திங்கள், 24 ஆகஸ்ட், 2015

பெல் வளாக ஒப்பந்த தொழிலாளர்கள் பணி நிரந்தரம்



பெல்  வளாக ஒப்பந்த தொழிலாளர்கள் பணி நிரந்தரம்
8 வாரத்திற்குள் அரசாணை வெளியிட வேண்டும்

திராவிடர் தொழிலாளர் கழகம் தொடர்ந்த வழக்கில் மத்திய தொழிலாளர் ஆணைய தீர்ப்பாயத்திற்கு நீதிபதி கர்ணன் உத்தரவு


திருச்சி, ஆக.24_- திருச்சி பெல் வளாக ஒப்பந்தத் தொழிலாளர் பணிநிரந் தரம் குறித்து 8 வாரத் திற்குள் அரசாணை வெளி யிட வேண்டுமென மத்திய தொழிலாளர் ஆணைய தீர்ப்பாயத்திற்கு  நீதிபதி கர்ணன் உத்தரவிட்டுள் ளார். 36 ஆண்டுகளாக பணியாற்றி வரும் பெல் வளாக ஒப்பந்தத் தொழி லாளர்களைப் பணிநிரந் தரம் செய்ய வலியுறுத்தி திராவிடர் தொழிலாளர் கழகம் தொடர்ந்து போராடி வருகிறது. தொடக்கத்தில் 3 ஆயிரத் திற்கும் மேற்பட்டவர்கள் ஒப்பந்த ஊழியர்களாக பணியாற்றி வந்தனர். தற்போது 1174 ஊழி யர்கள் மட்டுமே நிரந்தரம் செய்யாமல் பணி செய்து வருகின்றனர். அவர்களை பணி நிரந்தரம் செய்வது  தொடர்பாக தொடுத்த வழக்கில் ஒப்பந்த ஊழி யர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டுமென்று கடந்தாண்டு உயர்நீதி மன்ற மதுரை கிளை உத்தரவிட்ட பின்னரும், பெல் நிரு வாகம் உத் தரவை ஏற்காமல் அலைக் கழிப்பு செய்து வந்தது. இதனால் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி ஆலோசனையின் படி தொழிலாளர் ஆணையத் தில் புகார் செய்யப்பட் டது. புகாரின் அடிப் படையில் திருச்சி மத்திய துணை தொழிலாளர் ஆணையர் அலுவலகத் தில் இதுவரை 4 கட்ட பேச்சு வார்த்தையும், பாண்டிச்சேரி துணைத்  தொழிலாளர் ஆணையர் அலுவலகத்தில் நடை பெற்ற ஒரு கட்ட பேச்சு வார்த்தையிலும்  தீர்வு எட்டப்படவில்லை.
பேச்சு வார்த்தை
முதல் கட்ட பேச்சு வார்த்தை கடந்த 30.07.2014 அன்றும்,  இரண்டாம் கட்ட பேச்சு வார்த்தை  ஆக.13 ஆம் தேதியும் நடந்தது. அப் போது  பெல் வளாக ஒப் பந்த கூட்டுறவு சங்க தொழிலாளர்களுக்கும், பெல் நிருவாகத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும், அவர்களை  நிரந்தரம் செய்ய வேண் டும் என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும் கூறினர்.
நிருவாகம் மழுப்பல்
திருச்சி பெல் நிறுவ னம் போன்று ஒப்பந்த அடிப்படையில் ஒப்பந்த ஊழியர்களாக பணியாற் றியவர்களை அரித்துவார், ராணிப்பேட்டையில் உள்ள  பெல் நிருவாக மும், அதனைத் தொடர்ந்து அய்தராபாத் பெல் நிருவாகம் எப்படி பணி நிரந்தரம் செய்தது? என்ற கேள்வியை ஒப்பந்தத் தொழிலாளர் நிர்வாகத் தின் முன் வைத்தனர்.
அதற்கு நிருவாகத்தின் தரப்பில் சரியான பதில் கூறப்படவில்லை. இந்நிலையில் தொழி லாளர்ஆணையரிடம்  பெல் நிருவாகம் தனது நிலைப் பாட்டை விளக்கி ஒரு கடிதம் கொடுத்தது. அந்த கடிதத்திற்கு  பதி லளித்த பிறகு அடுத்த விசாரணைக்கான தேதியை அறிவித்து அந்த விசாரணையின் போதே இறுதிமுடிவையும் அறி விப்பதாக துணை ஆணை யர் தெரிவித்திருந்தார். அதனால் அந்த கூட்டம் அப்போது ஒத்தி வைக்கப் பட்டது. மீண்டும் அதனைத் தொடர்ந்து  11.12.2014 இல் பாண்டிசேரி மத்திய துணை தொழிலாளர் ஆணையர் அலுவலகத் தில் பேச்சு வார்த்தை நடைபெற்றது. அந்த சமரச பேச்சு வார்த்தை யிலும் உடன்பாடு ஏற் படாமல் தோல்வியடைந் தது. அது தொடர்பாக மத்திய தொழிலாளர் ஆணையச் செயலாளருக்கு கடிதம் அனுப்பப்பட்டது. அக்கடிதமும் நிராகரிக்கப் பட்டது.
வழக்கு
இதனையடுத்து ஏற் கெனவே உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தர விட்ட தீர்ப்பின் அடிப் படையிலும், பல கட்ட பேச்சு வார்த்தையில் ஒப் பந்தத் தொழிலாளர்கள் சார்பில் எடுத்து வைக்கப் பட்ட நியாயத்தின் அடிப் படையிலும்,  சென்னை உயர்நீதிமன்றத்தில் பெல் வளாக ஒப்பந்த தொழி லாளர் நலச் சங்க பொதுச் செயலாளரும், மாவட்ட திராவிடர் கழகத் தலைவ ருமான மு.சேகர் மூலம் வழக்கு தொடரப்பட்டு, விசாரணை நடைபெற்று வந்தது.  இந்த வழக்கில்  இப்பொழுது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அத்தீர்ப்பில் ஒப்பந்தத் தொழிலாளர்கள் பணி நிரந்தரம் தொடர்பான பேச்சு வார்த்தையில் பெல் நிருவாகத்திற்கும், தொழி லாளர்களுக்கும் இடையே சமரச பேச்சு தோல்வி அறிவிப்பின் அடிப்படை யில் மத்திய தொழில் மற்றும் தொழிலாளர் நீதிமன்றம் முடிவு செய் யவும், 8 வாரத்திற்குள் மத்திய தொழிலாளர் தீர்ப்பாயம் அரசாணை வெளியிட வேண்டுமென  மத்திய தொழிலாளர் ஆணையச் செயலாளருக்கு  சென்னை உயர்நீதிமன்றம் மாண்பமை நீதிபதி சி.எஸ். கர்ணன் உத்தரவிட்டுள்ளார். ஒப்பந்தத் தொழி லாளர்கள் சார்பில் வழக் குரைஞர் வீரசேகரன் நேர் நின்று வாதிட்டார்.
-விடுதலை,24.8.15

