திங்கள், 25 மார்ச், 2019
கோத்ரேஜ் திராவிடர் தொழிலாளர் நலச் சங்க கூட்டம்
கோத்ரேஜ் திராவிடர் தொழிலாளர் நலச் சங்க கூட்டம்
மறைமலைநகர், மார்ச் 24 17.2. 2-019 ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 மணி அளவில் கோத்ரேஜ் திராவிடர் தொழிலாளர் நலச் சங்க துணைச் செயலாளர் கோ. கணேஷ் அவர்கள் 41 ஆண்டுகள் பணியாற்றி 23.2.2019இல் பணி ஓய்வு பெறுவதையொட்டி கோத் ரேஜ் திராவிடர் தொழிலாளர் நலச் சங்கம் சார்பில் சங்கத் தலைவர் த.ரமேஷ் தலைமையிலும் செய லாளர் செ.ர. பார்த்தசாரதி முன் னிலையிலும் மறைமலை நகர் வள்ளுவர் மன்றத்தில் பாராட்டு நிகழ்ச்சி நடைபெற்றது.
காஞ்சிபுரம் மாவட்ட திரா விடர் கழக செயலாளர் பூ.சுந்தரம் அவர்கள் கோ.கணேஷ் அவர் களுக்கு சால்வை அணிவித்து பாராட்டினார். மறைமலைநகர் திராவிடர் கழக நகர செயலாளர் துரை. முத்து அவர்களும் கலந்து கொண்டு பாராட்டு தெரிவித்தார். சங்க பொறுப்பாளர்களும் உறுப்பினர்களும் கலந்து கொண்டு பாராட்டு தெரிவித்தனர்.
உடன் கோத்ரேஜ் திராவிடர் தொழிலாளர் நல சங்கத்தின் 2019 ஆம் ஆண்டு புதிய பொறுப்பாளர் தேர்வும் நடைபெற்றது.
புதிய பொறுப்பாளர் பட்டியல்
தலைவர் - த.ரமேஷ். செய லாளர் - செ.ர.பார்த்தசாரதி, பொரு ளாளர் - கா.நாகராஜ், துணைத் தலைவர் - கோ.குமாரி
துணைச் செயலாளர்- கோ.கணேஷ், ம.கருணாநிதி
செயற்குழு உறுப்பினர்கள் பா.இயேசுராஜா, வ.வசந்தி, து.டில்லி
துணைத்தலைவர் கோ.குமாரி நன்றி கூறினார்.
மறைமலைநகர் நூலகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலைக்கு சங்கம் சார்பாக கோ.கணேஷ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
- விடுதலை நாளேடு, 24.3.19