வெள்ளி, 9 ஆகஸ்ட், 2024

போக்குவரத்து தொழிற்சங்கங்கள் பேச்சுவார்த்தை

 


விடுதலை நாளேடு

சென்னை, ஜூலை 25- நேற்று (24.07.2024) மாலை 4.00 மணிக்கு சென்னை தேனாம்பேட்டை தொழிலாளர் இணை ஆணையர் அலுவலகத்தில் தொழிலாளர் இணை ஆணையர் முன்னிலையில் தொழிற்சங்கங்கள் போக்குவரத்துக் கழக நிர்வாகங்களுக்கு இடையேயான பேச்சுவார்த்தை நடைபெற்றது. திராவிடர் தொழிலாளர் பேரவை சார்பில் பேரவைத் தவைவர் கருப்பட்டி கா.சிவா கலந்துகொண்டார்.

அதில் பல்வேறு தொழிற்சங்கங்களும் பல கருத்துக்களை கூறிய நிலையில் நமது பேரவை சார்பில் பேரவை தலைவர் கருப்பட்டி சிவா அவர்கள் போக்குவரத்து கழகங்களில் தனியார் நிறுவனங்கள் மூலம் தற்காலிக பணிக்கு தொழிலாளர்களை நியமிப்பது என்பது அரசின் சமூக நீதிக் கோட்பாட்டிற்கு விரோதமானது. எனவே நிர்வாகமே கூட தினக்கூலி தொழிலாளர்களை எடுக்கலாம். அதே சமயம் தனியார் நிறுவனங்கள் மூலம் எடுப்பது என்பது ஆபத்தானது என்பதை எடுத்துரைத்தார்.
இறுதியில் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வுகாணும் வகையில் அரசு நிர்வாகம் தொழிற்சங்கங்கள் இணைந்த முத்தரப்பு பேச்சு வார்த்தை என்பது வருகிற ஆகஸ்ட் 27 அன்று நடைபெறும் என நிர்வாகங்கள் சார்பில் அறிவிக்கப்பட்டு கூட்டம் முடித்து வைக்கப்பட்டது.

சனி, 29 ஜூன், 2024

பாரத ஸ்டேட் வங்கி ஊழியர் குழு ஆசிரியரைச் சந்தித்து நன்றி தெரிவித்தனர்

 

பாரத ஸ்டேட் வங்கி ஊழியர் குழு ஆசிரியரைச் சந்தித்து நன்றி தெரிவிக்கின்றனர்.

பாரத ஸ்டேட் வங்கியிலுள்ள பார்ப்பன ஆதிக்கம் பற்றி ஆதாரப்பூர்வமான தலையங்கத்தினை ‘விடுதலை’ நாளேட்டில் வெளியிட்டு உண்மை நிலையினை மக்களுக்குத் தெரிவித்து உதவிய நமக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் பாரத ஸ்டேட் வங்கி எஸ்.சி., எஸ்.டி., ஊழியர் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் உள்ளிட்ட குழுவினர் 29.11.2004 அன்று சென்னை – பெரியார் திடலுக்கு வருகை தந்து நம்மைச் சந்தித்துவிட்டு தங்கள் மகிழ்ச்சியையும் அன்பான நன்றியினையும் தெரிவித்தனர்.

அய்யாவின் அடிச்சுவட்டில்… இயக்க வரலாறான தன் வரலாறு (334)

2024 அய்யாவின் அடிச்சுவட்டில் மார்ச் 1-15, 2024

வியாழன், 14 மார்ச், 2024

அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியத்தில் உறுப்பினர் சேர்க்கையே முதன்மை இலக்கு காரைக்குடி (கழக) மாவட்ட தி. தொ.க கலந்துரையாடல் கூட்டத்தில் தீர்மானம்

 


