திண்டுக்கல், ஜன. 18- அரசு போக்குவரத்து கழக தொழி லாளர்களின் ஊதியம் _ பஞ்சப்படி நிலுவையை உடனடியாக வழங்க வேண்டும் என வலியுறுத்தி திராவிடர் தொழிலாளர் கழகப் பேரவை கூட்டத் தில் தீர்மானம் நிறைவேற் றப்பட்டது.
திராவிடர் தொழிலா ளர் கழகப் பேரவையின் 2016 ஆம் ஆண்டின் முதல் கூட்டம் _ அரசு போக்குவ ரத்து கழக திராவிடர் தொழிலாளர் சங்கம் திண்டுக்கல் மண்டலத்தின் பொதுக்குழு கூட்டம் 07.01.2016 அன்று மாலை 6.00 மணிக்கு திண்டுக்கல் ஒய்.எம்.ஆர்.பட்டி மீனாட்சி மன்றத்தில் வழக் குரைஞர் சுப. செகநாதன் (சங்க சட்ட ஆலோசகர், மாவட்டத் தலைவர்) தலைமையில் கடவுள் மறுப் புடன் தொடங்கப்பட்டது.
தலைவர் தனது உரை யில்:_ பேரவை பொறுப்பா ளர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். பேரவை துணைத் தலைவர் எம்.செல்வம் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார். அதனை தொடர்ந்து மத்திய சங்கத் தலைவர் ச.அங்கப்பன், பேரவை துணை பொதுச் செயலாளர் திருமங்கலம் மு.சண்முகசுந்தரம், திண் டுக்கல் கழக மாவட்ட அமைப்பாளர் கருணாநிதி ஆகியோர் வாழ்த்தி பேசி னர்.
திண்டுக்கல் மண்டல கழகத் தலைவர் இரவீர பாண்டியன் பேரவை நிர் வாகிகளுக்கு வாழ்த்துக்க ளையும், முழு ஒத்துழைப் பும், தேவையான அனைத்து உதவிகளும் செய்து கொடுப்பதாக சிறப்பான உரையாற்றினார்.
அதன் பின் திராவிடர் தொழிலாளர் கழகப் பேர வையின் பொதுச்செயலா ளர் பெ.செல்வராஜ், திண் டுக்கல் மண்டல புதிய பொறுப்பாளர்களை அறி வித்து அனைத்து கிளைக ளிலும் அறிவிப்பு பலகை மற்றும் கொடிக்கம்பம் வைக்க வேண்டும், புதிய உறுப்பினர்களை சேர்க்க வேண்டும், விடுதலை நாளி தழ் வாங்கி படிக்க வேண் டும் என கருத்துரை வழங்கி பேசினார்.
இறுதியாக பேரவை தலைவர் அ.மோகன் அவர் கள் புதிதாக பொறுப் பேற்றுள்ள மத்திய சங்க பொறுப்பாளர்களுக்கு வாழ்த்து தெரிவித்து தொழி லாளர்கள் திராவிடர் தொழிலாளர் சங்கத்தில் இணைந்து பணி செய்தால் ஒழுக்கம், நேர்மை, விட் டுக்கொடுத்து வாழ்தல், தன்னலம் பாராது பணி செய்தல், பிரதிபலனை எதிர் பாராது உழைத்தல் ஒரு நாளைக்கு குறைந்தது ஒரு மணி நேரமாவது சங்கத் திற்கு செலவு செய்தல், அதி காரிகளிடமும் மற்றும் கழகத் தலைவர்களிடமும் அணுகுமுறை எப்படி இருக்க வேண்டும் என்றும், நீங்கள் திராவிடர் தொழிற் சங்கத்தில் இருந்தால் நீங் கள் எப்படி மதிக்கப்படு வீர்கள் என்பதையும், வேறு எந்த சங்கமும் செய்யாத பல தொழிலாளர் நலன் சார்ந்த சாதனைகளை திராவிடர் தொழிலாளர் சங்கத்தின் மூலம் செய்ததை பட்டியலிட்டு பல நல்ல கருத்துக்களுடன் வாழ்த்து கூறி உரையை நிறைவு செய் தார். சங்கத்தின் துணைப் பொதுசெயலாளர் சிதம்ப ரம் (சி.அய்) நன்றி கூறினார்.
கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள்
வி.கணேசன், எம். பாண்டி, கு.ராமசாமி (பி ஆர்சி), நடராஜன், எஸ்.பால்யாண்டி, ஏ.பங்கிராஜ் அந்தோனி
திண்டுக்கல் மண்டலத் திற்கு புதிய பொறுப்பா ளர்கள்:
தலைவர் _ எஸ்.அங் கப்பன், துணைத்தலைவர் _ எம்.தமிழ்ச்செல்வன் (சிஅய்), பொதுச்செயலா ளர் _ எம்.செல்வம், துணைப் பொதுச்செயலா ளர் _ ஏ.சிதம்பரம் (சி.அய்), துணை செயலாளர்கள் _ வி.நடராஜன், ஏ.கணேசன், ஏ.பங்கிராஜ் அந்தோனி, பொருளாளர் _ பி.இரா சேந்திரன் (எச்.ஓ)
தொழிலாளர்கள் கண்டிப்பாய் விடுதலை வாங்க வேண்டும். தொழி லாளர்கள் ஊதியம் நிலுவை, பஞ்சப்படி நிலு வையை உடனடியாக வழங்க வேண்டும் என்பது உள்பட 8 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
-விடுதலை,19.1.16