''கோத்ரேஜ் தி.தொ.ச. ஓராண்டு நிறைவு



''கோத்ரேஜ் திராவிடர் தொழிலாளர் நலச் சங்கம்'' இதே நாளில் தான் சென்ற ஆண்டு (24.8.14) ''கோத்ரேஜ் கன்சியூமர் புராடக்டு லிமிடடு'' தொழிற்சாலையில்(மறைமலை நகர்) தொடங்கப்பட்டது.

தற்போது முறைப்படி பதிவு செய்யப்பட்டு 3.8.15ல் சான்றிதழ் பெறப்பட்டது. 
பதிவு எண் - 3557/ CNI 

சனி, 15 ஆகஸ்ட், 2015

கோத்ரேஜ் தி.தொ.ச.அங்கீகாரம் கோரி விண்ணப்பம்

12.8.2015 பி.ப.2.00மணி அளவில்  'கோத்ரேஜ் திராவிடர் தொழிலாளர் நலச் சங்கம்' பதிவு செய்யப்பட்டு சான்றிதழ் பெறப்பட்டதையொட்டி 'கோத்ரேஜ் கன்சியூமர் புராடக்டு நிறுவன தொழிற்சாலை' மனிதவள அலுவலரிடம் சங்கத்தை அங்கீகரிக்கக் கோரி விண்ணப்பம் அளிக்கப்பட்டது.


