புதன், 22 ஜூன், 2016

வழிபாட்டு தலங்களில் பயன்படுத்தப்படும் கூம்பு வடிவ ஒலி பெருக்கியை பறிமுதல் செய்யவேண்டும் ஐகோர்ட்டு உத்தரவு


சென்னை,
வழிபாட்டு தலங்களில் அதிக ஒலியை ஏற்படுத்தும் கூம்பு வடிவ ஒலி பெருக்கி பயன்படுத்தப்பட்டால், அவற்றை பறிமுதல் செய்யவேண்டும் என்று தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
ஒலி பெருக்கிசென்னை பெரம்பூரை சேர்ந்தவர் எஸ்.குமாரவேலு. இவர், ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், அதிக ஒலியை ஏற்படுத்தும் கூம்பு வடிவ ஒலி பெருக்கிகளை பயன்படுத்துவதை தடுக்கும் விதமாக கடந்த 2007–ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. ஆனால், இந்த உத்தரவை தமிழக போலீசார் அமல்படுத்தவில்லை, வழிபாட்டு தலங்களிலும், பொதுநிகழ்ச்சிகளிலும் இந்த கூம்பு வடிவ ஒலி பெருக்கியை அதிக அளவில் பயன்படுத்தப்படுகின்றன. இது பொதுமக்களுக்கு மிகப்பெரிய சிரமத்தை ஏற்படுத்துகிறது’ என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கை ஐகோர்ட்டு ஏற்கனவே விசாரித்து, கூம்பு வடிவ ஒலி பெருக்கியை பயன்படுத்துவோர் மீது நடவடிக்கை எடுத்து அறிக்கை தாக்கல் செய்ய போலீசாருக்கு உத்தரவிட்டிருந்தது.
எச்சரிக்கைஇந்த நிலையில், இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சய்கிஷன் கவுல், நீதிபதி ஆர்.மகாதேவன் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. பின்னர், நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:–
மசூதி பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பில் வக்கீல் அப்துல் மூபீன் ஆஜரானார். இவரை, இந்த ஐகோர்ட்டுக்கு உதவும் நபராக நியமிக்கின்றோம். மசூதி பாதுகாப்பு கூட்டமைப்பை, இந்த வழக்கில் 4–வது எதிர்மனுதாரராகவும் சேர்த்துக்கொள்கிறோம்.
கூம்பு வடிவ ஒலி பெருக்கி பயன்படுத்தக் கூடாது என்று வழிபாட்டு தலங்களை எச்சரிக்கை செய்துள்ளதாகவும், அதையும் மீறி ஒலி பெருக்கியை பயன்படுத்தியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
பறிமுதல்எனவே, இதுபோன்ற இடங்களில் நிர்ணயிக்கப்பட்ட ஒலியை விட அதிக ஒலியை ஏற்படுத்தப்பட வில்லை என்பதை 3 நாட்களுக்குள் அதிகாரிகள் உறுதி செய்யவேண்டும். 3 நாட்களுக்கு பின்னரும் யாராவது மீறி செயல்பட்டால், அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பதுடன், அந்த ஒலி பெருக்கியை பறிமுதல் செய்யவேண்டும். இந்த வழக்கு விசாரணையை ஜூலை 19–ந் தேதிக்கு தள்ளிவைக்கிறோம்.  இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
-தினத்தந்தி,22.6.16

கோத்ரேஜ் நிறுவன குட் க்னைட் வணிக அளவு


-தினத் தந்தி,9.06.16