விடுதலை நாளேடு

காரைக்குடி, மார்ச் 4- காரைக்குடி மாவட்ட திராவிடர் தொழிலாளர் கழகக் கலந்துரையாடல் கூட்டம் கழக மாவட்டத் தலைவர் வைகறை யின் இசைக்குடில் இல்லத்தில் 3.3.2024 ஞாயிறு மாலை 5.00 மணி அளவில் மாவட்ட தி.தொ.க தலை வர் சி.சூரியமூர்த்தி தலைமையில் நடைபெற்றது. மாவட்ட தி. தொ. க செயலாளர் சொ.சேகர் வரவேற் புரை ஆற்றினார். மாவட்ட கழகப் காப்பாளர் சாமி. திராவிடமணி , மாவட்டத் தலைவர் ம.கு.வைகறை, மாவட்டத் துணைத் தலைவர் கொ.மணிவண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தி. தொ. க பேரவை மாநில தலைவர் கருப்பட்டி கா.சிவா தனது உரையில் தமிழ்நாடு பெரியார் கட்டுமானம் -அமைப்பு சாரா தொழிலாளர் நலச் சங்கத் தின் நோக்கம் குறித்தும், அதன் கிளை மாவட்டத்தில் தொடங்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். தொடர்ந்து உரையாற்றிய தி . தொ.க மாநில செயலாளர் திருச்சி மு.சேகர் அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியத்தில் யாரெல்லாம் உறுப் பினர் ஆகலாம் என்பது குறித்தும், தி.தொ.க சார்பில் ஒரு சிறப்பு முகாம் நடத்திட வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.
நிகழ்வில், காரைக்குடி நகரத் தலைவர் ந.ஜெகதீசன், கழகப் பேச் சாளர் தி.என்னரெசு பிராட்லா, ப.க மாவட்டத் தலைவர் சு.முழு மதி, ப.க.துணைப் பொதுச் செய லாளர் முனைவர் மு.சு.கண்மணி, தேவகோட்டை ஒன்றிய செயலா ளர் ஜோசப், கல்லல் ஒன்றியத் தலைவர் பலவான்குடி ஆ.சுப் பையா, குமரன்தாஸ், மாவட்ட கழக துணைச் செயலாளர் இ. ப.பழனிவேல் ஆகியோர் பங்கேற்ற னர். கல்லல் ஒன்றிய செயலாளர் கொரட்டி வீ.பாலு நன்றி கூறினார்.

கூட்டத்தில் காரைக்குடி மாவட்ட கழக செயலாளர் சி.செல்வ மணியின் சகோதரி சி.செல்வி (வயது 54) உடல் நலக் குறைவால் (3.3.2024) இயற்கை எய்தினார். அன்னாருக்கு ஆழ்ந்த இரங்க லையும், தோழருக்கு ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதெனவும், தமிழ்நாடு பெரியார் கட்டுமானம் -அமைப்பு சாரா தொழிலாளர் நலச்சங்கத்தை உருவாக்கி அதன் மூலம் அமைப்பு சாரா தொழிலா ளர் நல வாரியத்தில் உறுப்பினர்கள் சேர்த்து வாரியத்தின் மூலம் சலு கைகளை பெற்றுத் தருவது என வும்,
திராவிடர் தொழிலாளர் அணி சார்பில் கொடியேற்றுதல் பெயர் பலகை நிறுவுவதெனவும் புதிய உறுப்பினர்களை, சேர்ப்பது என வும் தீர்மானிக்கப்ட்டது.



ராமேசுவரத்தில் தொழிலாளர் அணி கலந்துரையாடல்


திராவிடர் கழக தொழிலாளரணி செயலாளர் திருச்சி. மு.சேகர், தொழிலாளர் கழகப் பேரவைத் தலைவர் கருப்பட்டி.கா.சிவா ஆகியோரது சுற்றுப்பயணத்தின் முதல் நிகழ்வு 3-3 – 2024 காலை 10 மணி அளவில் ராமேஸ்வரம் உதயா தங்குமனையில் திராவிடர் கழக தொழிலாளர் அணியின் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.
அக்கூட்டத்தில் தமிழ்நாடு பெரியார் கட்டுமானம் அமைப்பு சாரா தொழிலாளர் நல சங்கத்தில் அதிகப்படியான உறுப்பினர்களை தமிழ்நாடு அரசின் அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியத்தில் உறுப்பினர்கள் ஆக்கி தொழி லாளர் நல ஆணையத்தின் மூலம் உறுப்பினர்களுக்கு கிடைக்க வேண்டிய பலன்களை முறையாக பெற்றுத் தரவும் ஏற்கனவே, பதிவு செய்து புதுப்பிக்காத நபர்களின் உறுப்பினர் அட்டைகளை புதுப்பித்து தருவது என்றும் தீர்மானிக்கப் பட்டது. அதேபோல ராமேஸ்வரம் தங்கச்சி மடம், பாம்பன் ஆகிய பகுதிகளிலும் அமைப்பு சாரா தொழிலாளர் நல சங் கத்தை நிறுவிட ஏற்பாடு செய்வது என்றும் தீர்மானிக்கப்பட்டது.

