மறைமலைநகர், மே 15- கோத் ரேஜ் திராவிடர் தொழிலாளர் நலச்சங்க செயற்குழு உறுப் பினர் எம்.கே.சூரியகலாவதி அவர்கள் கோத்ரேஜ் கன்சியூமர் புராடக்டு நிறுவனத்தில் (மறை மலை நகர்) 34ஆண்டுகள் பணி யாற்றி 5.5.2017இல் ஓய்வு பெற் றார்.
5.5.2017 பிற்பகல் 4 மணி அளவில் தொழிற்சாலை வளா கத்தில் தொழிலாளர்கள் சார்பி லும், அலுவலர்கள் சார்பிலும் தொழிற்சாலை மேலாளர் பசுபதி அவர்கள் தலைமையில் பாராட்டு நிகழ்ச்சி நடைபெற் றது. சங்க துணைச் செயலாளர் ம.கருணாநிதி வாழ்த்து மடல் அளித்தார். சங்க செயற்குழு உறுப்பினர்கள் க.சிவகாமி, வ. வசந்தி, பா.இயேசுராஜா மற் றும் தொழிலாளர்களும் அலுவ லர்களும் பெருவாரியாக கலந்து கொண்டு சிறப்பித்தனர். கோத் ரேஜ் திராவிடர் தொழிலாளர் நலச்சங்கம் சார்பில் சால்வை அணிவிக்கப்பட்டு, அன்பளிப் புடன் பாராட்டு கேடயம் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் தொழிற் சாலை மேலாளர் பசுபதி, மனித வள அலுவலர் ஜோசப் மரியதாஸ் இராஜசோகர், சங்க தலைவர் த.ரமேஷ், துணச் செயலாளர் கோ.கணேஷ், செய லாளர் செ.ர.பார்த்தசாரதி பொரு ளாளர் க.நாகராஜ் மற்றும் துணைத் தலைவர் கோ.குமாரி ஆகியோர் பங்கேற்று சிறப்பித் தனர்.
-விடுதலை,15.5.17