காரைக்குடி, மார்ச் 4- காரைக்குடி மாவட்ட திராவிடர் தொழிலாளர் கழகக் கலந்துரையாடல் கூட்டம் கழக மாவட்டத் தலைவர் வைகறை யின் இசைக்குடில் இல்லத்தில் 3.3.2024 ஞாயிறு மாலை 5.00 மணி அளவில் மாவட்ட தி.தொ.க தலை வர் சி.சூரியமூர்த்தி தலைமையில் நடைபெற்றது. மாவட்ட தி. தொ. க செயலாளர் சொ.சேகர் வரவேற் புரை ஆற்றினார். மாவட்ட கழகப் காப்பாளர் சாமி. திராவிடமணி , மாவட்டத் தலைவர் ம.கு.வைகறை, மாவட்டத் துணைத் தலைவர் கொ.மணிவண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தி. தொ. க பேரவை மாநில தலைவர் கருப்பட்டி கா.சிவா தனது உரையில் தமிழ்நாடு பெரியார் கட்டுமானம் -அமைப்பு சாரா தொழிலாளர் நலச் சங்கத் தின் நோக்கம் குறித்தும், அதன் கிளை மாவட்டத்தில் தொடங்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். தொடர்ந்து உரையாற்றிய தி . தொ.க மாநில செயலாளர் திருச்சி மு.சேகர் அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியத்தில் யாரெல்லாம் உறுப் பினர் ஆகலாம் என்பது குறித்தும், தி.தொ.க சார்பில் ஒரு சிறப்பு முகாம் நடத்திட வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.
நிகழ்வில், காரைக்குடி நகரத் தலைவர் ந.ஜெகதீசன், கழகப் பேச் சாளர் தி.என்னரெசு பிராட்லா, ப.க மாவட்டத் தலைவர் சு.முழு மதி, ப.க.துணைப் பொதுச் செய லாளர் முனைவர் மு.சு.கண்மணி, தேவகோட்டை ஒன்றிய செயலா ளர் ஜோசப், கல்லல் ஒன்றியத் தலைவர் பலவான்குடி ஆ.சுப் பையா, குமரன்தாஸ், மாவட்ட கழக துணைச் செயலாளர் இ. ப.பழனிவேல் ஆகியோர் பங்கேற்ற னர். கல்லல் ஒன்றிய செயலாளர் கொரட்டி வீ.பாலு நன்றி கூறினார்.
கூட்டத்தில் காரைக்குடி மாவட்ட கழக செயலாளர் சி.செல்வ மணியின் சகோதரி சி.செல்வி (வயது 54) உடல் நலக் குறைவால் (3.3.2024) இயற்கை எய்தினார். அன்னாருக்கு ஆழ்ந்த இரங்க லையும், தோழருக்கு ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதெனவும், தமிழ்நாடு பெரியார் கட்டுமானம் -அமைப்பு சாரா தொழிலாளர் நலச்சங்கத்தை உருவாக்கி அதன் மூலம் அமைப்பு சாரா தொழிலா ளர் நல வாரியத்தில் உறுப்பினர்கள் சேர்த்து வாரியத்தின் மூலம் சலு கைகளை பெற்றுத் தருவது என வும்,
திராவிடர் தொழிலாளர் அணி சார்பில் கொடியேற்றுதல் பெயர் பலகை நிறுவுவதெனவும் புதிய உறுப்பினர்களை, சேர்ப்பது என வும் தீர்மானிக்கப்ட்டது.
ராமேசுவரத்தில் தொழிலாளர் அணி கலந்துரையாடல்
திராவிடர் கழக தொழிலாளரணி செயலாளர் திருச்சி. மு.சேகர், தொழிலாளர் கழகப் பேரவைத் தலைவர் கருப்பட்டி.கா.சிவா ஆகியோரது சுற்றுப்பயணத்தின் முதல் நிகழ்வு 3-3 – 2024 காலை 10 மணி அளவில் ராமேஸ்வரம் உதயா தங்குமனையில் திராவிடர் கழக தொழிலாளர் அணியின் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.
அக்கூட்டத்தில் தமிழ்நாடு பெரியார் கட்டுமானம் அமைப்பு சாரா தொழிலாளர் நல சங்கத்தில் அதிகப்படியான உறுப்பினர்களை தமிழ்நாடு அரசின் அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியத்தில் உறுப்பினர்கள் ஆக்கி தொழி லாளர் நல ஆணையத்தின் மூலம் உறுப்பினர்களுக்கு கிடைக்க வேண்டிய பலன்களை முறையாக பெற்றுத் தரவும் ஏற்கனவே, பதிவு செய்து புதுப்பிக்காத நபர்களின் உறுப்பினர் அட்டைகளை புதுப்பித்து தருவது என்றும் தீர்மானிக்கப் பட்டது. அதேபோல ராமேஸ்வரம் தங்கச்சி மடம், பாம்பன் ஆகிய பகுதிகளிலும் அமைப்பு சாரா தொழிலாளர் நல சங் கத்தை நிறுவிட ஏற்பாடு செய்வது என்றும் தீர்மானிக்கப்பட்டது.