திராவிட விவசாய தொழிலாளர் அணி கலந்துரையாடல் கழகத் துணைத் தலைவர் கருத்துரை


விடுதலை நாளேடு

நாகை, மார்ச்.4- தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் அறிவுரைக் கிணங்க திராவிட விவசாய தொழிலாளர் அணி நாகை மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் 3-.3.-2024 மாலை 6.30 மணி அளவில் கீழ்வேளூர் அனீபா திருமண மண்டபத்தில் நடைபெற்றது கழக துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன் றன் சிறப்புரையாற்றினார்.

நாகை மாவட்டம் கீழ்வேளூர்

2024 நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க தலைமையிலான “இந்தியா கூட்டணி” வேட்பாளர்களை வெற்றி பெறச்செய்ய “தெருமுழக்கம்” பெருமுழக்கமாகட்டும் கூட்டங்களை கிராமங்கள் தோறும் நடத்துவது, தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை அழைத்து கிராம பகுதிகளில் கழக கொடி ஏற்றுவிழா நிகழ்ச்சியை மிக எழுச்சியோடு நடத்துவதுஎனவும் விவசாய தொழிலாளர் அணியை புதுப் பித்து கட்டமைப்பது என முடிவு செய்யப்பட்டது.

திருவாரூர் ஒன்றியம் சோழங்கநல்லூர்

தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் அறிவுரைக்கிணங்க திராவிட விவசாய தொழிலா ளர் அணி திருவாரூர் ஒன்றிய கலந்துரையாடல் கூட்டம் 3.3.2024 காலை 10:30 மணி அளவில் சோழங்கநல்லூர் வெள்ளை மாளிகை திருமண அரங்கத்தில் நடைபெற்றது திராவிடர் கழக துணைத் தலை வர் கவிஞர் கலி.பூங்குன்றன் சிறப்புரையாற்றினார்.
2024 நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க தலைமையிலான “இந்தியா கூட்டணி” வேட்பாளர்களை வெற்றி பெறச்செய்ய “தெருமுழக்கம்” பெருமுழக்கமாகட்டும்.
கூட்டங்களை கிராமங்கள் தோறும் நடத்துவது, தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை அழைத்து கிராமப் பகுதிகளில் கழகக் கொடியேற்றுவிழா நிகழ்ச்சியை மிக எழுச்சியோடு நடத்துவதுஎன முடிவு செய்யப் பட்டது.

குடவாசல் ஒன்றியம் மஞ்சக்குடி

தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் அறிவுரைக்கிணங்க திராவிட விவசாய தொழிலா ளர் அணி குடவாசல் ஒன்றிய ஒன்றிய கலந்துரையாடல் கூட்டம் 03-03-2024 முற்பகல் 12:30 மணி அளவில் மஞ்சக்குடி சிவானந்தம் இல்லத்தில் நடை பெற்றது திராவிடர் கழக துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் சிறப்புரையாற்றினார்.
2024 நாடாளுமன்றத் தேர் தலில் தி.மு.க தலைமையிலான “இந்தியா கூட்டணி” வேட்பா ளர்களை வெற்றி பெறச்செய்ய “தெருமுழக்கம்” பெருமுழக்கமா கட்டும் கூட்டங்களை கிராமங் கள் தோறும் நடத்துவது, தமி ழர் தலைவர் ஆசிரியர் அவர் களை அழைத்து கிராமப் பகுதி களில் கழகக் கொடியேற்றுவிழா நிகழ்ச்சியை மிக எழுச்சியோடு நடத்துவதுஎன முடிவு செய்யப் பட்டது

