திராவிடர் தொழிலாளர் சங்கக்கூட்டத்தில் தீர்மானம்!!
காரைக்குடி, பிப். 9- காரைக் குடி என்.ஆர்.சாமி மாளிகை கட்டடத்தில் பிப். 2ஆம் நாள் செவ்வாய் கிழமை யன்று காலை 11 மணிக்கு தலைமைச் செயற்குழு உறுப்பினர் சாமி திராவிட மணி தலைமையிலும், மாவட்டக் கழகத் தலைவர் ச.அரங்கசாமி முன்னிலை யிலும் தி.தொ.ச. மண்டலக் கூட்டம் நடந்தது.
காரைக்குடி, பிப். 9- காரைக் குடி என்.ஆர்.சாமி மாளிகை கட்டடத்தில் பிப். 2ஆம் நாள் செவ்வாய் கிழமை யன்று காலை 11 மணிக்கு தலைமைச் செயற்குழு உறுப்பினர் சாமி திராவிட மணி தலைமையிலும், மாவட்டக் கழகத் தலைவர் ச.அரங்கசாமி முன்னிலை யிலும் தி.தொ.ச. மண்டலக் கூட்டம் நடந்தது.
பேரவைத் தலைவர் அ.மோகன் பொதுச் செய லாளர் பெ.செல்வராஜ் ஆகி யோர் சிறப்புறையாற்றி னார்கள். தேவக்கோட்டை ஒன்றியத் தலைவர் கொ.மணிவண்ணன், நகர கழகச் செயலாளர் பெ.செகதீசன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இக்கூட்டத் தில் நிறைவேற் றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:
1) தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், விரைவுப் போக்குவரத்துக் கழக அனைத்துப் பேருந் துகளிலும் திருவள்ளுவர் படமும், திருக்குறளும் காணப்படாமல், அரசு விதிகளுக்கு மீறி கடவுள் படங்களும், வாசகங்களும் ஸ்டிக்கர்களாக ஒட்டப்பட் டுள்ளதை அகற்றிவிட்டு, மீண்டும் திருக்குறளும் திருவள்ளுவர் படங்கள் மட்டுமே புதிதாக பொருத் தப்பட வேண்டும்.
2) அரசுப்போக்குவரத் துக் கழக கும்பகோணம் கோட்டம் தற்போது விரிந்து மேலும் பல கிளைகள் உருவாக்கியதால் நிர்வாகம் செய்வதில் தகவல் பரிமாற்றம், நிர்வாக நிலைப்பாடு போன்றவை யில் கால விரயம் மற்றும் சிரமங்கள் இருப்பதை மாற்றி சீராக இயங்கிட கும்பகோணம் கூட் டாண்மை அலுவலகத்தில் உள்ள கரூர், திருச்சி, நாகப் பட்டணம், கும்பகோணம், புதுக்கோட்டை, காரைக் குடி மண்டலங்கள் உள் ளது. இதில் மேலும் இராம நாதபுரம் பகுதியை ஒரு புதிய மண்டலமாக்கிவிட்டு மறுபடியும் காரைக்குடி மண்டலத்தை புதிதாக கோட்ட மேலாண்மை அலுவலகமாக்க வேண்டும்.
3) காரைக்குடி மண்ட லத்திலுள்ள 68 தொழி லாளர்களிடம் வீடுகட்டும் சங்கம் சார்பில் முத்துப் பட்டி கிராமத்தில் வீட்டு மனை ஒதுக்கீடு செய்ய ரூபாய் 25 ஆயிரம் பெற்று பாண்டுபத்திரம் வழங்கியதற்கு 6 வருடமா கியும் வீட்டுமனை வழங் கப்படாமல் உள்ளதற்கு நிர்வாகம், தொழிலாளர் சங்கம் இணைந்து ஒருங் கிணைப்புக் குழு அமைத்து தீர்வு காணப்பட வேண்டும்.
4) போக்குவரத்துக்கழக ஊழியருக்கான மருத்துவ மனை காரைக்குடியில் செயல்படாமல் இருப்ப தால் தகுதியான மருத்துவர், செவிலியர், மருந்தாளுநர் களை நியமித்து மருத்துவ வசதியை ஏற்பாடு செய்க. ஊதிய ஒப்பந்தத்தில் ஏற் றுக்கொண்ட டிஎம்இ, பிஇ பட்டப்படிப்புள்ள பராமரிப்பு பணியாளர் களுக்கு ஜேஇ/ஏஇ பதவி உயர்வு வழங்கிட வேண் டும். மேலும் பல தீர்மா னங்கள் நிறை«ற்றப்பட் டன. மண்டலத் தலைவர் கோ.இராமசாமி நன்றி கூறினார்.
-விடுதலை,9.2.16