ஞாயிறு, 9 ஆகஸ்ட், 2015

திராவிடர் தொழிற்சங்கப் பேரவை யில் தீர்மானங்கள்


அனைத்து போக்குவரத்து பணிமனைகளிலும் அறிவிப்புப் பலகை வைக்கப்படும
விழுப்புரம்ஆக. 9_ அனைத்து போக்குவரத்து பணிமனைகளிலும் அறி விப்புப் பலகை வைக்கப் படும் என திராவிடர் தொழிற்சங்கப் பேரவை யில் தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.
திராவிடர் தொழிற் சங்கப் பேரவையின் விழுப் புரம் சென்னை மண்டல கூட்டம் 27.7.2015 அன்று நடைபெற்றது.
கலந்து கொண்டவர்கள்
செ.வா.கோபண்ணா (தலைவர்)பெ.சக்ரவர்த்தி (பொதுச் செயலாளர்),ரா.நாகராசன் (பொருளா ளர்)ப.சுப்பராயன் (மாவட்ட தலைவர்)பெ.பெரியார் செல்வன் (இணைச் செய லாளர்)மா.இராசு (பொரு ளாளர் திராவிடர் தொ. சங்கம்)பெ.செல்வராசு (திராவிடர் தொழிலாளர் பேரவைஇணைச் செய லாளர்)கா.சிவா (மதுரை திராவிடர் தொழிலாளர் கழகப் பொதுச் செயலாளர்)
தீர்மானங்கள்
1) 
மேனாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் மேனாள் நமது பேரவைச் செயலாளர் ஆ. நாகலிங்கம் அவர்களது மறைவிற்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வது.
2) மாவட்டத் தொழி லாளர் (விழுப்புரம்) அணித் தலைவராக ராதாமணா ளன் அவர்கள் நியமனம் செய்யப்பட்டார்.
3) விழுப்புரம் தலை மையகத்தில் தொழிற்சங்க அறிவிப்புப் பலகை நிறுவு வது என முடிவு செய்யப் பட்டது.
4) நாகராசு அவர்களை மண்டலப் பொருளாள ராக நியமிக்க முடிவு செய் யப்பட்டது (விழுப்புரம்)