கொரடாச்சேரி ஒன்றியம் கண்கொடுத்தவனிதம்

தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் அறிவுரைக்கிணங்க திராவிட விவசாய தொழி லாளர் அணி கொரடாச்சேரி ஒன்றிய கலந்துரையாடல் கூட் டம் 3-.3.-2024 மாலை 4.30 மணி அளவில் கண்கொடுத்தவனிதத் தில் நடைபெற்றது. கழக துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன் றன் சிறப்புரையாற்றினார்.
2024 நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க தலைமையிலான “இந்தியா கூட்டணி” வேட்பாளர்களை வெற்றி பெறச்செய்ய “தெருமுழக்கம்” பெருமுழக்கமாகட்டும் கூட் டங்களை கிராமங்கள் தோறும் நடத்துவது, தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை அழைத்து கிராமப் பகுதிகளில் கழகக் கொடியேற்றுவிழா நிகழ்ச்சியை மிக எழுச்சியோடு நடத்துவது என முடிவு செய் யப்பட்டது.

சனி, 9 மார்ச், 2024

தொழிலாளர் நலவாரிய பலன்கள் மக்களுக்கு போய்ச் சேரும் வகையில் நமது பணி அமைய வேண்டும்! (கொக்கூர் கலந்துரையாடலில்)

 


விடுதலை நாளேடு

கொக்கூர் கலந்துரையாடலில் மாநில தொழிலாளரணி செயலாளர் மு.சேகர் வேண்டுகோள்!

கொக்கூர், மார்ச் 9- தமிழ்நாடு பெரியார் கட்டுமான அமைப்பு சாரா தொழி லாளர் சங்கம் மற்றும் மயிலாடு துறை மாவட்ட திராவிடர் கழக தொழிலாளரணி கலந்துரையா டல் கூட்டம் மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் ஒன்றியம் கொக்கூர் சமுதாயக் கூடத்தில் 7.3.2024 வியாழக்கிழமை மாலை 4 மணியளவில் மாவட்ட திரா விடர் கழக தலைவர் கடவாசல் குணசேகரன் தலைமையில் குத் தாலம் ஒன்றிய தலைவர் சா.முரு கையன் முன்னிலையில் நடை பெற்றது. குத்தாலம் ஒன்றிய செய லாளர் கு.இளமாறன் வரவேற்பு ரையாற்றினார்.

மாவட்ட செயலாளர் கி.தள பதிராஜ் கலந்துரையாடல் கூட் டத்தின் நோக்கத்தினை எடுத்து ரைத்து நிகழ்ச்சியை ஒருங்கிணைத் தார். திராவிட முன்னேற்றக் கழக தோழர்கள் பிரபாகரன், கலைக் குமார், மகளிரணி தோழர் ஜே. ஷோபா, குத்தாலம் ஒன்றிய தலை வர் சா.முருகையன், தலைமைக் கழக அமைப்பாளர் குடந்தை க.குருசாமி, மற்றும் மாவட்ட தலைவர் கடவாசல் குணசேகரன் ஆகியோர் உரையாற்றியதைத் தொடர்ந்து திராவிடர் கழக மாநில தொழிலாளரணி செயலா ளர் திருச்சி மு.சேகர் கருத்துரை யாற்றினார்.
அவர் தனது உரையில் திரா விடர் கழக தொழிலாளரணியின் செயல்பாடுகளை விளக்கி அதில் தோழர்கள் பெருவாரியாக பங் கெடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். தமிழ்நாட்டில் பெரும்பாலான நல வாரியங்களை அமைத்தது முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் தான். நலவாரியங்கள் மூலம் மக்களுக்கு ஏராளமான உதவியும் சலுகை களும் வழங்கப்பட்டு வருகிறது என்று சொல்லி தொழிலாளர் நல வாரியம் மூலம் அவர்களுக்கு கிட்டும் பலன்களை விரிவாக எடுத் துரைத்து அது மக்களுக்கு போய் சேரும் வகையில் நமது பணி அமைய வேண்டும் என்றார்.

