கோத்ரேஜ் கன்சியூமர் புராடக்டு தொழிற்சாலையில் (மறைமலை நகர்,காஞ்சி மாவட்டம்) ஆண்டு விழா இன்று முற் பகல் 11.30மணி அளவில்(8.10.2016) நடைபெற்றது.
இசை நிகழ்ச்சியுடன் தொடங்கியது.
கோத்ரேஜ் திராவிடர் தொழிலாளர் நலச் சங்க செயற்குழு உறுப்பினர் வ.வசந்தி ஆவர்களுக்கு 35 ஆண்டு பணி நிறைவுக்காக, நிர்வாகம் சார்பாக பாராட்டு மடலும், 15கிராம் தங்க சங்கிலி பரிசாகவும் வழங்கப்பட்டது.
சங்கம் சார்பில் செயற்குழு உறுப்பினர் வ.வசந்தி அவர்களுக்கு துணைத் தலைவர் கோ.குமாரி அவர்கள் பாராட்டி சால்வை அணிவித்தார்.
கோத்ரேஜ் திராவிடர் தொழிலாளர் நலச் சங்க பொருளாளர் க.நாகராஜ் அவர்களுக்கு 20 ஆண்டு பணி நிறைவுக்காக நிர்வாகம் சார்பாக பாராட்டு மடலும்,ரூ1800/-மதிப்பிலான பரிசு பொருளும் வழங்கப்பட்டது.
சங்கம் சார்பில் பொருளாளர் க.நாகராஜ் அவர்களுக்கு துணைச் செயலாளர் கோ.கணேஷ் அவர்கள் பாராட்டி சால்வை அணிவித்தார்.
அடுத்த ஆண்டு தொடக்கத்தில் பணி ஓய்வு பெறவுள்ள வ.தேவன் அவர்களை பாராட்டி தொழிலாளர் சார்பில் சால்வை அணிவிக்கப்பட்டது.
ஆண்டு பரிசு பொருள்கள் பெறுதல்(2016)
துணைச் செயலாளர் கோ.கணேஷ்
செயற்குழு உறுப்பினர் எம்.கே.சூரியகலாவதி
துணைத் தலைவர் கோ.குமாரி
துணைச் செயலாளர் மா..கருணாநிதி
35 ஆண்டு பணி நிறைவு பாராட்டு பரிசு பெற்ற செயற்குழு உறுப்பினர் வ.வசந்தி அவர்களுடன் செயலாளர் செ.ர.பார்த்தசாரதி