்குவரத்து தொழிற்சங்கங்கள் பேச்சுவார்த்தை

 


விடுதலை நாளேடு

சென்னை, ஜூலை 25- நேற்று (24.07.2024) மாலை 4.00 மணிக்கு சென்னை தேனாம்பேட்டை தொழிலாளர் இணை ஆணையர் அலுவலகத்தில் தொழிலாளர் இணை ஆணையர் முன்னிலையில் தொழிற்சங்கங்கள் போக்குவரத்துக் கழக நிர்வாகங்களுக்கு இடையேயான பேச்சுவார்த்தை நடைபெற்றது. திராவிடர் தொழிலாளர் பேரவை சார்பில் பேரவைத் தவைவர் கருப்பட்டி கா.சிவா கலந்துகொண்டார்.

அதில் பல்வேறு தொழிற்சங்கங்களும் பல கருத்துக்களை கூறிய நிலையில் நமது பேரவை சார்பில் பேரவை தலைவர் கருப்பட்டி சிவா அவர்கள் போக்குவரத்து கழகங்களில் தனியார் நிறுவனங்கள் மூலம் தற்காலிக பணிக்கு தொழிலாளர்களை நியமிப்பது என்பது அரசின் சமூக நீதிக் கோட்பாட்டிற்கு விரோதமானது. எனவே நிர்வாகமே கூட தினக்கூலி தொழிலாளர்களை எடுக்கலாம். அதே சமயம் தனியார் நிறுவனங்கள் மூலம் எடுப்பது என்பது ஆபத்தானது என்பதை எடுத்துரைத்தார்.
இறுதியில் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வுகாணும் வகையில் அரசு நிர்வாகம் தொழிற்சங்கங்கள் இணைந்த முத்தரப்பு பேச்சு வார்த்தை என்பது வருகிற ஆகஸ்ட் 27 அன்று நடைபெறும் என நிர்வாகங்கள் சார்பில் அறிவிக்கப்பட்டு கூட்டம் முடித்து வைக்கப்பட்டது.