மாவட்ட விவசாய அணி செய லாளர் கு.இளஞ்செழியன் நன்றி கூறினார்.
இந்நிகழ்வில் மாவட்ட அமைப்பாளர் ஞான.வள்ளுவன், துணைச்செயலாளர் அரங்க.நாகரத்தினம், பெரியார் தொண் டர் கொக்கூர் அ.முத்தையன், மயிலாடுதுறை நகர தலைவர் சீனி.முத்து, செயலாளர் பூ.சி.காம ராஜ், ஒன்றிய தலைவர் டி.வி.இளங் கோவன், செயலாளர் அ.சாமி துரை, கொள்ளிடம் ஒன்றிய செய லாளர் பூ.பாண்டுரங்கன், குத்தா லம் ஒன்றிய துணைத்தலைவர் மு.பாலசுந்தரம், மாவட்ட பகுத்தறி வாளர் கழக செயலாளர் தங்க.செல்வராஜ், மற்றும் ஏராளமான கழக தோழர்கள், மகளிரணியினர், கொக்கூர் பகுதி தோழர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், பெரியார் பெருந் தொண்டர் கொக்கூர் கோவிந்த சாமி, மாவட்ட விவசாய அணி செயலாளர் கு.இளமாறன் வாழ்வி ணையர் இ.சாந்தி ஆகியோரின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்தும், மாவட்ட திராவிடர் கழக தொழி லாளரணியில் உறுப்பினர்களாக பெருவாரியான தோழர்களை சேர்ப்பது எனவும், தொழிலாள ரணி உறுப்பினர்கள் அனைவரை யும் நலவாரியத்தில் பதியச் செய் வது எனவும், அன்னை ஈ.வெ.ரா.மணியம்மையார் பிறந்தநாளை மார்ச் 10 ஆம் தேதி சிறப்பாக கொண்டாடுவது எனவும் தீர் மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
குத்தாலம் ஒன்றிய துணைத் தலைவர் மு.பாலசுந்தரம் ஆறுமாத விடுதலை சந்தாவினை மாநில தொழிலாளரணி செயலாளர் மு.சேகரிடம் அளித்தார்.

தாம்பரத்தில் நடைபெற்ற தொழிலாளரணி கலந்துரையாடல்

 


விடுதலை நாளேடு

தாம்பரம், மார்ச் 9- தாம்பரம் தந்தை பெரியார் பகுத்தறிவு புத்தகக் கண் காட்சி மற்றும் புத்தக நிலையத்தில் 6.3.2024 அன்று மாலை 6 மணிய ளவில் தாம்பரம், சோழிங்கநல் லூர், ஆவடி, கும்மிடிப்பூண்டி, ஆகிய மாவட்டங்களின் திராவிட தொழிலாளரணி கலந்துரையா டல் கூட்டம் நடைபெற்றது.

தொழிலாளரணி மாநில தலை வர் திருச்சி மு.சேகர் தலைமையில் முன்னிலை தலைமை கழக அமைப் பாளர் வி.பன்னீர் செல்வம்,பேரவை தலைவர் கருப்பட்டி சிவா, தாம் பரம் மாவட்ட தலைவர் ப.முத்தை யன், சோழிங்கநல்லூர் மாவட்ட தலைவர் வேலூர் பாண்டு, தாம்ப ரம் மாவட்ட செயலாளர் கோ.நாத்திகன், மாவட்ட தொழிலா ளரணி தலைவர் மா.குணசேகரன், திருவள்ளூர் மாவட்ட தொழிலா ளரணி தலைவர் கி.ஏழுமலை, ஆர்.அசோக் குமார், அ.ப.நிர்மலா, எஸ்.ஆர்.வெங்கடேஷ், சண்.சர வணன், ந.கதிரவன், தாம்பரம் மாநகர இளைஞரணி செயலாளர் ச.ச.நரேஷ் (எ)அழகிரி,தாம்பரம் நகர செயலாளர் மோகன்ராஜ், அ.கருப்பைய்யா, வெ.கதிர்வேல், நா.முருகன், சே.சந்திரசேகரன், இளங்கோவன், பெ.அனுசயா.
இந்த கூட்டத்தில் தொழிலாளி களுக்காக தமிழ் நாடு அரசு வித்திட்டுள்ள நல திட்டங்கள் பற்றியும் அதில் மக்களை எப்படி இணைத்து அவர்களை பயன்பெற செய்வது என்பதை பற்றியும் கழக தோழர்களுக்கு தலைவர் மு.சேகர் விரிவாக எடுத்துரைத்தார்கள். இந்த திட்டங்கள் குறித்தான கேள் விகளை கழக தோழர்கள் கேட்க தலைவர் சேகர் விளக்கி கூறினார்.
இக்கூட்டத்தில் தோழர்களின் பலத்த கைத் தட்டலுக்கு இடையே கீழ்க்கண்ட தீர்மானம் நிறைவேற் றப்பட்டது.