5) தலைவர் கோபண்ணாசெயலாளர் சக்ரவர்த்தி இருவரும் தொடர்ந்து அதே பொறுப்பில் இருப் பதாக முடிவு செய்யப் பட்டது.
ஈரோடு - கோவை மண்டலம்
28.7.2015 அன்று ஈரோடு கோவை மண்டல திராவிடர் தொழிலாளர் கலந்துரையாடல் கூட்டம்ஈரோடு பெரியார் மன்றத் தில் நடந்தது. அதில் கலந்து கொண்டவர்கள் விபரம் வருமாறு:
கு.சிற்றரசு (தி.தொ. சங்க செயலாளர்)அ.பாட் டுசாமி (பொருளாளர்),ந.சிவலிங்கம் (தலைவர் தி.தொ.சங்கம்)த.ஆனந்த ராஜ் (தி.தொ.சங்க தலை வர்,கோபி)ம.சிவக்குமார் (பொதுச் செயலாளர்கோவை மாவட்டம்)த.ச. சக்திவேல் (தி.தொ.ச. உடு மலை கிளை)ப.சத்திய மூர்த்தி (தி.தொ.ச.)க.மணி (தி.தொ.ச. தலைவர் கோவை)பெ.செல்வராசு (தி.தொ.ச.பேரவை இணைச் செயலாளர்),கா.சிவா (மதுரை மண்டல பொதுச் செயலாளர்)
தீர்மானங்கள்
1) மேனாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் மேனாள் நமது பேரவைச் செயலாளர் ஆ. நாகலிங்கம் அவர்களது மறைவிற்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வது.
2) அனைத்து போக்கு வரத்து பணிமனைகளி லும் அறிவிப்புப் பலகை வைப்பது என தீர்மானிக் கப்பட்டது.
3) தி.தொ.சங்கங்களின் செயல்பாடுகளை புதுப் பித்து செயல்படுவதென தீர்மானிக்கப்படுகிறது.
கும்பகோணம் - திருச்சி
29.7.2015 அன்று கும்ப கோணம் திருச்சிபெரி யார் மாளிகை திருச்சியில் நடந்த தி.தொ.சங்க கூட் டத்தில் கலந்து கொண்ட வர்கள்.
ஆறுமுகம் (தி.தொ.ச. செயலாளர்திருச்சி)ரா.திராவிடன் கார்த்திக் (அமைப்புச் சாரா தொ. அணி செயலாளர்திருச்சி)எஸ்.சேகர்ஜி.ராமசாமி (தி.தொ.சங்க தலைவர்காரைக்குடி)டி.கோவிந்த ராஜ் (தி.தொ.ச.துணைத் தலைவர்,காரைக்குடி)ஜி. சிவக்குமார்மு.வி.ஜெயந் திரன் (அமைப்பாளர் தி. தொ.ச.திருச்சி)விடுதலை க.கிருஷ்ணன் (பெல்)சு. சுதர்சன் (பெல்)வி.சண் முகம்பெ.செல்வராசு (மாநிலதி.தொ.ச.இணைச் செயலாளர்)க.சிவா (தி. தொ.ச. மதுரை மண்டல செயலாளர்)
தீர்மானங்கள்
1) 
மேனாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் மற்றும் மேனாள் பேரவைச் செயலாளர் அ.நாகலிங்கம் அவர்க ளின் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது.
2) நமது அமைப்புள்ள பணிமனைகளில் அறிவிப் புப் பலகை வைப்பது என தீர்மானிக்கப்படுகிறது.
3) தி.தொ.சங்க செயல் பாடுகளை புதுப்பித்து செயல்படுவது என தீர்மானிக்கப்படுகிறது.
மதுரை - திண்டுக்கல்
30.7.2015
அன்று மதுரை திண்டுக்கல்லில் நடந்த தி.தொ.சங்க கலந்துரையா டல் கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள்.
பெ.செல்வராசு (தி. தொ.ச.பேரவை இணைச் செயலாளர்)சுப.ஜெகந் நாதன் (மாவட்டத் தலை வர்திண்டுக்கல்)ரா.வீர பாண்டி (மண்டலத் தலை வர்,திண்டுக்கல்)க.சிவா (மண்டலச் செயலாளர்மதுரை)பி.இராஜேந்தி ரன் (தி.தொ.பொருளாளர்திண்டுக்கல்)அ.மாணிக் கம் (நகரச் செயலாளர்)ஏ.மோகன் (தி.தொ.ச. செயலாளர்)அ.சிதம்பரம்என்.ராமசாமிகு.ராம சாமிஎ.அழகர்சாமி,எம். செல்வம் (து.பொ.செயலா ளர்திண்டுக்கல்)பி.லாசர் (சி.அய்அரசு போ. கழகம்திண்டுக்கல்)ச.அங்கப்பன் (மண்டலத் தலைவர்தி.தொ.ச)எஸ்.ஜோசப் ஜேம்ஸ் ராஜ் (பழனிதி. தொ.ச.பொ)வி.கணேசன் (திண்டுக்கல்)
தீர்மானங்கள்
1) மேனாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் மற்றும் மேனாள் தி.தொ. சங்க செயலாளர் அ.நாக லிங்கம் ஆகியோரின் மறை விற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது.
2) திண்டுக்கல்மதுரை அனைத்து பணிமனைகளி லும் அறிவுப்புப் பலகை வைப்பது என தீர்மானிக் கப்படுகிறது.
3) சங்கத்தை புதுப் பித்து மீண்டும் செயல்பட செய்வது என தீர்மானிக் கப்படுகிறது.
மதுரை மண்டல தி. தொ.ச. பொதுச் செயலா ளராக சின்னத்தம்பி அவர் களை கழக செயலவைத் தலைவர் சு.அறிவுக்கரசு அவர்களது ஒப்புதலோடு அறிவிக்கப்படுகிறது.
மறைந்த பேரவைச் செயலாளர் அ.நாகலிங்கம் அவர்களது பெயரில் திருச்சி சர்வீஸ் ஸ்டேசன் அலுவலகத்திற்கு பெரி யார் பெருந்தொண்டர் ஆ.நாகலிங்கம் நினைவு அலுவலகம் என பெயர் சூட்டிய தமிழர் தலைவ ருக்கு இக்கூட்டம் நன்றி யையும்பாராட்டுதலையும் தெரிவித்துக்கொள்கிறது.
-விடுதலை,9.8.15

வியாழன், 6 ஆகஸ்ட், 2015

கோத்ரேஜ் கன்சியூமர் இலாபம் 39% வளர்ச்சி


-தினத் தந்தி,5.8.15

கோத்ரேஜ் கன்சியூமர் புராடக்டு நிறுவன இலாபம் 39%  வளர்ச்சி

கோத்ரேஜ் கன்சியூமர் புராடக்டு நிறுவன காலாண்டு(2015ஏப்ரல்-ஜூன்) நிகர இலாபம் 199 கோடியை எட்டியுள்ளது. இது சென்ற நிதியாண்டில்  இதே காலாண்டில்143 கோடியாக இருந்தது. ஆக நிகர இலாபம் 39% உயர்ந்துள்ளது.

புதன், 5 ஆகஸ்ட், 2015

''கோத்ரேஜ் தி. தொ. ச.'' முறைப்படி பதிவு

''கோத்ரேஜ் திராவிடர் தொழிலாளர் நலச் சங்கம்'' முறைப்படி பதிவு செய்யப்பட்டு, ஆவணங்கள் ஆய்வு செய்யப்பட்டு இன்று (5.8.2015) தொழிற் சங்க சட்டப்படி, பதிவாளர் பதிவு செய்து சான்றிதழை வழங்கினார். பதிவு எண்;- 3557/ CNI 3.8.2015