ஞாயிறு, 4 நவம்பர், 2018

கோத்ரேசு தொழிலாளர் சிறி.ஆண்டாள் பணி ஓய்வு

கோத்ரேசு தொழிலாளர்  சிறி.ஆண்டாள் பணி ஓய்வு பாராட்டு நிகழ்ச்சி 22.10.18 பி.ப. 3.00 மணி அளவில் கோத்ரேசு தொழிலக  வளாகத்தில் நடைபெற்றது.

1984ல் பணியில் சேர்ந்து 34 ஆண்டுகள் பணியாற்றி 23.10.2018ல் பணி நிறைவு பெறும் சிறி.ஆண்டாள் அவர்களுக்கு கோத்ரேஜ் திராவிடர் தொழிலாளர் நலச் சங்கம் சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
 கோத்ரேஜ் திராவிடர் தொழிலாளர் நலச் சங்கத் துணைத் தலைவர் கோ.குமாரி பயணாடை அணிவித்தார்.

 கோத்ரேஜ் திராவிடர் தொழிலாளர் நலச் சங்கப் பொருளாளர் க.நாகராஜ் பாராட்டு கேடயம் வழங்கினார்.

வியாழன், 18 அக்டோபர், 2018

கோத்ரேஜ் தொழிலக ஆண்டு விழா - 2018

          மறைமலை நகரிலுள்ள கோத்ரேஜ் கன்சியூமர் புராடக்டு நிறுவன ஆண்டுவிழா 17.10.18 முற்பகல் தொழிற்சாலை வளாகத்திற்குள் கொண்டாடப்பட்டது.
           தொழிலாளர்களும் அலுவலர்களும் கலந்துகொண்டனர். ஒப்பந்த தொழிலாளர்களை தவிர மற்றவர்களுக்கு அன்பளிப்புகள் வழங்கப்பட்டன.
            பணி மூப்பு பெற்ற தொழிலாளர்களுக்கு மூப்பு ஆண்டின் அடிப்படையில் அன்பளிப்பும் நினைவு கேடயமும் வழங்கப்பட்டது.

 35 ஆண்டுகள் பணிக்காக தொழிற் சங்கத் துணைத் தலைவர் கோ.குமாரி அவர்களுக்கு அன்பளிப்பு வழங்கியபோது....

தொழிற் சங்கத் துணைத் தலைவர் கோ.குமாரி அவர்களுக்கு தொழிற் சங்கத் தலைவர் த.ரமேஷ் பயனாடை அணிவித்தார்.


25 ஆண்டுகள் பணிக்காக அன்பளிப்பு பெற்ற  தொழிற் சங்கத்  தலைவர் த.ரமேஷ் அவர்களுக்கு தொழிற் சங்கச் செயலாளர் செ.ர.பார்த்தசாரதி பயனாடை அணிவித்தார்.
 20 ஆண்டுகள் பணிக்காக அன்பளிப்பு பெற்ற  தொழிற் சங்கத்  துணைச் செயலாளர்  ம.கருணாநிதி அவர்களுக்கு தொழிற் சங்கப் பொருளாளர் கா.நாகராஜ் பயனாடை அணிவித்தார்.
40 ஆண்டுகள் பணியாற்றி அடுத்த ஆண்டு தொடக்கத்தில் பணி ஓய்வு பெறவுள்ள தொழிற் சங்கத்  துணைச் செயலாளர்  கோ.கணேஷ் அவர்களுக்கு தொழிற் சங்கத் தலைவர் த.ரமேஷ் பயனாடை அணிவித்து பாராட்டினார்.
குறிப்பு:-
பத்தாண்டு தொடங்கி ஒவ்வொரு 5 ஆண்டு பணிக்கும் அன்பளிப்பு வழங்கிவரும் நிறுவனம் 40 ஆண்டுகள் பணி முடித்த முது பெரும் தொழிலாளர் கோ.கணேஷ் அவர்களுக்கு அன்பளிப்பு வழங்காதது பெரும் வருத்தத்தை அளிக்கிறது.