தமிழ் நாடு பெரியார் கட்டு மானம் அமைப்பு சாரா தொழிலா ளர் நலச்சங்கத்திற்கான உறுப்பி னர் சேர்க்கை மற்றும் புதுப்பித்தல் ஆகிய பணிகளை மேற்கொள்ள தாம்பரம் மாவட்ட தொழிலாள ரணி தலைவர் மா.குணசேகரனை மாவட்ட தலைவராக நியமனம் செய்ய தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. தாம்பரம் பகுதியில் உள்ள அனைத்து தொழிலாளர்களையும் உறுப்பினர் ஆக்குவது என தீர் மானம் நிறைவேற்றப்பட்டது.

மார்ச் 10 அன்னையார் பிறந்த தினத்தை சிற்ப்பாக கொண்டா டுவது என தீர்மானம் நிறைவேற் றப்பட்டது.

திங்கள், 19 ஜூன், 2023

திராவிட தொழிலாளர் அணி சார்பில் தாராபுரத்தில் நடைபெற்ற முப்பெரும் விழா மற்றும் வழக்காடு மன்றம்


 8

தாராபுரம், ஜூன்.5- ‘’அறிவுலக ஆசான்" தந்தை பெரியார் அவர்களின் 144ஆவது பிறந்த நாள், ‘’சட்ட மேதை’’ டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் அவர்களின்  132ஆவது பிறந்த நாள், ‘’முத்தமிழறிஞர்’’  டாக்டர் கலைஞர் அவர்களின் 100ஆவது ஆண்டு பிறந்த நாள் என முப்பெரும் விழாக்களை கொண்டாடும் வகை யில், திராவிட தொழிலாளர் அணியின் திருப்பூர் மாவட்ட பொருளாளரும், தாராபுரம் நகர திராவிடர் கழகத்தின் முன்னாள் செயலாளருமான ப.மணி இல்ல மண விழா மகிழ்வாக, கழக தொழிலாளர் அணி சார்பில், தாராபுரம் அண்ணா சிலை அருகில் கடந்த 28.5.2023 ஞாயிறு மாலை 7 மணியளவில் “பண்பாட்டு படை எடுப்பிற்கு பலியாகும் தமி ழன் குற்றவாளியே!" எனும் தலைப்பில் வழக்காடு மன்றம் நடைபெற்றது.

நிகழ்வில்,  திராவிடர் கழகத்தின் தாராபுரம் ஒன்றிய செயலாளர் நாத்திக சிதம்பரம் தலைமை தாங் கினார்.திராவிட தொழிலாளர் அணியின் திருப்பூர் மாவட்ட செயலாளர் மல்லிகா செல்வராஜ் அனைவரையும் வரவேற்றார்.

கழக சொற்பொழிவாளர் இரா.பெரியார் செல்வன் நடுவராக பங்கேற்று வழக்காடு மன்றத்தை துவக்கி வைத்தார்.

நிகழ்வில், “ பண்பாட்டு படை எடுப்பிற்கு பலியாகும் தமிழன் குற்றவாளியே ‘’ என்று வழக்கு தொடுத்த  கழக  சொற்பொழிவாளர் இராம. அன்பழகன் குறிப்பிட்ட தாவது :

தை முதல் நாள் தான் தமிழ புத்தாண்டு!  ஆனால் ஆரியர்களுக் கான சமஸ்கிருத ஆண்டை தமி ழன் கொண்டாடுகிறான். மதமற்ற  திராவிட இனத்தை சேர்ந்த தமி ழன், சித்திரை மாதம்  முதல் பங் குனி மாதம் வரை  மத பண்டிகை களுக்கு பொருட் செலவு செய்து முக்கியத்துவம் தருகிறான்.மணப் பெண்ணை இழிவுபடுத்தும் சமஸ் கிருத மந்திரத்தை  கூறும் பார்ப் பனர்களை அழைத்து தமிழன் திருமணம் புரிகிறான். தமிழில் பெயர் வைத்து மாபெரும் புரட் சியை உருவாக்கிய திராவிட இயக் கங்கள் உள்ள நாட்டில் இனத்தால் திராவிடனான தமிழன்  ஆரிய  மொழியான சமஸ்கிருதத்தில் பெயர்களை சூட்டுகிறான். ஆகவே  பண்பாட்டு படை  எடுப்பிற்கு பலியாகும் தமிழன் குற்றவாளியே! என்றார்.

பண்பாட்டு படை  எடுப்பிற்கு பலியாகும் தமிழன் குற்றவாளி அல்ல ! என்று வழக்கை மறுத்து, கழக சொற்பொழிவாளர்

வழக்குரைஞர் பா.மணியம்மை பேசியதாவது ; 

வேதம்,கடவுள்,மதம், ஜாதி உள்ளிட்ட மூடநம்பிக்கைகளை விதைத்த  பார்ப்பனர்களே குற்ற வாளி! பலியாகிய தமிழன் அப் பாவி! தமிழனை சிந்திக்க வைத் தால்  சரியான பாதையில்  செல் வான். பண்பாட்டு படையெடுப் புக்கு மூல காரணமான பார்ப்பன சனாதனத்தை பரப்பும் ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட சங் பரிவார் அமைப்புகளே குற்றவாளி! தமி ழன் குற்றவாளியல்ல! என்றார்.

நடுவர் உரை

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நடுவர் இரா.பெரியார் செல்வன் தீர்ப்பு அடங்கிய தமது உரையில் தெரிவித்ததாவது ;-

நாடாளுமன்றமா? நாடாளு மன்ற  மடமா ? என்று எண்ணுகின்ற அளவுக்கு மதச் சடங்குகளை முன்னிறுத்தி சனாதனவாதியான சவார்க்கர் பிறந்த நாளான 28.5.2023 அன்று நாடாளுமன்ற புதிய கட்டடம் திறக்கப்பட்டுள் ளது.

நாடாளுமன்றத்தை இந்துத்வா கோட்டையாக மாற்றவேண்டும் என்பதுதான் பிரதம அமைச்சரின் நோக்கமாக இருக்கிறது. ஜனநாயக ஆட்சியை அகற்றி மீண்டும் மன்ன ராட்சியை ஏற்படுத்த பல்வேறு வடிவங்களில் சங்பரிவார் அமைப் புகள் வன்முறை வெறியாட்டங் களை நடத்திக் கொண்டும், நாட்டை கூறுபோட திட்டம் வகுத்துக் கொண்டும் இருக்கின்ற சூழ்நிலையில் நாடு இருக்கிறது. இந்த நாடு காப்பாற்றப் பட வேண்டும்.

பண்பாட்டுப் படையெடுப்பு களான மதம்,ஜாதி உள்ளிட்ட மூடநம்பிக்கைகளால் ஏற்படும் வன்முறை வெறியாட்டங்களை தடுப்பதற்கு  தான் மக்கள் மன்றத் தில் திராவிடர் கழகம் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தி வருகிறது.

தந்தை பெரியார் அவர்கள் ஒரு கூட்டத்தில் பேசிக் கொண்டிருக் கிருந்த போது மலத்தை அள்ளி வீசினார்கள்!

தந்தை பெரியார் அவர்கள் மலத்தை அள்ளி வீசியவர்கள்மீது கோபப்படவில்லை!  மலம் என்று தெரிந்தும் என் தமிழன் அதில் கை வைக்கிறானே  என்று சொன்னார்.

தந்தை பெரியார் அவர்கள் எப்போதும் தமிழனை எதிரியாக பார்த்தது இல்லை! மதவெறிக்கு எதிராக அரசியலை கடந்து தந்தை பெரியாரை தலைவராக ஏற்றுக் கொண்டு, மக்கள் நேசிக்கும் மாநிலம் தமிழ்நாடு! மொழிப் போராட்டத்தில்  உயிரையே  கொடுத்தவன் தமிழன்! 

தமிழன்  மதம்,ஜாதி போன்ற பண்பாட்டு படையெடுப்புகளுக்கு பலியானாலும், இனம், மொழி, உரிமை என்று வரும்போது  ஒன்று படுகிறான். சுயமரியாதை, அமை திப் பூங்கா இவ்விரண்டும் தமிழ் நாட்டின் தனித்தன்மைகள்! 

சமஸ்கிருத பெயர்களை தமிழ்ப் பெயர்களாக மாற்றும்  திராவிட இயக்கத்தின் சிந்தனை பண்பாட்டு படையெடுப்பை முறியடித்தது. இந்திய அரசியலை தமிழ்நாடு தான் இயக்குகிறது. சர்வாதிகாரி ஹிட்வருக்கு  எப்படி  ரஷ்ய அதிபர் ஸ்டாலின் முடிவுரை எழுதி னாரோ, அதைப் போன்று வருகின்ற 2024 இல் மோடிக்கு, முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் முடிவுரை எழுதுவார்.தமிழர்களே ஒன்றுபடுக! 

தீர்ப்பு

பண்பாட்டு படையெடுப்பு களுக்கு பலியாகும் தமிழன் குற்ற வாளி அல்ல! தமிழன் சீர்திருத்தப் பட வேண்டியவன்! 

தமிழனின் பண்பாடுகளை சிதைக்கும்  வகையில் ஆரிய பண் பாட்டுப் படையெடுப்பை நிகழ்த் திய பார்ப்பனர்களே குற்றவாளி! மதவெறியாட்டங்களை நிகழ்த்தும் ஆர்.எஸ்.எஸ் உள் ளிட்ட சங்பரிவார் அமைப்பு கள் தடை செய்யப்பட வேண்டும் என்று தெரிவித்தார்.

இந்நிகழ்வில், தாராபுரம் கழக மாவட்ட தலைவர் கணியூர் க.கிருட்டிணன்,செயலாளர் “உடுமலை" வழக்குரைஞர்   ஜெ.தம்பி பிரபாகரன், திராவிட தொழிலாளர் அணியின் திருப்பூர் மாவட்ட தலைவர் அ .அழகப்பன், பொருளாளர் ப.மணி, தாராபுரம் கழக மாவட்ட மகளிர் பாசறை தலைவர் சி.ராதா பெரியார் நேசன், தாராபுரம் கழக மாவட்ட அமைப்பாளர் கே.என்.புள்ளி யான், தாராபுரம் நகர துணை செயலாளர் மு.சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

“பெரியார் பிஞ்சு “  சி.ரா.யாழ் மதிவதனி  துவக்க உரையாற்றினார். திராவிடர் கழக தோழர்கள் வழக்குரைஞர் முருகேசன், வழக் குரைஞர் தி.செல்வராஜ், உமா புள்ளியான், மா.பழனிச்சாமி, ராசு, சேகர், வே.மாரியப்பன், செ.முத்துக் கிருஷ்ணன்,ம.தங்கவேல்,ச.மணி கண்டன் மற்றும் பகுத்தறிவாளர் கழக தோழர்கள் மதி பெரியார் நேசன், மு.மாரிமுத்து, பு.முரு கேசன், சு.திராவிடன், கா.வெள்ளி, எம்.ஏ.ஜெய்லானி, தமிழ்நாடு அரசு ஆதிதிராவிடர் நலக்குழு உறுப்பினர் க.வி.சிவசங்கர் (திமுக) உள்ளிட்ட பெருவாரியான தோழர்கள் பங்கேற்றனர்.

இந்த வழக்காடு மன்றம் வெகு மக்களிடையே  பகுத்தறிவுச் சிந்த னையை தோற்றுவித்தது என்று சொன்னால் அது மிகையாகாது! நிகழ்வின் நிறைவாக கழக பொதுக் குழு உறுப்பினர் “தையற் கலைஞர்”  க.சண்முகம் நன்றி கூறினார்.